சி.ஏ.ஜி., புதிய தலைவராக சஞ்சய் மூர்த்தி பதவியேற்பு
புதுடில்லி,சி.ஏ.ஜி., எனப்படும் மத்திய கணக்கு தணிக்கையாளர் அமைப்பின் தலைவராக இருந்த கிரிஷ் சந்திரா முர்முவின் பதவிக்காலம் நேற்று முன்தினம் நிறைவடைந்தது. இதையடுத்து, சி.ஏ.ஜி.,யின் புதிய தலைவராக, 1989ம் ஆண்டின் ஹிமாச்சல பிரதேச மாநில கேடர் ஐ.ஏ.எஸ்., அதிகாரியான கே.சஞ்சய் மூர்த்தியை, மத்திய அரசு சமீபத்தில் பரிந்துரைத்தது. இதற்கு, ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்தார்.இந்நிலையில், டில்லி ஜனாதிபதி மாளிகையில் சஞ்சய் மூர்த்தி நேற்று பதவியேற்றார். அவருக்கு, ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவி பிரமாணம் செய்து வைத்தார். மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரியான சஞ்சய் மூர்த்தி, ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர்.