உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இண்டியா கூட்டணிக்கு பின்னடைவு: பஞ்சாபில் அனைத்து தொகுதியிலும் ஆம்ஆத்மி போட்டி

இண்டியா கூட்டணிக்கு பின்னடைவு: பஞ்சாபில் அனைத்து தொகுதியிலும் ஆம்ஆத்மி போட்டி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சண்டிகர்: '' பஞ்சாபில் உள்ள 13 தொகுதிகளிலும் ஆம்ஆத்மி தனித்து போட்டியிடும். 15 நாளில் வேட்பாளர்களை அறிவிப்பேன்'' என டில்லி முதல்வரும், ஆம்ஆத்மி கட்சி ஒருங்கிணைப் பாளருமான கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இண்டியா கூட்டணி கட்சிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.கடந்த 2014 மற்றும் 2019 லோக்சபா தேர்தல்களில் வென்று மத்தியில் ஆட்சியை பிடித்த பா.ஜ., ஏப்ரலில் நடக்க இருக்கும் தேர்தலிலும் வெற்றி பெற்று ஹாட்ரிக் அடிக்கும் என பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது. பா.ஜ.,வுக்கு எதிரான ஓட்டுகளை ஒருங்கிணைத்தால் மட்டுமே அக்கட்சியை தேர்தலில் வீழ்த்த முடியும் என பெரும்பாலான எதிர்க்கட்சிகள் இண்டியா கூட்டணியை உருவாக்கியது. வரும் லோக்சபா தேர்தலில் தொகுதி பங்கீடு விஷயத்தில் உரசல் இருந்து வருகிறது. குறிப்பாக, மேற்கு வங்கம், டில்லி, பஞ்சாப், கேரள மாநிலங்களில் இந்த உரசல் வலுத்து மோதல் நிலைக்கு வந்தது. மேற்கு வங்கத்தின் 42 தொகுதிகளிலும் திரிணமுல் காங்கிரஸ் தனித்து போட்டியிடும் என முதல்வர் மம்தா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இந்நிலையில் சத்தீஸ்கரில் ஒரு தொகுதியிலும், பஞ்சாபில் மொத்தம் உள்ள 13 தொகுதிகளிலும் ஆம்ஆத்மி தனித்து போட்டியிடும். 15 நாளில் வேட்பாளர்களை அறிவிப்பேன் என டில்லி முதல்வரும், ஆம்ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளருமான கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இண்டியா கூட்டணி கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

தனித்து களம் இறங்கும் ஆம்ஆத்மி

இது குறித்து பஞ்சாபில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், கெஜ்ரிவால் பேசியதாவது: இரண்டு ஆண்டுகளுக்கு முன் பஞ்சாபில் நடந்த சட்டசபை தேர்தலில் 117ல் 92 இடங்களில் எங்களுக்கு வெற்றியை கொடுத்தீர்கள். ஆம்ஆத்மி அதிக இடங்களை பிடித்து சரித்திரம் படைத்தது. இரண்டு மாதங்களில் லோக்சபா தேர்தல் நடக்கும். சத்தீஸ்கரில் ஒரு தொகுதியிலும், பஞ்சாபில் மொத்தம் உள்ள 13 தொகுதிகளிலும் ஆம்ஆத்மி தனித்து போட்டியிடும். 15 நாளில் வேட்பாளர்களை அறிவிப்பேன். பஞ்சாபில் 13 தொகுதியிலும், சத்தீஸ்கரில் ஒரு தொகுதியிலும் போட்டியிடும் ஆம்ஆத்மி வேட்பாளர்கள் பெரும்பான்மையுடன் வெற்றிபெறச் செய்ய வேண்டும். கடந்த 75 வருடங்களில் பல கட்சிகள் ஆட்சி செய்தாலும் ரேஷன் கடைகளில் நடந்த வந்த திருட்டை யாராலும் தடுக்க முடியவில்லை. இவ்வாறு கெஜ்ரிவால் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

நரேந்திர பாரதி
பிப் 11, 2024 05:07

அப்போ பாஜக சொல்லித்தான் புள்ளிராஜா கூட்டணியையே அமைச்சு, இப்போ சுக்குநூறா உடைக்கிறானுங்க...அதுதான் கட்டுமர சாணக்கியத்தனம் பாருங்கள், தீயமூகவும் விரைவில் காங்கியை கழட்டி விடக்கூடும்


panneer selvam
பிப் 11, 2024 00:37

Kejriwal is cleaver and shrewd politician . He does not want to piggyback congress in his arena . He is not going to get any benefits from Congress as he does not have any presence where congress is prominent .


Ramesh Sargam
பிப் 10, 2024 23:24

காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவு. காங்கிரஸ் கட்சியின் அஸ்தமனம் துவங்கிவிட்டது. அதில் முக்கிய பங்கு அந்த புள்ளி வைத்த I.N..D.I.A. கூட்டணியில் உள்ள கெஜ்ரிவால், மமதா, அஃகிலேஷ் மற்றும் சிலர்.


A1Suresh
பிப் 10, 2024 22:59

பிப்ரவரி மூன்றாம் வாரத்தில் திஹார் இவரை அன்புடன் வரவேற்கிறது .


Priyan Vadanad
பிப் 10, 2024 22:48

அடுத்து DMK காங்கிரசை கழட்டிவிடும் நாளை எதிர்பார்க்கிறேன். இங்கும் ஊழல் வழக்குகள் இருக்கின்றனவே


Priyan Vadanad
பிப் 10, 2024 21:00

கேசரிவால் உங்களுக்கு நாடு முக்கியம் இல்லையே நீங்கள் பேசாமல் பாஜகவுடன் இணைந்துவிடலாம்


vadivelu
பிப் 11, 2024 07:11

கடைந்தெடுத்த ஊழல்பேர் கெஜ்ரிவால்.தான் மாட்டி கொள்ளாமல் கூட யிருப்பவர்களி தி ஹார் அனுப்பியவர்.இவர் ஆயிரம் லல்லு விற்கு சமம்.


Priyan Vadanad
பிப் 10, 2024 20:59

கெஜ்ரிவால் பாஜகவை தாஜாபடுத்த (கூல்பண்ண) எடுக்கும் நடவடிக்கை. வழக்குகளிருந்து தப்பிக்க பாஜக சொல்லும் வியூகம்.


Priyan Vadanad
பிப் 10, 2024 20:56

சில இதுகளுக்கு நாடு முக்கியம் அல்ல என்பது இதிலிருந்து தெளிவாகிறது.


RAMESH
பிப் 10, 2024 20:47

திருடர்களுக்கு ஆதரவு தரும் பஞ்சாபின் நிலை குறித்து வருத்தப்படுகிறேன் . சித்துவை எங்கும் காணவில்லையே , போர்கிஸ்தான் போய்விட்டாரா


M Ramachandran
பிப் 10, 2024 19:49

வரும் காலத்தில் ராவுளு தன் நடவடிக்கை களை மாற்றி கொள்ள வேண்டும்


மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி