உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மதமாற்றத்திற்காக ரூ.500 கோடி; முஸ்லிம் நாடுகளிடம் இருந்து வாங்கிய சங்கூர் பாபா

மதமாற்றத்திற்காக ரூ.500 கோடி; முஸ்லிம் நாடுகளிடம் இருந்து வாங்கிய சங்கூர் பாபா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

லக்னோ: உத்தரபிரதேசத்தில் மதமாற்ற கும்பலின் மூளையாக செயல்பட்ட சங்கூர் பாபா, முஸ்லிம் நாடுகளிடம் இருந்து ரூ.500 கோடி பெற்றிருப்பதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. சட்டவிரோத மதமாற்றத்தில் ஈடுபட்டதாக மாதம்பூர் பகுதியை சேர்ந்த சங்கூர்பாபா என்ற ஜலாலுதீன் என்பவரையும், அவரது கூட்டாளியான நீத்து என்ற நஸ்ரின் என்பவரையும் பயங்கரவாத தடுப்புப் பிரிவு போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நாச வேலைகளில் அவர்கள் ஈடுபட இருந்தது முதற்கட்ட விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=lnpwf5l7&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0குறிப்பாக, ஏழைகள், ஆதரவற்ற தொழிலாளர்கள், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், கணவரை இழந்த பெண்கள் ஆகியோருக்கு நிதியுதவி அளிப்பதாக கூறியும், திருமண வாக்குறுதி அளித்தும், மிரட்டல் விடுத்தும், மதமாற்ற நடவடிக்கையில் இருவரும் ஈடுபட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.ஆரம்பத்தில் தர்கா முன்பு வளையல் மற்றும் தாயத்து விற்று வந்த சங்கூர் பாபா, மதமாற்ற செயல்களுக்காக ரூ.500 கோடி வரை வெளிநாடுகளில் பணத்தை பெற்று வந்தது தெரிய வந்துள்ளதாக பயங்கரவாத தடுப்புப் பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த ரூ.500 கோடியில் ரூ.200 கோடி அதிகாரப்பூர்வமாக பெறப்பட்டுள்ளது. எஞ்சிய ரூ.300 கோடியை நேபாளம் வழியாக சட்டவிரோத ஹவாலா கும்பலின் மூலம் பெற்றுள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதற்காக, நேபாளத்தில் உள்ள காத்மண்ட், நவல்பரசி, ருபன்தேஹி மற்றும் பான்கே மாவட்டங்களில் 100க்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகள் திறக்கப்பட்டு, அதன்மூலம் சங்கூர் பாபாவுக்கு அனுப்ப்பட்டுள்ளது. பாகிஸ்தான், துபாய், சவுதி அரேபியா மற்றும் துருக்கி போன்ற முஸ்லிம் நாடுகளில் இருந்த அந்த வங்கிக் கணக்குகளுக்கு பணம் அனுப்பப்பட்டுள்ளது. உத்தரபிரதேசத்தின் பல்ராம்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த சாங்கூர் பாபாவுக்கு, நேபாளத்தில் உள்ள ஏஜென்ட்டுகள் 4 முதல் 5 சதவீத கமிஷனை பெற்றுக் கொண்டு, பணத்தை அனுப்பி வைத்துள்ளனர். சில சமயங்களில் சி.டி.எம்., (CDM) இயந்திரத்தின் மூலம் சாங்கூர் பாபாவின் வங்கிக் கணக்கிற்கு பணத்தை டெபாசிட் செய்துள்ளனர். நேபாள கரன்சியை பல்ராம்பூர், ஸ்ரவஸ்தி,பஹ்ரைச், லக்கிம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பணி பரிமாற்ற மையத்தின் மூலம் இந்திய ரூபாயாக பெற்று வந்துள்ளார். இதனிடையே, கடந்த 10 ஆண்டுகளாக வருமான வரி தாக்கல் செய்த விபரங்களை பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் கேட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

பா மாதவன்
ஜூலை 14, 2025 18:01

இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்கள் அனைவரும் அரேபியாவில் இருந்து வந்துவிடவில்லை. ஏதோ, முகலாயர் ஆட்சியில் கத்திக்கும், ஆயுதத்திற்கும் பயந்து போன நம் சகோதர முன்னோர்களில் பெரும்பாலானோர் பயந்து போய் மதம் மாறியதால், இன்று இஸ்லாமியர்களாக உள்ளனர். முன்னோர்கள் இந்துக்களாக இருந்ததால் , அவர்களிடம் இருந்த வீரம் இவர்களிடம் உள்ளது. ஆனால், ஹிந்துக்களுக்கு இருக்கும் சகிப்புத் தன்மை மதம் மாறிய பெரும்பாலோனோரிடம் குறைவாகத் தான் உள்ளது என்பதை உணர முடிகிறது. இந்தியாவில் இருக்கும் இந்திய குடிமகன்கள் யாவரும் நம் பாரதத் தாயின் புதல்வர்கள் தான் என்பதால், எல்லோரும் நம் நாட்டிற்கு தான் முதலில் விசுவாசமாக இருக்க வேண்டும்.


Ramesh Sargam
ஜூலை 11, 2025 20:44

இந்த சங்கூர் பாபாவுக்கு சங்கு ஊதவேண்டிய நேரம் வந்துடுச்சு. எடுங்க சங்கை. சங்கே முழங்கு.


Ramesh Sargam
ஜூலை 11, 2025 20:16

மற்றொரு மதமாற்ற மதமும் இந்த மதத்தினருக்கு சளைத்தவர்கள் இல்லை. யார் அந்த மற்றொரு மதம்? கூறுங்கள் பார்க்கலாம். உங்களுக்கு நன்றாகவே தெரியும்.


venugopal s
ஜூலை 11, 2025 19:15

FEMA சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டியதும் மத்திய அரசு தானே?


Barakat Ali
ஜூலை 11, 2025 18:41

[கடந்த 10 ஆண்டுகளாக வருமான வரி தாக்கல் செய்த விபரங்களை பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் கேட்டுள்ளனர்.] ...... ஹிந்துத்வா பேசும் பாஜக ஆட்சி அமைத்தும் பாபா ஜி திரை மறைவில் பிசியா இருந்திருக்காரு .... .


Barakat Ali
ஜூலை 11, 2025 18:40

உண்மையான இஸ்லாமியர் இப்படிச் செய்யமாட்டார் .... அல்லாஹ் இவரை மன்னிக்க மாட்டான் .....


S.L.Narasimman
ஜூலை 11, 2025 16:53

இப்படி இந்த அறிவில்லாமல் கோடிகணக்கில் பணத்தை கொட்டி மதமாற்றி குல்லா போடவைப்பதால் என்னா சாதித்து விடபோகிறார்கள். முதலில் மனிதனாக வாழ முயற்சி செய்ங்கடா.


Palanisamy Sekar
ஜூலை 11, 2025 15:49

தமிழ்நாட்டில் பலர் இதுபோல இருக்கத்தான் செய்வார்கள். இந்த திராவிட மாடல் இருக்கும் வரை அவர்கள் இதுபோல நிறைய பணத்தை சேர்த்துக்கொள்வார்கள். மனிதநேய மக்கள் கட்சி என்கிற பெயரை வைத்துக்கொண்டு திமுக ஆதரவில் MLA ஆனதும் அவர் பணப்பரிமாற்றம் விஷயத்தில் ஒருவருடம் சிறைத்தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளார் அது எப்படி? இப்படி இன்னும் மாட்டிகொள்ளாத பலர் இருக்கத்தான் செய்கின்றார்கள். மேற்குவங்கத்தை விட தமிழ்நாட்டில் இவர்களின் கொழுத்த பணம் நிறைய பிடிபடும் ஆட்சி மாறும்போது


Kumar Kumzi
ஜூலை 11, 2025 13:03

இந்த கேடுகெட்ட மூர்க்க காட்டுமிராண்டியிடம் இருக்கும் அணைத்து சொத்துக்களையும் பறிமுதல் செய்துவிட்டு என்கவுண்டரில் போட்டுத்தள்ளுங்கள்


kumarkv
ஜூலை 11, 2025 14:55

இந்த குரங்கின் தலயை சீவிடுங்க