உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காங்கிரசில் தலைமுறை மாற்றம்: சச்சின் பைலட் தகவல்

காங்கிரசில் தலைமுறை மாற்றம்: சச்சின் பைலட் தகவல்

புதுடில்லி: காங்கிரஸ் கட்சிக்குள் தலைமுறை மாற்றம் நடந்து வருவதாக, கட்சியின் பொதுச்செயலர் சச்சின் பைலட் தெரிவித்தார்.காங்கிரஸ் தொடர்ந்து மூன்று லோக்சபா தேர்தல்களில் தோல்வியடைந்து, 10 ஆண்டுகளுக்கும் மேல் மத்தியில் ஆட்சி அதிகாரத்தை பறிகொடுத்து நிற்கிறது. இதனால், கட்சியை வலுப்படுத்தும் முயற்சியில் காங்., மேலிடம் ஈடுபட்டுள்ளது. கடந்த வாரம் டில்லியில், கட்சியின் மாவட்ட தலைவர்கள் கூட்டம் நடந்தது. அதைத் தொடர்ந்து, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டம், குஜராத்தின் ஆமதாபாதில் நாளை மறுநாள் நடைபெறுகிறது. இதில், காங்., நிர்வாகிகள் 1,700 பேர் பங்கேற்கின்றனர்.இது குறித்து கட்சியின் பொதுச்செயலர் சச்சின் பைலட் நேற்று கூறியதாவது:கடந்த லோக்சபா தேர்தலிலும், அதற்கு பிறகு நடந்த சில மாநில சட்டசபை தேர்தல்களிலும் ஏற்பட்ட தோல்விகள், காங்.,கின் உறுதியையோ, போராடுவதற்கான வீரியத்தையோ குறைக்கவில்லை. கட்சிக்குள் தலைமுறை மாற்றம் என்பதை ஓர் இரவுக்குள் நிகழ்த்த முடியாது. எனினும், கட்சியில் தலைமுறை மாற்றம் நடந்து வருகிறது. உணர்வுப்பூர்வமான பிரச்னைகளை பா.ஜ., எழுப்பும் சூழலில், ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக பார்லிமென்டில் காங்., செயல்படுகிறது. இளைஞர்கள், பெண்கள், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சிறுபான்மையினர் ஆகியோரால் கட்சி வலுப்படுத்தப்படும். கட்சி நலனை கருதி மகளிர் அணி, தொழிலாளர் அணி, இளைஞர் அணி, தொண்டர் அணி போன்றவற்றை வலுப்படுத்த ராகுல், பிரியங்கா, மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். குஜராத் மீது கூடுதல் கவனத்தை செலுத்த ராகுல் முடிவு செய்துள்ளார். அங்கு கட்சி வலுவாக இருக்கிறது. அதனால் தான், நீண்ட காலத்துக்கு பின், கட்சியின் அகில இந்திய கூட்டம் அங்கு நடைபெறுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Murthy
ஏப் 07, 2025 12:40

வாரிசு அரசியலுக்கு இன்னொரு பெயர் தலைமுறை மாற்றமா ??.... இவரே வாரிசு வழியில் வந்தவர்தான் . ...


lana
ஏப் 07, 2025 11:06

எத்தனை மாற்றம் வந்தாலும் நீங்க அடிமை தானே. தலைமை பப்பு பப்பி மா குடும்பம் தானே. பிறகு என்ன புடலங்காய் மாற்றம். பேசாமல் நீங்கள் தனி கட்சி ஆரம்பித்து வெற்றி பெற வாழ்த்துக்கள்


V Venkatachalam
ஏப் 07, 2025 10:40

ஹையா.. நானும் இருக்கேன்.. நானும் இருக்கேன்.. என் கட்சியும் இருக்கு. கட்சியும் இருக்கு..ஆமா உண்மையா உழைச்சு முன்னுக்கு வந்த மல்லிகா கார்கே எங்கே?


nv
ஏப் 07, 2025 09:33

முதலில் இருக்குற தலைமுறையினருக்கு முழுக்கு போடுங்க.. எல்லாம் சரியாகும்


Nagarajan D
ஏப் 07, 2025 09:19

எல்லாம் சரி அந்த இத்துப்போன காந்தி குடும்பம் தான முதலாளி அப்ப நீங்க விளங்க வாய்ப்பே இல்லை


பேசும் தமிழன்
ஏப் 07, 2025 08:48

கான் கிராஸ் கட்சியின் தலைமை பொறுப்புக்கு.... இத்தாலி போலி காந்தி கும்பல்.... பப்பு.... ஆண்டனியோ மைனோ... மற்றும் எடுபிடி கார்கே போன்ற ஆட்களை விரட்டி அடித்து விட்டு... சச்சின் பைலட் போன்ற இளம் தலைவரிடம் கட்சியை ஒப்படைத்தால்... கட்சி உருப்பட வாய்புள்ளது.... இல்லையேல்... கான் கிராஸ் கட்சி கதி அதோ கதி தான்.


மீனவ நண்பன்
ஏப் 07, 2025 06:53

ராஜஸ்தானில் அசோக் கெஹலோட் சச்சினுக்கு தண்ணி காட்டுவார் ..சித்தராமையா சிவகுமாருக்கு தண்ணி காட்டுவார் ..ஹூடா சைலஜாவுக்கு தண்ணி காட்டுவார் ...சோனியா ராகுல் பிரியங்கா தாண்டி ராபர்ட் வதேரா தலைவராவதே கஷ்டம்


RAJ
ஏப் 07, 2025 06:22

காலம் கடந்த முயற்சி. .. ஆன தமபிடிக்கு பிரயோஜனம் இல்லை..


ராமகிருஷ்ணன்
ஏப் 07, 2025 05:59

காங்கிரஸ் புதைகுழியில் தலை மட்டும் வெளியே தெரிகிற அளவுக்கு போய்விட்டது, இன்னும் கொஞ்ச நாளில் முழுவதும் புதைந்து விடும், அதற்கு முழு காரணம் அண்ணன் ராவுலு தான்.


ராமகிருஷ்ணன்
ஏப் 07, 2025 05:43

காங்கிரஸ் புதைகுழியில் தலை மட்டும் வெளியே தெரிகிற அளவுக்கு போய்விட்டது, இன்னும் கொஞ்ச நாளில் முழுவதும் புதைந்து விடும், அதற்கு முழு காரணம் அண்ணன் ராவுலு தான்.


சமீபத்திய செய்தி