உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பள்ளி, மருத்துவமனைக்கு தொல்லை கொடுக்கும் வெடிகுண்டு மிரட்டல்கள்

பள்ளி, மருத்துவமனைக்கு தொல்லை கொடுக்கும் வெடிகுண்டு மிரட்டல்கள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ராஜஸ்தானில் 5 பள்ளிகளுக்கும், டில்லியில் மருத்துவமனைகளுக்கும் வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. வெடி குண்டு நிபுணர்கள் துப்பறியும் நாய்கள் மூலம் நடத்திய சோதனையில் எதுவும் சிக்கவில்லை.கடந்த மே மாதம் டில்லியில் உள்ள பல பள்ளிகளுக்கு இ மெயில் வாயிலாக மிரட்டல் வந்த நிலையில் இன்று ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் உள்ள 5 பள்ளிகளுக்கு இ மெயில் மூலம் மிரட்டல் வந்துள்ளது. பள்ளகளில் மாணவர்களை வெளியேற்றி, சோதனை நடத்தப்பட்டது.இது போல் டில்லி சர்வதேச இந்திராகாந்தி விமான நிலையம், சஞ்சய்காந்தி நினைவு மருத்துவமனை , குருதேவ்பகதூர் மருத்துவமனை, பாரா ஹிந்து ராவ், ஜனக்புரி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, தீன்தயாள், டாப்ரிஸ் தாதாதேவ், அருணா அஷ்ரப்அலி அரசு மருத்துவமனைகள் ஆகியவற்றிக்கு இ மெயில் மூலம் மிரட்டல் கடிதம் வந்துள்ளது. இதனையடுத்து நேற்று முதல் இன்று காலை வரை பல்வேறு இடங்களில் சோதனை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Lion Drsekar
மே 13, 2024 17:03

மெயில் அனுப்பியவரைக் கண்டு பிடிக்க முடியாது அப்படியே கண்டு பிடித்தாலும் அவர் மீது நடவடிக்கை எடுக்க கூடாது , இப்படித்தான் என்று உலகம் செல்கிறது


Natarajan Ramanathan
மே 13, 2024 14:55

இந்த மாதிரி வழக்குகளில் கடும் தண்டனை கொடுத்து அதை மீடியாக்களில் விளம்பரம் செய்தால் அதற்கு நல்ல பயன் இருக்கும் என்ன தண்டனை கொடுக்கப்பட்டது என்பதே தெரிவதில்லை


மேலும் செய்திகள்