உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சாட்டிலைட் இன்டர்நெட் உரிமம் ஏலம் கிடையாது: அம்பானி, சுனில் மிட்டல் கோரிக்கை நிராகரிப்பு

சாட்டிலைட் இன்டர்நெட் உரிமம் ஏலம் கிடையாது: அம்பானி, சுனில் மிட்டல் கோரிக்கை நிராகரிப்பு

புதுடில்லி: செயற்கைக்கோள் வழி இணைய சேவை வழங்கும் நிறுவனங்களுக்கான அலைக்கற்றை ஒதுக்கீடு, ஏலமின்றி, நிர்வாக ஒதுக்கீடு முறையில் வழங்கப்படும் என, மத்திய அரசு அறிவித்துள்ளது.இது, 'ஜியோ, ஏர்டெல்' உள்ளிட்ட நிறுவனங்கள், எலான் மஸ்க்கின் 'ஸ்டார்லிங்க்' நிறுவனத்தின் போட்டியை சமாளிக்க வேண்டிய சூழலை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.கம்பிவடம், புதைவட கண்ணாடி இழை ஆகிய வழிகளில் இணைய சேவையை உள்நாட்டு நிறுவனங்களான ரிலையன்ஸ் ஜியோ, பார்தி ஏர்டெல் ஆகியவை வழங்கி வருகின்றன.தொலைதொடர்பு சேவை வழங்குவதற்கான அலைக்கற்றையை நிறுவனங்கள் பெறுவதற்கு ஏல நடைமுறை பின்பற்றப்படுகிறது. குறிப்பிட்ட அளவு அலைக்கற்றையை ஆண்டுகள் அடிப்படையில் அரசு ஏலம் விடுவதும்; அதில் ஒரு பகுதியை, பணம் செலுத்தி உரிமம் பெற்று சேவை அளித்து கட்டணம் வசூலிப்பதும் வழக்கமாக உள்ளது.இந்நிலையில், செயற்கைக்கோள் வழியாக இணைய சேவை வழங்கும் முயற்சியில் ஜியோவும் பார்தி ஏர்டெல் நிறுவனமும் இறங்கி உள்ளன.எனினும், உலக பெரும் கோடீஸ்வரரான எலான் மஸ்க்கின் ஸ்டார் லிங்க் நிறுவனம், பல நாடுகளில் செயற்கைக்கோள் வழி இணைய சேவையில் கொடி கட்டிப் பறக்கிறது.இந்நிறுவனம், விரைவில் இந்தியாவில் கால் பதிக்க திட்டமிட்டுள்ளது.அதனால், கடும் போட்டியை ஜியோ மற்றும் ஏர்டெல் உள்ளிட்ட உள்நாட்டு நிறுவனங்கள் எதிர்கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.இந்நிலையில், செயற்கைக்கோள் வழி இணைய சேவைக்கு, ஏலம் நடத்தி உரிமம் வழங்க வேண்டும் என்று தொலைதொடர்புத் துறை அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியாவுக்கு ஜியோ நிறுவனம் அண்மையில் கடிதம் எழுதியது. ஜியோவுக்கு ஆதரவு அளிக்கும் வகையில், அதே கருத்தை பிரதமர் மோடி முன்னிலையில் டில்லியில் நடந்த நிகழ்ச்சியில், பார்தி ஏர்டெல் தலைவர் சுனில் மிட்டலும் வலியுறுத்தினார்.உலகம் முழுதும் செயற்கைக்கோள் வழி இணைய சேவைக்கு, ஏல நடைமுறையின்றி, நிர்வாக ஒப்புதல் தரப்படும் நிலையில், முகேஷ் அம்பானியின் இந்த கோரிக்கை இதுவரை இல்லாதது, அரசுக்கு அழுத்தம் தரக்கூடியது என, எலான் மஸ்க் அதிருப்தி தெரிவித்திருந்தார்.இந்த சூழலில், செயற்கைக்கோள் வழி இணைய சேவைக்கு, ஏலம் கிடையாது; நிர்வாக ரீதியான ஒதுக்கீடே வழங்கப்படும் என அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார். இந்த விஷயத்தில் உலகில் உள்ள நடைமுறையை தொடர இந்தியா விரும்புவதாகவும்; மாறுபட்ட வழியை கையாள விரும்பவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.இந்திய செயற்கைக்கோள் வழி இணைய சேவை ஓராண்டில் 36% வளரும் என கணிப்பு2030க்குள் செயற்கைக்கோள் வழி இணைய சேவை மதிப்பு 16 லட்சம் கோடி ரூபாயை எட்ட வாய்ப்பு

வேறுபாடு?

ஏலம்குறிப்பிட்ட அலைக்கற்றை அளவை அரசு ஏலத்திற்கு விடும்போது, அதிகபட்ச தொகைக்கு கேட்கும் நிறுவனத்திற்கு ஒதுக்கீடு செய்யப்படும். இதில், குறைந்தபட்ச கேட்புத் தொகைக்கு ஏற்ப, முன்பணம் செலுத்தி, பல நிறுவனங்கள் ஏலத்தில் பங்கேற்கும் என்பதால், கடும் போட்டி இருக்கும்.அரிய இயற்கை வளத்தை சிறப்பாகவும் வெளிப்படையாகவும் பயன்படுத்த, ஏல முறை உதவுகிறது. மேலும், அதிகபட்ச தொகைக்கு ஏலம் எடுக்கப்படுவதால், அதற்கேற்ப அரசுக்கு அதிக வருவாய் கிடைக்கும்.நிர்வாக ஒதுக்கீடுநேரடியாக குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு அலைக்கற்றை உரிமத்தை அரசு வழங்குவது, நிர்வாக ஒதுக்கீடு எனப்படுகிறது.ஏல நடைமுறைக்கு வாய்ப்பில்லாத அல்லது, அரசுக்கு குறைந்த பயனளிக்கக்கூடிய சூழல்களில் இது கையாளப்படும். ஒதுக்கீடு பெறுவதற்கு குறிப்பிட்ட தகுதிகளை நிர்ணயித்து, அவற்றை நிறைவு செய்யும் நிறுவனத்திற்கு உரிமம் வழங்கப்படும்.

முகேஷ் - மஸ்க் போட்டி?

ஏலம் இல்லாமல், நிர்வாக ஒதுக்கீட்டில் உரிமம் வழங்கும் அரசின் முடிவுக்கு, ஸ்டார் லிங்க் தலைவர் எலான் மஸ்க் பாராட்டு தெரிவித்துள்ளார். தனது நிறுவனத்தின் வாயிலாக இந்தியர்களுக்கு சிறந்த சேவையை அளிக்க விரும்புவதாகவும், அவர் தனது 'எக்ஸ்' தளத்தில் பதிவிட்டுள்ளார். ஸ்டார் லிங்க், அமேசான் உள்ளிட்ட நிறுவனங்கள் செயற்கைக்கோள் வழி இணைய சேவையை இந்தியாவில் விரைவில் துவங்க உள்ளதன் வாயிலாக, ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி, எலான் மஸ்க் இடையே கடும் வர்த்தக போட்டி ஏற்பட வாய்ப்புள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

Sivagiri
அக் 17, 2024 13:10

பாவம் எலான் மாஸ்க் - ராக்கெட்டை பத்தி தெரிஞ்ச அளவுக்கு, இந்தியன் ஆட்டோ-வை பற்றி தெரியாது போல... இவிங்க ரைட்ல கையை போடுவாய்ங்க, லெப்ட்ல இண்டிகேட்டர் போடுவாய்ங்க, ஆனா ஸ்ட்ரைட்டா போயிட்டே இருப்பாய்ங்க . . . பில்கேட்ஸ்சே , அடங்கி ஒடுங்கி போயிட்டு இருக்காரு . . .


Subash BV
அக் 17, 2024 13:08

DONT ENCOURAGE MONOPOLY. NONE OF THE LOCALS HAVE THEIR OWN SATELLITE SYSTEM. OPEN MARKET IS BENEFICIAL TO PUBLIC.


S S
அக் 17, 2024 11:53

முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற திட்டத்தை 2ஜீ அலைக்கற்றை ஒதுக்ககீட்டில் ஆ.ராசா செயல்படுத்தியதால் 1.76லட்சம் கோடி வருவாய் இழப்பு என்று கூறியவர்கள் ஏலம் இல்லாமல் நிர்வாக ஒதுக்கீடு செய்வது சரியா?


Shanmugam Rajaram
அக் 17, 2024 11:25

Elon Musk is most welcome in a democratic country like India as otherwise rich Monopoly companies get richer .I welcome the stand of India.


RAMAKRISHNAN NATESAN
அக் 17, 2024 10:39

அம்பானிக்காகத்தான் ஒன்றியம் இயங்குது என்று நாம உருட்டிக்கிட்டு இருந்தோமே? அம்பானிக்காக செயல்படாமல் ஆரோக்கியமான போட்டியை ஒன்றிய பாஜக உருவாக்கியிருக்கிறது என்று பாராட்டுவதா? அல்லது விபரம் புரியாமல் இப்பொழுது மட்டும் ஏல முறை ஏன் வேண்டாம்? ராசாவுக்கு ஏன் இதே விதி அப்ளை ஆகாது? என்று எதிர்க்கேள்வி கேட்பதா? டீம்கா-கான்கிராஸ் கூலிப்படைஸ் தலையைப் பிடித்துக்கொண்டு யோசனை .......


jaya
அக் 17, 2024 09:52

உள் நாட்டு நிறுவனங்கள் ஏன் திவாலாக வேண்டும், அவை எல்லாமே பல்லாயிரக்கணக்கான கோடிகளில் பணம் வைத்திருக்கும் கம்பெனிகள். டெக்கனிக்களாக போட்டியிட்டு நல்ல சேவையை மக்களுக்கு வழங்கட்டுமே


GMM
அக் 17, 2024 09:09

அதிகபட்ச ஏலம் அதிக கட்டணம் நிர்ணயிக்க வழிவகுக்கும். கூட்டணி அமைத்து அரசை ஏமாற்ற முடியும். ராஜா கால ஊழல் நிர்வாக நடைமுறை வேறு. தற்போது நிர்வாக ஒதுக்கீடு கட்டணம் அரசு நிர்வாக மேற்பார்வையில் விதிகள் வகுக்க பட்டு இருக்கும்?? தற்போதைய பி.எஸ் .என்.ல் க்கு ஒரு பணி கொடுக்க வேண்டும். பல அலுவலகங்கள் பயனற்று கிடக்கின்றன .


kamal
அக் 17, 2024 09:06

if there is no competition then it will be again monopoly like BSNL, few years back. The provider will fix his own price and the service will also be worst. Govt should follow the practices like how they are doing it for other telecom services.


மொட்டை தாசன்...
அக் 17, 2024 08:23

அந்நிய நாட்டு நிறுவனங்களை இதில் அனுமதித்தால் உள்நாட்டு நிறுவனங்கள் திவாலாக வாய்ப்புண்டு .


Janakiraman
அக் 17, 2024 08:10

ஏல முறையில் போட்டி நிறுவனங்கள் அலைக்கற்றை விலையை எக்கச்சக்கமாக ஏற்றிவிடும். அதிக விலைக்கு கேட்பவருக்கே உரிமம் கிடைக்கும். அதனால் மக்களுக்கான இணைய சேவைக் கட்டணமும் அதிகமாகும். ஆனால் நிர்வாக ஒதுக்கீட்டில், குறைவான விலைக்கு மக்களுக்கு இணைய சேவை கிடைக்கும்.


ஆரூர் ரங்
அக் 17, 2024 10:28

அன்னிய நிறுவனங்கள் இணையக் கட்டணங்களை நிர்ணயிக்க அனுமதிக்கப்பட்டால் முதலில் குறைந்த கட்டணங்கள் மூலம் உள்நாட்டு போட்டியாளர்களை துரத்தியடித்து விட்டு பின்பு ஏகபோகமாக விலையைக் கூட்டுவர். இணையப் பயன்பாட்டு கட்டண நிர்ணயம் அரசின் கையிலிருப்பதை அன்னிய நிறுவனங்கள் ஏற்காது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை