உள்ளூர் செய்திகள்

காணவில்லை!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

நமது சிறப்பு நிருபர்

பாலஸ்தீனர்களுக்காக உரக்க குரல் கொடுத்த இந்திய அரசியல்வாதிகள் மற்றும் சினிமா பிரபலங்கள், வங்கதேசத்தில் ஹிந்து இளைஞர் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டது குறித்து இன்னும் வாய் திறக்கவில்லை.பாலஸ்தீனத்தின் காசா பகுதி மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியபோது, இந்திய பிரபலங்கள் பலர் சமூக வலைதளத்தில் கண்டனங்களை பதிவிட்டனர். அப்பாவிகள் கொல்லப்படுவதாக கூறி, இஸ்ரேல் அரசுக்கு எதிராக, கூக்குரல் எழுப்பினர். போராட்டத்திலும் ஈடுபட்டனர்.அப்படி கூப்பாடு போட்டவர்கள் பலர் இப்போது, வங்கதேசத்தில் நடக்கும் வன்முறையில் ஹிந்துக்கள் துன்புறுத்தப்படுவதை கண்டு வாய் திறக்காமல் உள்ளனர்.வங்கதேச வன்முறையில் சிறுபான்மை ஹிந்துக்கள் குறி வைத்து தாக்கப்படுகின்றனர். ஹிந்து இளைஞரான தீபு சந்திர தாஸ் என்பவர் கொடூரமாக தாக்கப்பட்டு கொல்லப்பட்டார். அவருடைய உடலை, மரத்தில் கட்டி வைத்து தீயிட்டு எரித்தனர். அங்குள்ள பத்திரிகை அலுவலகங்கள் மீதும் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. அன்று பாலஸ்தீனத்துக்காக ஓடோடி வந்து குரல் கொடுத்த இந்திய அரசியல்வாதிகள் மற்றும் சினிமா பிரபலங்கள், வங்கதேசத்தில் நடக்கும் அட்டூழியத்தை கண்டு வாய் திறக்காமல் மவுனம் சாதித்து வருவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

வாய்திறப்பதில்லை!

இது குறித்து கடும் கேள்விக்கணைகளால் ஆந்திரா துணை முதல்வரும் நடிகருமான பவன் கல்யாண் வெளுத்து வாங்கி உள்ளார். அவர் கூறுகையில், வங்கதேசத்தில் நடப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது. பாலஸ்தீனத்தில் ஏதேனும் நடந்தால் இங்கே இருக்கும் பலர் குதித்து கூப்பாடு போடுகின்றனர். அதுவே வங்கதேசத்தில் நடந்தால் யாரும் வாய் திறப்பதில்லை, என்றார்.

இன்று காணவில்லையே?

