உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கணவனை பிரிந்தார் பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவால்

கணவனை பிரிந்தார் பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவால்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஹைதராபாத்: இந்திய பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவால், தனது கணவன் பாருபள்ளி காஷ்யப்பை விட்டு பிரிவதாக அறிவித்தார். இதன்மூலம் 7 ஆண்டு திருமண பந்தம் முடிவுக்கு வந்தது. ஹைதராபாத்தில் உள்ள புல்லேலா கோபிசந்த் அகாடமியில் பயிற்சி பெற்ற சாய்னா நேவால் மற்றும் பாருபள்ளி காஷ்யப் ஆகிய இருவரும் இந்திய அணியின் பேட்மின்டன் போட்டியில் சிறந்து விளங்கினர். ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற சாய்னா நேவால், உலகின் நம்பர் ஒன் வீராங்கனையாகவும் திகழ்ந்தார். அதேபோல, காஷ்யப்பும் காமன்வெல்த் விளையாட்டில் இந்தியாவுக்காக தங்கம் வென்றார். சர்வதேச போட்டிகளிலும் சிறந்து விளங்கினார். அதன்பிறகு, காஷ்யப் கொடுத்த பயிற்சியில் சாய்னா நேவால் சிறப்பாக விளையாடினார். இருவருக்கும் காதல் ஏற்பட்டு கடந்த 2018ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில், இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் தனது கணவர் பாருபள்ளி காஷ்யப்பை விட்டு பிரிவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட பதிவில்; வாழ்க்கை சில சமயங்களில் நம்மை வெவ்வேறு திசைகளில் அழைத்துச் செல்கிறது. நீண்ட யோசனை மற்றும் பரிசீலனைக்குப் பிறகு, நானும், பாருபள்ளி காஷ்யாப்பும் பிரிந்து வாழ முடிவு செய்துள்ளோம். மன நிம்மதி மற்றும் வளர்ச்சிக்காக இந்த முடிவு எடுத்துள்ளோம். இந்த நேரத்தில் எங்களின் தனியுரிமைக்கு மதிப்பு கொடுத்ததற்கு நன்றி, இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Ramesh Sargam
ஜூலை 14, 2025 12:23

பேட்மின்டன் விளையாட்டில் mixed doubles என்று ஒரு போட்டி உள்ளது. அதில் ஒருமுறை ஒருவருடன் பார்ட்னராக விளையாடுவார்கள். மற்றொருமுறை மற்ற வீரருடன் சேர்ந்து விளையாடுவார்கள். விளையாட்டுக்கு அது ஓகே. வாழ்க்கையில் கூட அப்படியா? போகட்டும், அவரவர் தனிப்பட்ட விவகாரம். நாம் ஏன் மூக்கை நுழைக்கவேண்டும். இப்பொழுது நுழைத்ததற்கு காரணம் செய்தியாக வந்துவிட்டதே...


Anand
ஜூலை 14, 2025 11:45

அவ்வளவுதானா?


SUBBU,MADURAI
ஜூலை 14, 2025 15:46

பந்து வெளியே போயிருச்சுன்னா உடனே வேறு பந்து உள்ளே வந்து விடுகிறது அல்லவா அது போல்தான்...


Saai Sundharamurthy AVK
ஜூலை 14, 2025 11:39

சினிமா, விளையாட்டு துறை கோடீஸ்வரர்கள், தங்கள் சொத்துக்களை வருமான வரித் துறையிடம் இருந்து பாதுகாத்துக் கொள்ள இப்படித் தான் ட்ராமா போடுகிறார்கள். இதையெல்லாம் நம்ப வேண்டாம்.


Rajesh
ஜூலை 14, 2025 10:49

திருமணத்தில் மன நிம்மதியே இல்லையே என்றால் பிரிதலே சரியான முடிவு.இது தற்கொலை,கொடூரமான கொலைகள் இந்த நாட்டில் நடைபெறுவது இருந்து மக்களை பாதுகாக்க இது போன்ற பிரபலங்களின் முன் மாதிரி சிறந்த எடுத்துக்காட்டு.சமுதாயம் மிகவும் நல்லது.வாழ்க்கை சந்தோசமாக வாழ்வதற்கே


Ganesun Iyer
ஜூலை 14, 2025 09:38

மொய் பணமெல்லாம் திருப்பி குடுப்பிங்களா?


தத்வமசி
ஜூலை 14, 2025 09:29

எதற்கு இவர்கள் திருமணம் செய்து கொள்கிறார்கள் ? இவர்களால் சமுதாயத்தில் வளர்ந்து வரும் ஆண்களும் பெண்களும் எதையும் செய்யலாம் என்று நினைக்கிறார்கள். அல்லது பத்திரிக்கைகளுக்கு ஒரு விண்ணப்பம். இவர்களைப் பற்றிய தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றிய செய்திகளை வெளியிட வேண்டாம். இதனால் சமுதாயத்தில் ஒருவித அழுத்தம் ஏற்படத் தான் செய்யும்.


ديفيد رافائيل
ஜூலை 14, 2025 09:04

இந்த news நாட்டுக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப முக்கியமோ . இவனுங்க divorce ஆனதுல எதுவுமே பாதிக்கப்படவில்லையே, எல்லாமே அப்படி தான் இருக்கு அப்படி எந்த மாற்றமும் நாட்டில் நடக்கவில்லை.


GG
ஜூலை 14, 2025 10:05

boomer...boomer boomer


Padmasridharan
ஜூலை 14, 2025 08:44

காதல்ல காமம் கண்ணை மூடும். காமம் முடிந்தபின் காதல் கசக்கும். சேருவதற்கும் பிரிவதற்கும் கோடிகள் உள்ளவர்கள் ஆயிரம் சொல்வார்கள். புகழுக்கு அடிமையானவர்கள் சேர்ந்து வாழுவதை கேவலமாக நினைப்பதும் தனியாக இருப்பதை உயர்ந்தும் பார்க்கிறார்கள். இதை பார்த்து சாதாரண மக்கள் குடித்தனமும் சந்தி சிரிக்கின்றது சாமி. .


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை