மேலும் செய்திகள்
தென் ஆப்ரிக்கா ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு
3 hour(s) ago | 1
சிந்து பகுதி இந்தியாவுக்கு சொந்தமாகலாம்: ராஜ்நாத் சிங் பேச்சு
4 hour(s) ago | 2
புதுடில்லி: ''நாம் யார் என்பதை நாம் எதிர்கொள்ளும் பின்னடைவுகள் முடிவு செய்வதில்லை. அதற்கான நமது எதிர் வினைகளே முடிவு செய்யும் ,'' என துபாய் தேஜஸ் விமான விபத்து குறித்து பிரபல தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா கருத்து தெரிவித்துள்ளார்.பிரபல தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திராவும் விங் கமாண்டர் நமன்ஸ் சியால் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்ட சமூக வலைதளப்பதிவில் கூறியுள்ளதாவது: துபாய் நிகழ்ச்சியில் தேஜஸ் விமானி விங் கமாண்டர் மறைவு வருத்தம் அளிக்கிறது. கற்பனை செய்ய முடியாத இழப்பை சந்தித்துள்ள குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் சக ஊழியர்கள் நினைவாக எங்களது எண்ணங்கள் மற்றும் பிரார்த்தனைகளும் உள்ளன.இந்த சம்பவம், சர்வதேச நம்பிக்கைக்கும், அதை சுற்றி நமது கடின உழைப்புக்கும் பின்னடைவை ஏற்படுத்திவிட்டது என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும்.உள்நாட்டு விமானத்தை உருவாக்கும் திறன் , வளங்கள் மற்றும் உறுதிப்பாடு ஆகியவற்றைக் கொண்ட சில நாடுகளில் நாமும் ஒருவர் என்பதை நமக்கு நாமேயும், உலகிற்கும் நினைவூட்டிக் கொள்ள வேண்டும்.நாம் யார் என்பதை நாம் சந்திக்கும் பின்னடைவுகள் முடிவு செய்வதில்லை. அவற்றுக்கான நமது எதிர்வினைகளே முடிவு செய்யும். ஏரோஸ்பேஸ் துறையில் தன்னிறைவை நோக்கிய இந்தியாவின் பயணம் முக்கியமானது. அது கடினமான உழைப்பால் கிடைத்தது. அசைக்க முடியாத அளவுக்கு ஆற்றல் நிறைந்தது. இந்த தருணம், நமது தைரியத்தை வலுப்படுத்தும். நமது திறன்களை முன்னோக்கி நகர்த்த தங்கள் உயிரைப் பணயம் வைத்த துணிச்சலான வீரர்களுக்கு நாம் கடமைப்பட்டுள்ளோம்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
3 hour(s) ago | 1
4 hour(s) ago | 2