மேலும் செய்திகள்
தி.மு.க., பொதுக்குழு உறுப்பினர் இன்ஸ்பெக்டரிடம் மனு
1 hour(s) ago
சபரிமலை: மண்டல கால பூஜைகளுக்காக சபரிமலை நடை இன்று மாலை திறக்கப்படுகிறது. நாளை அதிகாலை இந்த ஆண்டுக்கான மண்டல காலம் தொடங்குகிறது. சபரிமலையில் இன்று மாலை 5:00 மணிக்கு மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றிய பின்னர் 18 படிகள் வழியாக வந்து ஆழிகுண்டத்தில் நெருப்பு வளர்த்து, பின்னர் புதிய மேல் சாந்திகளான சபரிமலை - பிரசாத் நம்பூதிரி, மாளிகைபுறம் - மனு ஆகியோரை சன்னி தானம் முன் அழைத்து வருவார். தொடர்ந்து தந்திரி மகேஷ் மோகனரரு இருவருக்கும் அபிஷேகம் செய்து மூலமந்திரம் சொல்லிக் கொடுத்து முறைப்படி அவர்களை மேல் சாந்திகளாக பதவியேற்க செய்வார். இன்று இரவு 11:00 மணிக்கு நடை அடைக்கப்படும். நாளை அதிகாலை 3:00 மணிக்கு புதிய மேல்சாந்தி பிரசாத் நம்பூதிரி நடை திறந்து சன்னிதானத்திற்கும் தீபம் ஏற்றியதும் இந்த ஆண்டுக்கான மண்டல காலம் தொடங்கும். தொடர்ந்து 41 நாட்கள் பூஜைகள் நடைபெற உள்ளது. அனைத்து நாட்களிலும் மதியம் களபாபிஷேகம், கலசாபிஷேகம் உண்டு. பக்தர்கள் படியேறுவதை ஒன்றரை மணி நேரம் நிறுத்தி வைக்க வேண்டும் என்பதால், மண்டல காலத்தில் படி பூஜை கிடையாது. எல்லா நாட்களிலும் அதிகாலை 3:00 மணிக்கு நடை திறந்து மதியம் ஒரு மணி வரையிலும், மதியம் 3:00 மணிக்கு நடை திறந்து இரவு 11:00 மணி வரையிலும் பக்தர்கள் தரிசனம் செய்யலாம். ஆன்லைன் முன்பதிவு செய்ய முடியாதவர்கள் நிலக்கல்லில் ஸ்பாட் புக்கிங் மூலம் தரிசனத்திற்கு வர முடியும். மண்டல காலத்துக்கு திரண்டு வரும் பக்தர்களை வரவேற்க சபரிமலை தயாராகி விட்டது. குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட வசதிகள் செய்து முடிக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக அன்னதானம் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நேற்று மதியம் 3:00 மணிக்கு சபரிமலையில் பலத்த மழை பெய்தது. இதனால் இங்கு நடைபெற்று வரும் பணிகள் சிறிது பாதிக்கப்பட்டது.
1 hour(s) ago