அன்று பாலஸ்தீனத்துக்கு குரல் கொடுத்த இந்திய அரசியல்வாதிகள் யார் யார்? அவர்கள் சொன்னது என்ன? என்பது குறித்த ஓர் சிறப்பு அலசல்!காங்கிரஸ் மூத்த தலைவர், சோனியாகாசாவில் பாலஸ்தீன மக்கள் மீதான இஸ்ரேலின் கொடூர தாக்குதலுக்கு அமைதி காப்பது கோழைத்தனமானது. இந்த விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டை பிரதமர் மோடி உலக அரங்கில் துணிச்சலாக தெரிவிக்க வேண்டும். காங்கிரஸ் எம்பி, பிரியங்காபாலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் அழிவை கட்டவிழ்த்து விடும்போது அமைதியாக இருப்பது வெட்கக்கேடானது.காங்கிரஸ் எம்பி, ராகுல் காசாவில் குழந்தைகள் உட்பட ஆயிரக்கணக்கான அப்பாவி பொதுமக்களைக் கொன்றதும், உணவு, தண்ணீர் மற்றும் மின்சாரத்தை துண்டித்து லட்சக்கணக்கான மக்களை ஒட்டுமொத்தமாக தண்டிப்பதும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களாகும்.இயக்குநர் வெற்றிமாறன்பாலஸ்தீனத்தில் நடந்து வருவது இனப்படுகொலை. மருத்துவமனைகளிலும், பள்ளிகளிலும் மக்கள் அடைக்கலம் புகுந்துள்ளனர் என்பது தெரிந்தும் குண்டு வீசி தாக்குகின்றனர். காசாவில் நடக்கும் திட்டமிட்ட இனப்படுகொலையை கண்டிக்க வேண்டியது நமது கடமை. நடிகர் சத்யராஜ்காசாவில் நடந்து கொண்டிருக்கும் படுகொலை என்பது சகித்து கொள்ள முடியாதது. மனிதாபிமானம் இல்லாமல் எப்படி குண்டு போட முடிகிறது. ஒரு தாக்குதலை நடத்திவிட்டு, எப்படி அவர்களால் நிம்மதியாக தூங்க முடிகிறது.நடிகர் பிரகாஷ்ராஜ்காசாவில் பாலஸ்தீனர்கள் மீது தாக்குல் நடத்தியதற்கு இஸ்ரேல் மட்டும் காரணமல்ல. அதற்குத் துணையாக இருக்கின்ற அமெரிக்காவும் காரணம். இந்த தாக்குதலை எதிர்த்துப் பேசாத ஒவ்வொரு மனிதனும் காரணம். பிரதமர் மோடி இஸ்ரேல் நாட்டுக்கு மிகவும் நெருக்கமானவர். ஆனால் இதுவரை கண்டனம் தெரிவிக்கவில்லை. எனவே அவரும் இந்த படுகொலைக்கு பொறுப்பு. நடிகை தியா மிர்சா காசாவை வாழ விடுங்கள் என்ற சுவரொட்டியை காட்டிய புகைப்படத்தை சமூகவலைதளத்தில் பதிவிட்டு எதிர்ப்பு தெரிவித்து இருந்தார்.நடிகை பாத்திமா சானா ஷேக்பாலஸ்தீனத்தின் ரபாவில் தலை துண்டிக்கப்பட்ட குழந்தைகளின் அதிர்ச்சி வீடியோவை கண்டேன். இது எப்போது முடிவுக்கு வரும்?நடிகை ராதிகா ஆப்தேபாலஸ்தீனத்தின் ரபாவிலிருந்து வெளியாகும் வீடியோக்கள் மிகவும் கொடூரமானவை, அதிர்ச்சிக்கரமானவை. இதுவரை நாம் கண்டதை விட மிகவும் அதிர்ச்சிகரமானவை.நடிகை எமி ஜாக்சன்தென்னிந்திய மற்றும் ஹிந்தி படங்களில் பணிபுரியும் பிரிட்டிஷ் நடிகரும் மாடலுமான எமி ஜாக்சன் வெளியிட்டு இருந்த பதிவில், '' அப்பாவி மக்கள் இனப்படுகொலையைச் சகித்துக் கொண்டிருக்கும்போது எங்கள் சலுகை பெற்ற வாழ்க்கையை வாழ்வது வேதனை அளிக்கிறது. நாங்கள் ஒரு போர் நிறுத்தத்தை கோருகிறோம். பாலஸ்தீன மக்கள் சித்திரவதைகளை எதிர்கொள்கின்றனர். அப்பாவி ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளின் கொலைக்கு எந்த நியாயமும் இல்லை. நடிகை சோனம் கபூர்இஸ்ரேல், பாலஸ்தீனத்தில் அப்பாவி மக்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்த போர் பிரச்னை விரைவில், முடிவு பெற வேண்டும். நடிகை சமந்தாசர்வதேச நீதிமன்றம் இஸ்ரேல் ரபாவில் தனது ராணுவத் தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று தீர்ப்பளித்த பிறகும் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது. இந்த பயங்கரத்தை விவரிக்க வார்த்தைகளே இல்லை. தப்பிச் செல்ல பாதுகாப்பான இடம் எங்கும் இல்லை. இது நிறுத்தப்பட வேண்டும். இப்போதே போர்நிறுத்தம் வேண்டும். அதேபோல், நடிகை கவுஹர் கான், நடிகர் ஷாருக்கான், நடிகை ஆலியா பட், நடிகை வருண் தவான், நடிகை ஸ்வரா பாஸ்கர், நடிகரும், இயக்குனருமான நஸ்ருதீன் ஷா ஆகியோரும் காசாவில் பாலஸ்தீனர்கள் மீதான இஸ்ரேல் தாக்குதலுக்கு கண்டனங்களை தெரிவித்து இருந்தனர்.இவர்கள் யாருமே, தற்போது வங்கதேசத்தில் நடக்கும் வன்முறை தொடர்பாக வாய் திறந்து எதுவும் பேசவில்லை என்பது இணையத்தில் கடும் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 234 )

kumar
டிச 26, 2025 15:57

இந்த வாயர்கள் இந்துக்களுக்காக குரல் கொடுப்பார்கள் என்று எப்படி எதிர்பார்க்கலாம் . ஆனால் இவர்கள் காசுக்காக கூவுபவர்கள் இந்துக்களுக்கு எதிரானவர்கள் என்பதை மீண்டும் மீண்டும் மக்களுக்கு குஞபகப்படுத்திக்கொண்டே இருக்க இந்தசெய்தியை பிரசுரிக்க வேண்டும். இந்து அமைப்புகளும் , மக்களும் தொடர்ந்து குரல் கொடுக்க வேண்டும். இந்துக்களுக்காக்க குரல்கொடுக்க 75 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு அரசு மத்தியில் இருக்கிறதென்பதே இவர்களுக்கு தொல்லை .


