உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பாகிஸ்தான் ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியது பாதுகாப்பு படை; துப்பாக்கிகள், ஹெராயின் பறிமுதல்

பாகிஸ்தான் ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியது பாதுகாப்பு படை; துப்பாக்கிகள், ஹெராயின் பறிமுதல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சண்டிகர்: பஞ்சாபில் பாகிஸ்தானின் 6 ட்ரோன்களை எல்லைப் பாதுகாப்புப் படை சுட்டு வீழ்த்தியது. 3 கைத் துப்பாக்கிகள், 1 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது.பஞ்சாப் மாநிலத்தில் உள்ள இந்தியா-பாகிஸ்தான் எல்லையில், ட்ரோன்கள் பறந்ததை எல்லை பாதுகாப்பு படையினர் கண்டறிந்தனர். அமிர்தசரஸில் பாகிஸ்தானின் ஐந்து டிரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=uo4g3cfj&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அட்டாரி கிராமத்தில் ஒரு டிரோன் சுட்டு வீழ்த்தப்பட்டது. அத்துடன் 3 கைத் துப்பாக்கிகள், 1 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது. டர்ன் தரன் மாவட்டத்தில் உள்ள தால் கிராமத்திற்கு அருகிலுள்ள ஒரு நெல் வயலில் இருந்து பாதுகாப்பு படையினர் துப்பாக்கி பாகங்கள் மற்றும் ஆயுதங்களை மீட்டனர். பஞ்சாபில் பாகிஸ்தானின் 6 ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதால், மிகப்பெரிய சதி செயல் முறியடிக்கப்பட்டுள்ளது என போலீசார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Nada raja
ஜூலை 24, 2025 20:13

கொடிய விஷம் கொண்ட பாகிஸ்தானை திருத்த முடியாது


Nachiar
ஜூலை 24, 2025 19:58

வாழ்க வளமுடன். உங்கள் சேவைக்கு நன்றி ஜெய் ஹிந்த்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை