உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஜெயதேவா மருத்துவமனை இயக்குனருக்கு பிரிவு உபசாரம்

ஜெயதேவா மருத்துவமனை இயக்குனருக்கு பிரிவு உபசாரம்

பெங்களூரு : பணியில் இருந்து ஓய்வுபெறும், ஜெயதேவா இதயநோய் மருத்துவமனை இயக்குனர் மஞ்சுநாத்துக்கு, அலுவலக ஊழியர்கள் பிரிவு உபசார விழா நடத்தினர்.பெங்களூரின் ஜெயதேவா இதயநோய் மருத்துவமனை இயக்குனராக, டாக்டர் மஞ்சுநாத் 2007ல், நியமிக்கப்பட்டார். அன்று முதல் மருத்துவமனையை சிறப்பாக வழி நடத்தினார். பல மாற்றங்களை கொண்டு வந்தார். மருத்துவமனைக்கு நல்ல பெயர் கிடைக்க, இவரும் முக்கிய காரணம்.இவரது பதவிக் காலம், 2023ல் முடிவடைந்தது. முக்கிய நபர்கள் பலரும், நெருக்கடி கொடுத்ததால் மஞ்சுநாத்தின் பதவிக்காலத்தை மாநில அரசு ஆறு மாதங்கள் நீட்டித்தது.இன்று அவரது பதவிக் காலம் முடிவடைகிறது. எனவே அலுவலக ஊழியர்கள், டாக்டர் மஞ்சுநாத்துக்கு பிரிவு உபசார விழா நடத்தினர். கனத்த மனதோடு பிரியா விடை கொடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