உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இந்தியாவுக்கு எதிராக போராடுகிறோம் என்று கூறிய ராகுல்; சம்மன் அனுப்பியது சம்பல் கோர்ட்

இந்தியாவுக்கு எதிராக போராடுகிறோம் என்று கூறிய ராகுல்; சம்மன் அனுப்பியது சம்பல் கோர்ட்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சம்பல்: இந்திய நாட்டுக்கு எதிராக போராடுகிறோம் என்று கூறிய லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் நேரில் ஆஜராகும்படி சம்பல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த ஆண்டு ஜனவரி 15ம் தேதி காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல், 'பா.ஜ., அல்லது ஆர்.எஸ்.எஸ்., அமைப்பினரை எதிர்த்து மட்டுமின்றி, இந்திய நாட்டுக்கு எதிராகவும் போராடுகிறோம்' என்று கூறினார். அவரது இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.இந்திய நாட்டுக்கு எதிராக பேசியதற்காக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உ.பி., மாநிலம் சம்பல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி, ராகுல் பதிலளிக்க வேண்டும் அல்லது ஏப்ரல் 4ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார். இந்த சர்ச்சை கருத்து தொடர்பாக முதலில் சிம்ரன் குப்தா என்பவர் எம்.பி., எம்.எல்.ஏ.,க்களுக்கான நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கை தலைமை குற்றவியல் நீதிபதி ரத்து செய்தார். தற்போது சம்பல் மாவட்ட நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவின் மீது தான், நீதிபதி தற்போது ராகுலுக்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

velusamy dhanaraju
மார் 21, 2025 20:18

தம்பதி சமேதராக போய் கோர்ட்டில் வாதாடுங்க பசி.ஆனால் பீஸ் கேட்டால் அடுத்த தடவை எம் பி சீட் கிடைக்காது


B MAADHAVAN
மார் 21, 2025 18:44

ஐயா, அவர் இந்திய நாட்டிற்கோ அல்லது இந்திய இறையாண்மைக்கு எதிராகவோ போராடுகிறோம் என்று ஒன்றும் சொல்ல வில்லை. The Indian National Developmental Inclusive Alliance என்ற இந்தியா கூட்டணியை தான் சொன்னேன் என்று கூட சொல்லலாம். விட்டு விடாதீர்கள். நாட்டுக்கு எதிராக பேசும் எந்த துரோகிகளையும் நல்ல நீதிபதிகள் விட்டுவிடக்கூடாது. அது எல்லோருக்கும் இதேபோல் பேசும் தைரியத்தை கொடுத்து விடும். தேசத்திற்கு விரோதமாக யாரும் செயல்படக் கூடாது என்பதை எல்லோரும் உணர வேண்டும்..


வாய்மையே வெல்லும்
மார் 21, 2025 15:54

டில்லியில் அதிகமாக வெயில் அடிப்பதால் புத்தி பேதலிச்சு ராவுளு இந்தியாவுக்கு எதிராக போராடுகிறோம்என்று பேசியுள்ளார் என எண்ணி அவருக்கு நாலு சவுக்கடி கொடுப்பதை உடனே நிப்பாட்டவும். இப்படிக்கு ரவுல் அட்வொகேட் அது யாருன்னா ஒருமண்ணும் தெரியாத அபிஷேக்கு மண்ணு சிங்கிவி ... திராவிடம் தான் எங்கள் மண்ணு என எவனாவது கம்புசுற்றினால் அதற்கு சமூகம் பொறுப்பாகாது ..


ராமகிருஷ்ணன்
மார் 21, 2025 15:24

ராகுலு பேசியதை மக்கள் தவறாக புரிந்து கொண்டனர். ராவுலு யாரு, ஒரிஜினல் முஸ்லீம். அதனால ஒரு பாக்கிஸ்தானி பேசுவது போல பேசி விட்டார்.


RAVINDRAN.G
மார் 21, 2025 15:06

விரோதியா இருங்க பாராட்டுறோம் .துரோகியா இருக்காதீங்க.


Rajarajan
மார் 21, 2025 15:00

நாங்க தான் திரும்ப திரும்ப சொல்றோமே. அவங்க மூத்த குடிகளை எடுத்துப்பார்த்தால், யார் என்ற உண்மை விளங்கும்னு. மேலும், இரட்டை குடியுரிமை எதற்குன்னு இப்போ சாயம் வெளித்ததா ??


RAMKUMAR
மார் 21, 2025 13:33

அந்த 7 CM மீட்டிங் அப்புறம் , இதத்தான் சொல்லப்போறாங்க .. காங்கிரஸ் doing master plan .


Kumar Kumzi
மார் 21, 2025 13:04

இத்தாலிக்கு .........


Ramesh Sargam
மார் 21, 2025 12:16

இந்தியாவுக்கு எதிராக போராடவேண்டுமென்றால், முதலில் இந்தியாவை விட்டு வெளியே போ.


PalaniKuppuswamy
மார் 21, 2025 11:56

உண்மை பேசியதற்கு பரிசாக .. இத்தாலி அல்லது தாய்லாந்து அல்லது பிரிட்டிஷ் நாடு கடத்தி விடலாம்.