உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பண்டிகை காலத்தை முன்னிட்டு டில்லியில் பாதுகாப்பு அதிகரிப்பு

பண்டிகை காலத்தை முன்னிட்டு டில்லியில் பாதுகாப்பு அதிகரிப்பு

புதுடில்லி:தீபாவளி, சாத் பூஜை மற்றும் புத்தாண்டு உள்ளிட்ட பண்டிகை காலத்தை முன்னிட்டு, தேசிய தலைநகர் பிராந்தியம் முழுதும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. டில்லியின் 15 மாவட்டங்களின் துணை கமிஷனர்கள் பாதுகாப்பு குறித்த ஆய்வுக் கூட்டங்களை நடத்தி வருகின்றனர். மேலும், நெரிசலைக் கட்டுப்படுத்துவது, சரோஜினி நகர், கன்னாட் பிளேஸ், சாந்தினி சவுக், லஜ்பத் நகர், கரோல் பாக் மற்றும் மெட்ரோ ரயில் நிலையங்கள் போன்ற மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடங்களிலும், வணிக வளாகங்களிலும் கூடுதல் போலீசார் நியமித்து பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. வணிக வளாகங்களில் நுழைவு மற்றும் வெளியேறும் இடங்களை ஒழுங்குபடுத்தவும், தீவிரமாகக் கண்காணிக்கவும் போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. புதுடில்லி ரயில் நிலையம் உட்பட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கூடுதல் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப் படுகின்றன. இதனால் நெரிசல் அதிகரிப்பதை முன்கூட்டியே கண்டறிந்து, அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்கலாம் என போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார். மேலும், அவசர காலங்களில் விரைவான நடவடிக்கை எடுக்க, டில்லி காவல்துறை விரைவு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் குழுவினர் முக்கிய இடங்களில் ரோந்து சுற்றி வருகி ன்றனர். கூட்டம் அதிகமுள்ள ரயில் நிலையங்களில் வழிப்பறி, திருட்டு ஆகியவற்றை தடுக்க ரயில்வே பாதுகாப்புப் படையுடன் இணைந்து மாநகரப் போலீசார் கண்காணிப்புப் பணி யில் ஈடுபட்டுள்ளனர். சந்தேகத்துக்குரிய நபர்களின் நடமாட்டம் தெரிந்தால், போலீசுக்கு தகவல் தெரிவிக்குமாறு, பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