Naga Subramanian
டிச 26, 2025 07:13

தினமலருக்கு நன்றி கடந்த இரு தினங்களாக, இந்த பதிவை முகப்பதிவிலுருந்து எடுக்காமல், இவ்வாறு வெளியிடுவதன் மூலம் தனது உள்ளக்குமுறல்களை உலகுக்கு அறிவிக்கும் தினமலருக்கு நன்றி கையறு நிலையிலிருக்கும் மக்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தும் இடம்தான் இது என்பது அனைத்து வாசகர்களும் அறிவர். மேற்பட்ட நபர்கள் இதை படித்தலன்றி, இது அவர்களுக்குச் சென்றடையாது. மேலும் அவர்களுக்கேத் தெரியும், அவர்கள் தங்களை விற்றுவிட்டுத்தான் இவ்வாறு பேசுகிறார்களென்று இந்த மாதிரியான, பணத்திற்காக தனது வாழ்க்கை முறையையே, அசிங்கம் என்றும் கிஞ்சித்தும் பாராமல், "அட்ஜஸ்ட்" செய்பவர்கள், தனது கற்பைப் பற்றி சிறிதும் எண்ணிப்பாராமல், அதை செய்து கொண்டுதான் இருப்பார்கள். குறிப்பு: கற்பு என்பது இருபாலருக்கும் பொருந்தும். மேலும், வங்கதேசத்தில் நமது உடன்பிறப்பு, சத்கதியடையவும் மற்றும் இன்னபிற உயிர்கள் சிரமமின்றி வாழ இறைவனை வேண்டுகிறேன்.


S Balakrishnan
டிச 25, 2025 22:32

இந்த பதிவில் இவ்வளவு கேவலமாக எழுதியதை இவர்களுக்கு யாராவது சொல்வார்களா ? அப்படியே சொன்னாலும் ஏதாவது உரைக்குமா ?


Priyan Vadanad
டிச 25, 2025 22:03

தேர்தல் கூட்டத்துக்கு ஆள் பிடிக்கிற மாதிரி இருக்கிறது.


Vijay D Ratnam
டிச 25, 2025 21:40

காஸால தெருநாயை முட்டுச்சந்து மூத்திரசத்துல உட்டு அடிக்கிற மாதிரி கதற கதற அடிச்சான் இஸ்ரேல்காரன். காஸாவின் ஒப்பாரி இஸ்லாமியர்களின் ஒப்பாரி. ஆனால் பங்களாதேஷில் அடிப்பது மதம் மாறிய இஸ்லாமியர்கள். அலறுவது மதம் மாறாத ஹிந்துக்கள். இவனுங்க எப்படி கூவுவானுங்க. ஓசியில கூவுடாண்ணா எப்படி கூவுவானுங்க. கூலியை முதலில் கொடுக்கணும்ல. ஒவ்வொன்னுக்கும் ஒரு ரேட் இருக்குதுல்ல. சிலதுக்கு பொறை போடணும், சிலதுக்கு சோறு போடணும், சிலதுக்கு எலும்புத்துண்டு போடணும். சொம்மா எப்படி குரைக்கும். அததுக்கு போட வேண்டியதை போடணும். ஷாருக் கான், அமீர்கான் ரேஞ்சு வேற அந்த சவுண்ட் இந்தியா தாண்டி அண்டை நாடுகளிலும் பேசப்படும். இந்த பிரகாஷ்ராஜ், சத்யராஜ், வெற்றிமாறன் போன்றது லோக்கல் கேசு, இவிங்க கத்துறது கும்மிடிப்பூண்டி தாண்டாது. அதுவும் இதுங்க திமுகவின் வளர்ப்பு பிராணிகள்னு தமிழ்நாட்டுக்கே தெரியும். அதான்.


பேசும் தமிழன்
டிச 25, 2025 21:25

வாடகை வாயன்கள்.... வாயை வாடகைக்கு விட்டு பிழைக்கும் இழிப்பிறவிகள்


Bala
டிச 25, 2025 21:22

Markaya the makka


பிரவீன்
டிச 25, 2025 20:57

புழுக்களை விட கேவலமானவர்கள்.


M.Malaiarasan,Tuticorin
டிச 25, 2025 20:17

Rental people....


Naga Subramanian
டிச 25, 2025 19:21

இவர்களுக்கெல்லாம் இந்துவாது மண்ணாவது. ஆளும்கட்சி பிரமுகர்களுக்கு மற்றும் பெருந்தலைகளுக்கு அடஜஸ்ட் பண்ணனும் மற்றும் ஜால்றா போடணும். தங்களது ஜோபியில் "எப்படியாவது" நிறைய காசு பாக்கணும். அவ்வளவுதான்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை