உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பாகிஸ்தானுக்கு உளவு சொன்ன பெண் யூடியூபரின் ரகசிய டைரி மீட்பு!

பாகிஸ்தானுக்கு உளவு சொன்ன பெண் யூடியூபரின் ரகசிய டைரி மீட்பு!

புதுடில்லி: பாகிஸ்தானுக்காக உளவு பார்த்த குற்றச்சாட்டில் சமீபத்தில் கைது செய்யப்பட்ட ஹரியானாவைச் சேர்ந்த யூடியூபர் ஜோதி மல்ஹோத்ராவின் ரகசிய டைரியை போலீசார் மீட்டுள்ளனர்.இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக, பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசத்தில் இருந்து 3 பெண்கள் உட்பட 12 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இவர்களுக்கு, டில்லி பாகிஸ்தான் தூதரகத்தில் பணியாற்றிய டேனிஷ் என்பவர் மூலம், பாகிஸ்தான் உளவுத்துறை அதிகாரிகளுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=wi51nkzx&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பாகிஸ்தானுக்கு ஆதரவாக ஊடகங்களில் பிரசாரம் செய்வது; நமது ராணுவம் தொடர்பான தகவல்கள், விமானப்படை தளங்கள் உள்ளிட்ட தகவல்களை பாகிஸ்தான் அதிகாரிகளுக்கு அளிப்பது போன்ற உளவு வேலைகளை பார்த்துள்ளனர். இவர்களில் முக்கியமானவராக கருதப்படும் ஹரியானாவை சேர்ந்த பெண் யூடியூபர் ஜோதி மல்ஹோத்ராவின் தொடர்பில் இருந்தவர்கள் பற்றி என். ஐ. ஏ., ஐ.பி., மற்றும் ஹரியானா போலீசார் விசாரித்து வருகின்றனர். இதில், பல உண்மைகள் தெரியவந்தன. இவர், பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ உடன் தொடர்பில் இருந்துள்ளார். பாகிஸ்தானில் ஆப்கானிஸ்தான் எல்லை வரை தொடர்புகளை ஜோதி ஏற்படுத்தி வைத்திருந்தது தெரியவந்தது. ஊடகங்களில் செல்வாக்குள்ள நபர்களை கண்டறிந்து அவர்களுக்கு வேண்டிய வசதிகளை செய்து தந்து, உளவு பார்க்கும் வேலைக்கு பாகிஸ்தான் உளவு அமைப்புகள் பயன்படுத்தி உள்ளது. அந்த வலையில்தான் ஜோதியும் சிக்கியுள்ளார்.ஜோதிக்கு யுடியூபில் 4 லட்சம் சப்ஸ்கிரைபர்களும், இன்டாகிராமில் 1.32 லட்சம் பேர் பின் தொடர்கின்றனர். தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு உளவு பார்க்கும் வேலை தவிர, இந்தியர்களிடையே பாகிஸ்தாஸ் பற்றி பாசிட்டிவ் பிம்பத்தை உருவாக்கும் வகையில் பிரச்சாரம் செய்யும் பணியும் வழங்கப்பட்டு இருக்கிறது. பாகிஸ்தான் தூதரகத்தை சேர்ந்த டேனிஷ் உடன் இருந்த தனிப்பட்ட தொடர்புகள் பற்றி, ஜோதி மல்ஹோத்ரா ஆரம்பத்தில் மறுத்தார். அவரது மொபைல் போனை ஆய்வு செய்ததில், டேனிஷ் உடன் சேட்டிங் செய்த மெசேஜ்களை அவர் டெலிட் செய்து இருந்தது தெரிந்தது. அதுபோல், பாகிஸ்தான் ஏஜென்ஸிகளிடம் இருந்தும் ஜோதிக்கு ரகசிய உத்தரவுகள் வந்து இருக்கலாம் என்ற சந்தேகத்தில் அவரது மொபைல் போன் தடயவியல் பகுப்பாய்வுக்கு அனுப்பப்பட்டு உள்ளது. பாகிஸ்தான், சீனா, வங்கதேசம் ஆகிய நாடுகளுக்கு ஜோதி மல்ஹோத்ரா சென்றுவந்துள்ளார். 3 முறை பாகிஸ்தானுக்கு சென்றுள்ளார். கடந்த 2014ம் ஆண்டு மே மாதம், பாகிஸ்தானில் பைசாகி திருவிழா செய்தி சேகரிக்க சென்ற ஜோதி, திருவிழா முடித்து 20 நாட்களுக்கு மேல் அங்கு தங்கியிருந்தார். இந்தியா திரும்பிய 1 மாதத்திற்கு பிறகு சீனா சென்றுள்ளார். பாகிஸ்தானில் இருந்தபோதே, அவரது சீன பயணம் திட்டமிடப்பட்டதா? அது பாகிஸ்தான் ஏஜென்சிகளின் அசைன்மென்ட்டா? என்பது பற்றி அதிகாரிகள் விசாரிக்கின்றனர். பாகிஸ்தான் விசிட் பற்றி ஜோதியின் பர்சனல் டைரியில் சில குறிப்புகள் உள்ளன. அதில், பாகிஸ்தானியர்களிடம் இருந்து நிறைய அன்பு கிடைத்தது. எல்லைகளை தாண்டிய இந்த தூரங்கள் எவ்வளவு காலம் நீடிக்கும் என்று யாருக்கு தெரியும். இதயங்களின் குறைகள் தீர்க்கப்பட வேண்டும். நாம் அனைவரும் ஒரே மண்ணை சேர்ந்தவர்கள் என குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Kasimani Baskaran
மே 21, 2025 04:07

பணத்துக்காக எதை வேண்டுமானாலும் செய்வது சுத்தமான திராவிடத்தனம். தீம்க்காவில் பதவி கொடுக்கலாம்.


தமிழ்வேள்
மே 20, 2025 20:41

ஐஎஸ்ஐஎஸ் பெண்களை நடத்தும் அதே விதத்தில்,இவளையும் நடத்தினால் அது சரியான தண்டனை ஆக இருக்கும்


Gnana Subramani
மே 20, 2025 20:37

பாகிஸ்தானுக்கும் சீனாவுக்கும் அடிக்கடி செல்லும் உளவாளிகளை விட்டு விட்டு எதிர்க்கட்சிகளை தான் உளவுத்துறை வேவு பார்க்கிறது


m.arunachalam
மே 21, 2025 00:12

உள்நாட்டு துரோகிகள் அதிகம் உள்ள நாடு நம் நாடு . மதம் , மொழி , ஜாதி , கட்சிகள் , காழ்ப்புணர்ச்சி , சினிமாவினால் தூண்டப்படும் வன்முறை, போதை கலாச்சாரம் , போராட்டங்கள் ஆகியவற்றுடன் பண மோசடிகள், என அளவில்லா விஷயங்களை அரசாங்கம் சமாளிக்க வேண்டி உள்ளது .


Gnana Subramani
மே 20, 2025 20:35

உளவுத்துறையை எதிர்க்கட்சிகளை மட்டும் வேவு பார்க்கச் செய்தால் இப்படித்தான் உண்மையான துரோகிகள் தப்பி விடுகிறார்கள்


skv srinivasankrishnaveni
மே 20, 2025 19:28

சுட்டுத்தள்ளவேண்டும் பெண் என்ற இ ற க்கமெல்லாம் கூடாது துனறது இந்திய சோறு சுவாசிப்பது இந்தியகாற்று குடிப்பது இந்திய நீர் செய்வது thurokamaa


SUBBU,MADURAI
மே 20, 2025 18:43

இவளைப் போலவே தமிழகத்தில் மதன் கௌரி என்ற யூ டூபர் இருக்கிறானே அவனும் இவள் போலவே அல்லது இவளுக்கு மேலே இவளாவது பெண் புத்தி பின் புத்தி என்பது போல் மக்குத் தனமாக போஸ்ட் போட்டு மாட்டிக் கொண்டாள் ஆனால் இந்த மதன் கௌரி என்பவன் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல மதம் என பிரிந்தது போதும் என்ற பாடலை ஒலிக்க விட்டு இந்தியாவை மட்டம் தட்டி பாகிஸ்தானுக்கு சப்போர்ட் செய்தவன் மேலும் மத்திய அரசு பாகிஸ்தானியர்கள் ஒரு வாரத்தில் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்று சொன்னதும் இந்தியாவில் மருத்துவம் பார்க்க வந்த பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர்களுக்கு ஆதரவாக இவனுடைய You tube ல் காணொலி வெளியிட்டான் இப்படிப்பட்ட தேச துரோகியை மட்டும் ஏன் மத்திய அரசு இன்னும் கைது பண்ணாமல் இருக்கிறது? இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் இருக்கும் ஒரே தேச துரோக சட்டம் தமிழ்நாட்டுக்கு மட்டும் ஏன் செல்லுபடியாக மாட்டேன்கிறது என்பது புரியாத புதிராகத்தான் உள்ளது.


Mithun
மே 20, 2025 18:40

உள்நாட்டு தேசதுரோகிகளை களையெடுத்தல் மட்டுமே வெளிநாட்டு பயங்கரவாதிகளை ஒடுக்க முடியும் பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் உள்ளனர் ஆனால் தேசதுரோகிகள் இல்லை. இந்தியாவில் தேசதுரோகிகள் உள்ளனர், பயங்கரவாதிகள் இல்லை.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை