உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தூக்கம் கண்களை தழுவியது! சயீப் அலிகான் பாதுகாவலர்கள் அசட்டையால் புகுந்த கொள்ளையன்; போலீசார் விசாரணையில் திடுக்

தூக்கம் கண்களை தழுவியது! சயீப் அலிகான் பாதுகாவலர்கள் அசட்டையால் புகுந்த கொள்ளையன்; போலீசார் விசாரணையில் திடுக்

மும்பை: பாலிவுட் நடிகர் சயீப் அலிகான் வீட்டுக்குள் கொள்ளையன் புகுந்தபோது, பாதுகாப்பு பணியில் இருந்த இருவர் தூங்கி கொண்டிருந்தனர் என்பது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.மஹாராஷ்டிராவின் மும்பையில் உள்ள பாந்த்ராவில், 'சத்குரு ஷரண்' என்ற அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இங்கு பாலிவுட் நடிகர் சயீப் அலிகான், 54, வசித்து வருகிறார். நடிகர் சயீப் அலிகான் வீட்டுக்குள், கடந்த 16ம் தேதி அதிகாலை மர்ம நபர் புகுந்தார். சயீப் அலிகான் அவரை பிடிக்க முயன்ற போது கத்தியால் குத்தினார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=k9mzbfy9&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதில் படுகாயம் அடைந்த அவர், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஐந்து நாள் சிகிச்சைக்கு பின் சயீப் நேற்று நலமுடன் வீடு திரும்பினார். இதற்கிடையே சயீபை கத்தியால் குத்திவிட்டு தப்பிய நபரை, கடந்த 19ம் தேதி மும்பை போலீசார் கைது செய்தனர். அவரின் பெயர் ஷரிபுல் இஸ்லாம் முகமது அமின் பக்கீர், 30, என்பதும், வங்கதேசத்தை சேர்ந்தவர் என்பதும் தெரிந்தது. அவரிடம் இருந்த மொபைல் போனையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.இது குறித்து போலீசார் கூறியதாவது:சி.சி.டி.வி., கேமராக்கள் எதுவும் பொருத்தப்படாத பிரதான நுழைவாயில் வழியாக, நடிகர் சயீப் அலிகான் மீது தாக்குதல் நடத்திய, ஷரிபுல் இஸ்லாம் ஷெஹ்சாத் (30) வீட்டிற்குள் நுழைந்துள்ளான். அப்போது வீட்டிற்கு வெளியே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த, இருவரும் தூங்கிக் கொண்டிருந்தனர். ஒருவர் கேபினிலும், மற்றொருவர் கேட் அருகிலும் தூங்கி உள்ளனர். இதனை கண்டு எல்லைச் சுவரைத் தாண்டி, கொள்ளையன் உள்ளே நுழைந்து இருக்கிறான். தனது காலணிகளை அகற்றி, சத்தம் வராமல் இருக்க பையில் வைத்திருந்துள்ளான். தனது மொபைல் போனையும் ஆப் செய்து வைத்திருந்திருக்கிறான். சில இடங்களில் சி.சி.டி.வி., கேமராக்கள் எதுவும் பொருத்தப்படவில்லை. இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

என்றும் இந்தியன்
ஜன 22, 2025 16:50

இதன் ஆய்வு ஒன்று எனக்கு வாட்சப்பில் வந்தது .......பாலிவுட் நாடகம், மீடியாவில் நான் படித்த முக்கிய குறிப்புகள் மற்றும் வார்த்தைகளை அடிப்படையாகக் கொண்ட எனது விசாரணை. 1-5000 கோடி சொத்து மதிப்புள்ள ஒருவரைக் கொல்ல ஊடுருவியவர் உள்ளே நுழைந்தார், ஆனால் எந்த சிசிடிவி அல்லது காவலரும் அவரைப் பிடிக்கவில்லை அல்லது அவரைப் பார்க்கவில்லை. 2-கத்தி உடைந்தது, ஊடுருவியவர் சமையலறை கத்தியைக் கொண்டு வந்தாரா??? 3-தாக்குதலுக்குப் பிறகு, அவர் தனது 23 வயது மகனை தொலைபேசியில் அழைத்தார், அவரது மனைவி அல்ல, ஏனெனில் அவர் பென்ட்ஹவுஸில் ஒரு விருந்தில் இருந்தார். 4-மகன் தனது இரத்தப்போக்கு தந்தையை லிஃப்ட் மூலம் அழைத்து வந்தார், ஆனால் வாழ்க்கையில் இரத்த அழுத்தம் இல்லை. 5-இன்னும் எந்த சிசிடிவியும் அதைப் பார்க்கவில்லை, பாதுகாப்புக் காவலரும் இல்லை. 6-பைய்யனுக்கு , ஆம்புலன்ஸை அழைப்பது அல்லது காரை ஓட்டுவது எப்படி என்று தெரியவில்லை, ஆனால் ஆட்டோவை அழைத்தார். 7.இரத்தப்போக்கு கொண்ட தந்தை ஆனால் ஆட்டோவில் இரத்த சொட்டு இல்லை. 8.மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு, மகன் தனது தாயிடம் சொல்ல நல்ல நேரம் ,எடுத்துக்கொண்டார், அவள் அங்கு செல்ல 2 மணிநேரம் ஆனது. குடிபோதையில் இருக்கலாம், நேராக நிற்க நேரம் தேவைப்படலாம். 9.பாதிக்கப்பட்டவர் பல விவகாரங்கள் மற்றும் ஒரு மனைவியுடன் அனுபவம் வாய்ந்த பெண் வெறியர். அதுதான் அவரது குணம். வழக்கம் போல் ஒரு கெட்டுப்போன நவாப். 10.அவர்களின் மனைவி ஒரு விருந்தில் மும்முரமாக இருந்தார், அவர் மறு தளத்தில் இளம் பணிப்பெண்ணுடன் மும்முரமாக இருந்தார். 11.வீட்டில் இருந்த பணிப்பெண்ணின் காதலன் 18+ வயதுடைய செயலைப் பிடித்தார். சமையலறை கத்தியை எடுத்து தாக்கினார். கத்தி உடைந்து, விலா எலும்புகளில் அடித்தது. 12.பணிப்பெண் அவரை ஒரு ஆட்டோவில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அவரது மனைவிக்குத் தகவல் கொடுத்தார், ஆனால் அவர் குடிபோதையில் இருந்ததால், தொலைபேசியில் பதிலளிக்க முடியவில்லை. 13.மறுநாள் பணிப்பெண் காவல் நிலையத்திற்குச் சென்று தனது காதலனைக் காப்பாற்ற பாலிவுட் கதையைச் சொன்னார் 14.லிஃப்ட் மற்றும் ஆட்டோவில் ஏன் இரத்த அழுத்தம் இல்லை, அவர் அணிந்திருந்த சட்டையில் காயம் இருக்கும் அதே இடத்தில் ஒரு துளை இருந்தால் இந்தப் புதிரைத் தீர்க்க முடியும்.


jayvee
ஜன 22, 2025 13:31

இருவரில் ஒருவர் தூங்கும்போது இன்னொருவர் முழிகொண்டிருந்தால் சரி .. பஸ் கார் மற்றும் ட்ரெயின் ஓட்டுனர்களின் நிலைமையை நினைத்துப்பாருங்கள்.. அதுவும் பெரும்பாலான லாரிகளில் ஒரே டிரைவர் தான் வண்டி ஓட்டுவார் .. இப்படி இருக்க உட்கார்ந்து கொண்டு வேலை பார்ப்பதில் சுகத்தை அதுவும் இரவு நேர டூட்டியில் தூங்குவது எப்படி சரியாகும்


தர்மராஜ் தங்கரத்தினம்
ஜன 22, 2025 12:33

நைட் வாட்ச்மேன் வேலை... நினைச்சு பாருங்க கொடூரமானது ..... நைட் ட்யூட்டி பார்த்துட்டு வீட்டுக்கு போனா அங்கே டே ட்யூட்டி பார்த்தே ஆகணும்.. வீட்டுக்குத் தேவையான சாமான் வாங்கிப் போடணும் ங்கிற அர்த்தத்துல சொன்னேன் .....


Perumal Pillai
ஜன 22, 2025 11:42

எல்லாம் கடைஞ்சியெடுத்த பொய் . தைமூர் தகப்பன் எதையோ மறைக்கிறான் .


Ramesh Trichy
ஜன 22, 2025 10:17

இவ்ளவு பெரிய விட்டில் cameras யில்லையாம் . கதை ...


Aravind
ஜன 22, 2025 09:44

திரையுலக நக்ஷத்திர பிரபலமான சையிப் அலிகான் அவர்கள் பங்களாதேசத்தை சேர்ந்த கொள்ளையன் அவர் வீட்டிற்குள் சென்ற போது அந்த கொள்ளையன் சையிப் அலிகானை கத்தியால் குத்தியது மிகவும் வருத்தமாக இருக்கிறது. அந்த பங்களாதேஷ்சை சேர்ந்தவன், அந்த பிரபலமான நடிகர் வீட்டில் பல நாட்கள் நோட்டமிட்டு, அசந்த நேரத்தில் சென்றுள்ளதை மிக சாதாரணமாக விட்டுவிட கூடாது. பங்களாதேஷ்சை சேர்ந்தவர்களை ஏன் மும்பை போலீஸ் கண்கானித்து கைது செய்யவில்லை. சையிப் அலிகான் வீட்டிற்குள் சென்ற கொள்ளையனை துரிதமாக செயல்பட்டு கைது செய்த போலீஸ் இதுவே ஒரு சாமான்யனின் வீட்டில் நடந்திருந்தால் இதே போன்ற உடனடியான நடவடிக்கை எடுத்திருப்பார்களா என்பது ஒரு கேள்விக்குறி தான்?


Ganesh Subbarao
ஜன 22, 2025 11:29

வேங்கைவயலில் நடந்ததயே இன்னும் கண்டுபிடிக்கல. மும்பை போலீசை குத்தம் கண்டுபிடிக்க வந்துட்டானுவோ


Barakat Ali
ஜன 22, 2025 09:27

சின்னப்புள்ளைங்களுக்கு சயீஃப் கதை சொல்றாப்படி ......


Svs Yaadum oore
ஜன 22, 2025 09:22

இதெல்லாம் உண்மை செய்தி என்று நம்பறவன் மேல் மாடி காலியாக இருக்கும் ......இன்றுவரை மும்பை துறைமுகம் மாபியா பிடியில்...மும்பை போலீஸ் மாபியா மஸ்டர் ரோலில் .....மாதா மாதம் போலீசுக்கு படி அளக்கிறார்கள் ...மும்பை சினிமா முழுக்க மாபியா பணம் கள்ள பணம் கறுப்பு பணம் போதை மருந்து .....வோட்டு போடும் மக்கள் திருந்தாமல் இந்த நாடு திருந்தாது ....


Padmasridharan
ஜன 22, 2025 09:19

எல்லா இடத்துலயும் இப்படித்தான் சாமியோவ். "சம்பளம் வாங்கற பாதுகாவலர்கள்", சில தெரு நாய்களுக்கு சாப்பிடறதுக்கு ஏதாவது கொடுத்துட்டு இவங்களுக்கு கொடுத்த வேலைய நாய்களுக்கு கொடுத்துட்டு "தூங்க போயிடுறாங்க"


vishal
ஜன 22, 2025 09:17

ok


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை