உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சொத்து கணக்கு காட்டலேனா சம்பளம் கட் : யோகி அதிரடி

சொத்து கணக்கு காட்டலேனா சம்பளம் கட் : யோகி அதிரடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

லக்னோ: உ.பி.யில் அரசு அதிகாரிகள் வரும் 31-ம் தேதிக்குள் தங்களின் அசையும், அசையா சொத்து விவரங்களை சமர்பிக்காவிட்டால் இம்மாத சம்பளம் கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளதால் 13 லட்சம் அரசு ஊழியர்கள் பீதியில் உள்ளனர்.உ.பி.,யில் முதல்வராக பொறுப்பேற்ற, பா.ஜ.,வைச் சேர்ந்த யோகி ஆதித்யநாத், 2017-ம் ஆண்டு மாநில அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகள், அனைவரும், தங்கள், அசையும், அசையா சொத்து விபரங்களை, உடனடியாக சமர்ப்பிக்க உத்தரவிட்டார். இதையடுத்து, பெரும்பாலான அமைச்சர்கள், தங்கள் சொத்து விபரங்களை, சமர்பித்தனர். இந்நிலையில் கடந்த நிதியாண்டிற்கான தங்களின் அசையும் அசையா சொத்து கணக்கை அமைச்சர்கள், அரசு உயரதிகாரிகள் அரசு இணையதளத்தில் சமர்பிக்கவில்லை என கூறப்படுகிறது.இதையடுத்து பல முறை அவகாசம் தரப்பட்டு, 2023 டிச. 31 வரை கெடு விதிக்கப்பட்டது. இதில் 26 சதவீதத்தினர் மட்டுமே சொத்து விவரங்களை சமர்பித்தனர்.எஞ்சியவர்களுக்கு கடந்த ஜூன் 30 வரை மற்றும் ஜூலை 31-ம் வரை அவகாசம் தரப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து இன்று ( ஆக.,22) தலைமை செயலாளர் பிறப்பித்துள்ள உத்தரவில், அரசு அதிகாரிகள், ஊழியர்கள் தங்களின் அசையும், அசையா சொத்து விவரங்களை இம்மாதம் இறுதி (ஆக.31) க்குள் சமர்பிக்க கெடு விதிக்கப்பட்டுள்ளது. இதனை மீறினால் இம்மாதம் முதல் சம்பளம் நிறுத்தி வைக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.அரசு உத்தரவால் 13 லட்சம் அரசு ஊழியர்கள் பீதியில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Indian
ஆக 23, 2024 17:14

மிக சிறந்த வரவேற்க படவேண்டிய ஓன்று . இதே போல் நாடு முழுக்க அறிவிக்க வேண்டும் .


பச்சையப்பன் கேபால் புரம்
ஆக 23, 2024 12:23

மொதல்ல இவரை சொத்துக் கணக்கு காமிக்க சொல்லுங்க! அரசு ஊழியருக்குஅப்புறம் ழரலாம். ஆளைப்பாரு இவுங்ங மந்திரிங்க ஏம்எல்ஐக்களலை காமிக்க சொல்லுங்க!!


stb
ஆக 23, 2024 09:08

super


God yes Godyes
ஆக 23, 2024 07:25

மாநிலங்கள் அனைத்திற்கும் ஆட்சி செய்ய யோகி போன்ற தூய்மையான நேர்மையான கடவுள் பக்தியுள்ள ஆட்கள் முன் வரவேண்டும்.


N.Purushothaman
ஆக 23, 2024 09:22

சினிமா நடிகர்களை கட்சி ஆட்சி ஆரம்பிக்க வைத்து அவர்களுக்கும் ஓட்டு போடுற வெள்ளந்தியான வாக்காளர்கள் உள்ள மாநிலம் இது ....


N.Purushothaman
ஆக 23, 2024 07:11

இந்த பதிமூன்று லட்சம் பேரில் எப்படியும் தொண்ணூறு சதவிகிதத்தினர் நேர்மையற்றவர்களாக இருக்க வாய்ப்புக்கள் அதிகம் ...


PARTHASARATHI J S
ஆக 23, 2024 06:11

யோகியை அடுத்த பிரதமர் ஆக்கினால் இந்து மதமும் தர்மமும் பிழைக்கும். இலவசங்களை கட்டுக்குள் வைப்பார். தீவிரவாதிகளை சூறையாடுவார். இவரைப்போன்றவர் கண்டிப்பாக தேவை.


Kasimani Baskaran
ஆக 23, 2024 05:52

தமிழகத்தில் இது போல ஆரபித்தால் பொதுமக்கள் பலர் மயங்கி விழுந்து விடுவார்கள். அதிகாரி / அரசியல்வாதி கூட்டுக் கொள்ளையில் தமிழகம் கிட்டத்தட்ட திவாலாகி விட்டது என்றுதான சொல்ல வேண்டும்.


rama adhavan
ஆக 23, 2024 00:15

தமிழகத்தில் எப்போது? ஊழியர்கள் நன் நடத்தை விதிகளில் ஆண்டுக்கு ஒரு தரம் தர வேண்டும் என உள்ளதே?


ரமேஷ்வர்
ஆக 22, 2024 23:21

அருமையான முடிவு.இல்லை ஆரம்பம். இதனை இந்தியா முழுவதும் அமுல் படுத்துவது நல்லது


மேலும் செய்திகள்





புதிய வீடியோ