உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சதானந்த கவுடா காலில் விழுந்து மத்திய அமைச்சர் ஷோபா ஆசி

சதானந்த கவுடா காலில் விழுந்து மத்திய அமைச்சர் ஷோபா ஆசி

பெங்களூரு,- பெங்களூரு வடக்கு தொகுதி பா.ஜ., வேட்பாளரான, மத்திய இணை அமைச்சர் ஷோபா, மூத்த தலைவர் சதானந்த கவுடா காலில் விழுந்து ஆசி பெற்றார்.லோக்சபா தேர்தலில் பெங்களூரு வடக்கு தொகுதியில், மூன்றாவது முறையாக போட்டியிட, முன்னாள் முதல்வர் சதானந்த கவுடாவுக்கு, பா.ஜ., வாய்ப்பு மறுத்தது. அந்த தொகுதியின் வேட்பாளராக, மத்திய இணை அமைச்சர் ஷோபா அறிவிக்கப்பட்டு உள்ளார்.இந்நிலையில் நேற்று காலை பெங்களூரில் உள்ள சதானந்த கவுடா வீட்டிற்கு, ஷோபா சென்றார். அவர் காலில் விழுந்து ஆசி பெற்றார்.பின்னர் அவர் அளித்த பேட்டி:உடுப்பி - சிக்கமகளூரு தொகுதியில், எனக்கு எதிராக சிலர் செயல்பட்டனர். 10 ஆண்டுகள் அங்கு வளர்ச்சி பணிகள் செய்து உள்ளேன். ஆனால் அதை மறந்து என்னை எதிர்த்தனர். அவர்கள் நினைத்தது எதுவும் நடக்கவில்லை. கட்சிக்கு எதிராக செயல்படுபவர்களுக்கு 'சீட்' கிடைக்காது என்பது நிரூபணம் ஆகியுள்ளது. கட்சியை அவமதித்தவர்களை மூத்த தலைவர்கள் விடுவது இல்லை.பெங்களூரு வடக்கு தொகுதி, சீட் கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது. அனைவரின் ஆசிர்வாதமும் எனக்கு உள்ளது. என் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. கட்சி கொடுத்த அனைத்து பொறுப்புகளையும், திறம்பட நிறைவேற்றி உளளேன். எங்கள் கட்சியின் மூத்த தலைவர் சதானந்த கவுடாவிடம் ஆசி பெற்று உள்ளேன்; எனது வெற்றி உறுதி.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை