உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பதவி கொடுத்தால் நிர்வகிப்பேன் சதீஷ் ஜார்கிஹோளி கருத்து

பதவி கொடுத்தால் நிர்வகிப்பேன் சதீஷ் ஜார்கிஹோளி கருத்து

பெங்களூரு: “மாநில காங்கிரஸ் தலைவர் பதவியை, நான் எதிர்பார்க்கவில்லை. ஆனால் பொறுப்பு கொடுத்தால் நிர்வகிப்பேன்,” என, மாநில பொதுப்பணித்துறை அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி தெரிவித்தார்.கர்நாடகாவில், முதல்வர் பதவி மீது கண் வைத்துள்ளவர்கள் இருப்பதை போன்று, மாநில காங்கிரஸ் தலைவர் பதவியை எதிர்பார்ப்போரும் அதிக எண்ணிக்கையில் உள்ளனர்.இரண்டரை ஆண்டு அதிகாரம் பகிர்வு ஒப்பந்தப்படி, முதல்வர் சித்தராமையா இரண்டரை ஆண்டு பதவிக் காலம் முடிந்ததும், முதல்வர் பதவியை சிவகுமாருக்கு விட்டுத்தர வேண்டும்.ஒருவேளை சிவகுமார் முதல்வரானால், மாநிலத் தலைவர் பதவியை அவர் ராஜினாமா செய்ய வாய்ப்புள்ளது. எனவே இப்பதவியில் அமர, வீட்டு வசதித்துறை அமைச்சர் ஜமீர் அகமது கான், கூட்டுறவுத் துறை அமைச்சர் ராஜண்ணா, பொதுப்பணித்துறை அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி உட்பட, பல அமைச்சர்கள் முயற்சிக்கின்றனர்.குறிப்பாக ராஜண்ணா, தனக்கு மாநிலத் தலைவர் பதவி கொடுத்தால், அமைச்சர் பதவியை விட்டுத்தருவதாக, பகிரங்கமாகவே அறிவித்தார்.அதேபோன்று, சிலர் மறைமுகமாக பதவி எதிர்பார்ப்பதை உணர்த்தினர். இது குறித்து, அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி, பெங்களூரில் நேற்று அளித்த பேட்டி:முதல்வர் பதவியை பகிர்ந்தளிப்பது குறித்து, எனக்கு எதுவும் தெரியாது. மேலிட அளவில் ஒப்பந்தம் ஏற்பட்டிருக்கலாம். அது அவர்களுக்கு மட்டுமே தெரியும். நான் இப்போதே எனக்கு முதல்வர் பதவி வேண்டும் என, கேட்கவில்லை. 2028ல் முதல்வர் பதவியை எதிர்பார்க்கிறேன்.மாநில காங்கிரஸ் தலைவர் பதவியை, நான் எதிர்பார்க்கவில்லை. என்னை அப்பதவியில் அமரும்படி, யாரும் நெருக்கடி கொடுக்கவில்லை. ஒருவேளை எனக்கு பதவி கொடுத்தால் நிர்வகிக்க தயார்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை