உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / செந்தில்பாலாஜி இப்படி செய்திருக்கக்கூடாது: காங்கிரஸ் கொந்தளிப்பு

செந்தில்பாலாஜி இப்படி செய்திருக்கக்கூடாது: காங்கிரஸ் கொந்தளிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: கரூர் நகர காங்கிரஸ் நிர்வாகியை முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி, திமுகவில் சேர்த்தது சர்ச்சையான நிலையில், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். கூட்டணியில் இருக்கும் போது செந்தில்பாலாஜி இப்படி செய்திருக்கக்கூடாது என தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கை கூட்டணியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தும் என பெரம்பலூர் மாவட்ட காங் தலைவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது எக்ஸ் சமூக வலைதளத்தில் நீக்கப்பட்ட பதிவு என்று குறிப்பிட்டு, ஒரு போட்டோவை கரூர் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அந்தப் போட்டோவில், கரூர் நகர காங்கிரஸ் மகளிர் அணி தலைவர் கவிதா, திமுகவில் இணைந்து விட்டதாகவும், தமிழகம் தலைநிமிர முதல்வர் ஸ்டாலினின் தலைமையே தேவை என்று உணர்ந்து அவர் திமுகவில் இணைந்ததாக செந்தில் பாலாஜி குறிப்பிட்டிருந்தார். இந்தப் பதிவுக்கு காங்கிரஸ் எம்பி ஜோதிமணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். கூட்டணியின் பெயரால் இதுபோன்ற அவமரியாதையை ஒருபோதும் நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம், என்றும் அவர் கூறியுள்ளார். தமிழக மகளிர் காங்கிரசின் கடுமையான எதிர்ப்பைத் தொடர்ந்து அந்தப்பதிவை செந்தில்பாலாஜி நீக்கிவிட்டார்.இந்த விவகாரம் தொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியதாவது: கூட்டணியில் இருக்கும் போது செந்தில்பாலாஜி இப்படி செய்திருக்கக்கூடாது. நானும் அதனை முதல்வர் கவனத்துக்கு கொண்டு சென்றேன். பின்னர் அந்த பதிவு நீக்கப்பட்டது. இப்படி செய்வதால், முதல்வருக்கு தான் நெருக்கடி கொடுக்கின்றனர். அதனை தவிர்க்க வேண்டும் என்பது தான் எங்களின் வேண்டுகோள். ஜோதிமணி மிகவும் பெருந்தன்மை வாய்ந்தவர். பெருந்தன்மையுடன் தான் இந்த விஷயத்தை அணுகியிருக்கிறார். கூட்டணி தர்மம் என்பது வேறு. இருந்தாலும் எம்பிக்கான மரியாதையையும், மதிப்பையும் ஜோதிமணிக்கு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.பெரம்பலூர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சுரேஷ் கூறியதாவது: திமுக கூட்டணியில் உறுதியாக உள்ளோம். அதேநேரத்தில் திமுகவினர் காங்கிரசை மதிக்க வேண்டும். அதனை பெரும்பாலான காங்கிரசார் விரும்புகின்றனர். காங்கிரஸ் இல்லாமல் ஆட்சி செய்ய முடியாது. அதிகாரத்துக்கு வர முடியாது. தமிழகம் முழுவதும் காங்கிரசை நம்பி மக்கள் ஓட்டுப் போடுகின்றனர். ஓட்டு போட்டுள்ளனர். காங்கிரஸ் எங்கு இருந்தால் வளருமோ, எங்கு இருந்தால் கட்சிக்கு பலன் பெறுமோ அந்த கூட்டணியில் தொடர தயாராக இருக்கிறோம். கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேறினால் அனைத்து தொகுதிகளிலும் திமுக தோல்வியை சந்திக்க நேரிடும். காங்கிரஸ் உறுப்பினர்களை திமுகவில் கட்டயாம் சேர்க்ககூடாது. இது கூட்டணியில் அதிருப்தியை வேகமாக பரவ செய்யும். இந்த விவகாரத்தில் அவர்கள் என்ன நடவடிக்கை வேண்டுமானாலும் எடுக்கட்டும். எங்களுக்கு ஆட்சேபனை இல்லை. எங்களுக்கு காங்கிரஸ் கட்சி முக்கியம். இவ்வாறு அவர் கூறினார். கே.எஸ்.அழகிரி கூறுகையில், காங்கிரஸ் நிர்வாகியை திமுகவில் சேர்த்தது அநாகரீகமான செயல் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

kamal 00
செப் 26, 2025 08:28

தில் இருந்தா அவனுக தலைவர் கிட்ட பேசுங்க..... பாப்போம்.... காமராஜர் பத்தி பேசுனத்துக்கே இருந்தீங்க.....


பேசும் தமிழன்
செப் 26, 2025 08:12

மானம் ரோசம் இருக்கக் கூடாது....கொடுப்பதை வாங்கி கொண்டு அமைதியாக இருக்க வேண்டும்......இல்லையென்றால் படியளக்கும் முதலாளி கோபித்து கொண்டு.... வாசலிலேயே நிறுத்தி விடுவார்.....


Kasimani Baskaran
செப் 26, 2025 04:13

லட்சங்களில் செலவு செய்து மாண்ட் பிளாங்க் பேணா வாங்குமளவுக்கு பெருந்தொகையிடம் செல்வச்செழிப்பு இருக்கிறது. காங்கிரஸ் கிட்டத்தட்ட தமிழகத்துக்கு சம்பந்தமில்லாத கட்சி என்ற அந்தஸ்தை பெறுகிறது. இதற்க்கு முன் தமிழக பாஜக இந்த அந்தஸ்தை பெற்று திராவிட கானம் பாடிக்கொண்டு இருந்தது இங்கு முக்கியத்துவம் பெறுகிறது.


pakalavan
செப் 26, 2025 01:17

எடப்பாடிகூடதான்்ஸசிக்கலா காலில் விழுந்து விழுந்து தரையை தொட்டு பதவிக்கு வந்தா,


Raj S
செப் 26, 2025 00:54

துண்டு சீட்டு தத்தி முன்னாடி கூட்டிட்டு போய், நீ ஏதோ எங்க மகாத்மா பத்துரூபா பாலாஜிய கண்டிச்சி பேசினியாமேனு கேட்டா, ஆமான்னு கூட சொல்ல தைரியம் இல்லாதவனுக்கெல்லாம் என்ன பேச்சு வேண்டிக்கிடக்கு?


Srinivasan Narasimhan
செப் 26, 2025 00:46

தமிழ் நாட்டில் வரும் தேர்தலில் எல்லாகட்சிகளும் தனி தனியாக நின்று தங்களின் பலத்தை நிரூபிகட்டும்


M Ramachandran
செப் 26, 2025 00:12

தமிழ்நாட்டில் பிச்சை எடுக்கும் நிலையில் காங்கரஸ். இடது கையால் தூக்கி போடுவதை லபக் என்று கவ்வி கொள்ள வேலாண்டிய நிலையில் யிருப்பதால் பேசக்கூடாது.


தமிழ் நிலன்
செப் 25, 2025 22:23

செந்தில் பாலாஜி விரைவில் திராவிட கட்சிகளை ஒருங்கிணைத்து முழுமையான தலைவராக உருவெடுக்கும் வாய்ப்பு உள்ளது.ஏனென்றால் திமுக,அதிமுக கட்சிகள் சில ஆண்டுகளில் உளுத்து போய்விடும்.


Keshavan.J
செப் 25, 2025 22:05

பரவாயில்லை....தமிழ் நாட்டு காங்கிரஸ் காரனுக்கு சூடு சொரணை இருக்கே!


pakalavan
செப் 25, 2025 20:33

எப்படியாவது ஓட்டை வருமான்னு பாஜக, அதிமுக எதிர்பாக்குது, ஆனால் திமுக கூட்டனி சிறிதும் விரிசல் இல்லாமல் வெற்றியடையும்,


Kjp
செப் 25, 2025 21:15

பாவம் அது உங்கள் ஆசை. கிடக்கிறது எல்லாம் கிடக்கட்டும் கிழவனை தூக்கி மனையில வை என்ற பழமொழி தான் ஞாபகத்திற்கு வருகிறது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை