உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பாலியல் குற்றச்சாட்டு: கண்காணிப்பு கேமரா காட்சிகளை மக்களிடம் காட்ட கவர்னர் முடிவு

பாலியல் குற்றச்சாட்டு: கண்காணிப்பு கேமரா காட்சிகளை மக்களிடம் காட்ட கவர்னர் முடிவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோல்கட்டா: மேற்கு வங்க கவர்னர் ஆனந்த போஸ் மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், கவர்னர் மாளிகையில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை மக்களிடம் காட்ட கவர்னர் முடிவு செய்துள்ளார்.மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு கவர்னராக உள்ள சி.வி.ஆனந்த போஸ் மீது, கவர்னர் மாளிகையில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றும் பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்தார்.இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். விசாரணைக்கு ஒத்துழைக்கும்படியும், கண்காணிப்பு கேமரா காட்சிகளை அளிக்கும்படியும் கவர்னர் மாளிகை அதிகாரிகளிடம் போலீசார் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் போலீசாருக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டாம் என, கவர்னர் சி.வி.ஆனந்த போஸ் தன் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளார். தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு பொய்யானது என நிரூபிக்க, கவர்னர் மாளிகை கண்காணிப்பு கேமரா காட்சிகளை பொது மக்களிடம் காண்பிக்க, கவர்னர் சி.வி.ஆனந்த போஸ் முடிவு செய்துள்ளார்.அதே சமயம், முதல்வர் மம்தா பானர்ஜி, மாநில போலீசார் மற்றும் எந்த அரசியல்வாதிக்கும் இதை காண்பிக்கப் போவதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.கவர்னர் மாளிகையில் இன்று நடக்கும் விழாவில், கண்காணிப்பு கேமரா காட்சிகளை, 100 பேருக்கு கவர்னர் சி.வி.ஆனந்த போஸ் காண்பிக்கவுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Krishna Ramachandran
மே 09, 2024 15:29

விசாரணை மம்தா பானர்ஜியின் அதிகாரிகள் செய்யப்போகிறார்கள் அவர்கள் என்ன உத்தமர்களா? சவுக்கு சங்கரை கஞ்சா கேஸ் ல் மாட்டினா மாதிரி தான் கவர்னரை போலிஸ் ஒன்றும் செய்ய முடியாது


Kasimani Baskaran
மே 09, 2024 13:50

கவர்னரின் பெயரை ரிப்பேராக்க திராவிட தொழில் நுணுக்கம் பயன்படுத்தப்பட்டுள்ளது


Mahendran Puru
மே 09, 2024 12:35

சட்டத்தின் சலுகைக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் வீரன்


Rengaraj
மே 09, 2024 12:15

ஓட்டுக்காக என்னவெல்லாம் செய்யத்துணிந்துவிட்டார்கள் என்பதா அல்லது அரசுநிர்வாகத்தில் வெளிப்படை தன்மை இல்லை என்பதா ? பொதுமக்கள் யாரை நம்புவது என்றே தெரியவில்லை அந்த அளவுக்கு நேர்மை, நியாயம், உண்மை ஆகியவை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து அரசியலிலும் அரசு நிர்வாகத்திலும் தரம் மேலும் மேலும் சீர்கெட்டுவருகிறது என்பதற்கு இந்த சம்பவம் மற்றுமொரு ஒரு உதாரணம்


ramesh
மே 09, 2024 10:37

இதை குற்ற சாட்டு வந்த உடனே செய்து இருந்தால் ஓரளவு நம்பலாம் இப்பொது அனைத்தையும் எடிட் செய்து முடித்த விடியோவை காட்டினாள் என்ன காட்டாவிட்டால் என்ன


M S RAGHUNATHAN
மே 09, 2024 11:07

கவலை படவேண்டாம் அந்த footage களை தடவியல் பரிசோதனைக்கு அனுப்பி உண்மையை வெளிக் கொணரலாம் மமதாவின் பொய் வெளி வரும்


அருண் பிரகாஷ் மதுரை
மே 09, 2024 10:16

மாநிலத்தின் உயர் பதவியில் இருக்கும் ஒருவர் தன் வீட்டில் கண்காணிப்பு கேமரா இருக்கும் நிலையில் பணிப்பெண்ணிடம் தவறாக நடந்து இருக்க வாய்ப்பு இல்லை.இது முழுக்க முழுக்க தேர்தலை மனதில் வைத்து மக்களை ஏமாற்ற மம்தா எடுத்த தவறான ஆயுதம்.நெற்றியில் கட்டுப் போட்டு பார்த்தார்.ஆனால் மக்கள் முன்னர் நடந்த நாடகத்தை நினைவு கூர்ந்து எதிர்வினை ஆற்றினர்.எனவே அடுத்த நாடகம்.கவர்னரின் முடிவு சரியே.மக்கள் மன்றத்தில் உண்மையைக் கூறலாம்.தேர்தல் முடிந்ததும் மம்தா இதைக் கண்டுகொள்ள மாட்டார்.


V. Kanagaraj
மே 09, 2024 09:49

கண்காணிப்பு கேமரா காட்சிகளை விசாரணை அதிகாரிகளிடம் காட்டமாட்டாராம் மக்களிடம் மட்டுமே காட்டுவாராம் பிஜேபி அரசியல் வாதிகள் மற்றும் கவர்னர்கள் அனைவரும் இந்திய அரசியல் சட்டத்துக்கு மதிப்பே கொடுக்க மாட்டார்கள் என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம் குற்றம் செய்யாததவர் ஏன் விசாரணைக்கு மறுக்கிறார்


ஆரூர் ரங்
மே 09, 2024 10:26

மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு ன்னு சொன்னது திமுக நிறுவனர்தானே?


JAYACHANDRAN RAMAKRISHNAN
மே 09, 2024 09:01

இப்படி தான் தமிழக முன்னாள் கவர்னர் ஒருவரை தற்போது கல்லூரி மாணவிகளை பாலியல் குற்றத்தில் ஈடுபட தூண்டியதாக தண்டிக்கப்பட ஒரு மதிப்பிற்குரிய பேராசியை ஒருவருடன் இணைத்து அரசியல் பழிவாங்கும் விதமாக வதந்திகள் பரப்பினார்கள் திராவிட கட்சிகள் இதனை முன் உதாரணமாக கொண்டு தான் மேற்கு வங்காளத்திலும் ஒரு முஸ்லிம் பிரமுகர் பலரை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி நில அபகரிப்பில் ஈடுபட்டதை மறைக்க இந்த புயல் வந்துள்ளது


Velan Iyengaar
மே 09, 2024 08:20

இந்நேரம் வெட்டவேண்டியதா வெட்டி தூக்க வேண்டியதை தூக்கி போட்டிருப்ப்பார்கள் கண்காணிப்பு கேமராக்கள் எல்லாம் ஒழுங்கா வேலை செய்ததா? முக்கியமான இடத்துல எல்லாம் கேமெராவே இருந்திருக்காது


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி