உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சிவசேனா எம்.பி.,யின் டிரைவருக்கு ரூ.150 கோடி நிலம் தானமாக கிடைத்தது எப்படி: துருவுகிறது போலீஸ்!

சிவசேனா எம்.பி.,யின் டிரைவருக்கு ரூ.150 கோடி நிலம் தானமாக கிடைத்தது எப்படி: துருவுகிறது போலீஸ்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை: சிவசேனா எம்.பி., சந்தீபன்ராவ் பூம்ரேவின் டிரைவருக்கு ரூ.150 கோடி நிலம் தானமாக கிடைத்தது குறித்து போலீசார் பல்வேறு கோணத்தில் துருவி துருவி விசாரணை நடத்தி வருகின்றனர்.மஹாராஷ்டிரா மாநிலம், அவுரங்கபாத் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சந்தீபன்ராவ் பும்ரே. சிவசேனா கட்சியில் எம்.பி., ஆக இருக்கிறார். தொடர்ச்சியாக 5 முறை எம்.எல்.ஏ.,வாக தேர்வு செய்யப்பட்டவர். இவரது மகன் விலாஸ் பும்ரே தற்போது எம்.எல்.ஏ.,வாக இருக்கிறார். இவர்களது டிரைவர் ஜாவேத் ரசூல் ஷேக். இவர் 13 ஆண்டுகளாக எம்.பி., சந்தீபன்ராவ் பும்ரே மற்றும் அவரது எம்.எல்.ஏ., மகன் ஆகியோருக்கு டிரைவராக பணி செய்து வருகிறார்.இந்நிலையில், டிரைவராக பணிபுரியும் ஜாவேத் ரசூல் ஷேக்கிற்கு, ஹைதராபாத்தின் முன்னாள் திவான் சலார் ஜங் குடும்பத்திடம் இருந்து, மஹாராஷ்டிராவில் ரூ.150 கோடி மதிப்புள்ள நிலம் தானமாக கிடைத்து உள்ளது. இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் பொருளாதார குற்றப் பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நல்ல உறவு

இது குறித்து, டிரைவர் ஜாவேத் கூறியதாவது: விசாரணைக்கு ஒத்துழைத்து வருகிறேன். குற்றப்பிரிவு போலீசார் கேட்ட ஆவணங்களை ஏற்கனவே சமர்ப்பித்து உள்ளேன். சலார் ஜங் குடும்பத்தின் சந்ததியினருடன் எனக்கு நல்ல உறவுகள் உள்ளன, எனவே அவர்கள் எனக்கு நிலத்தை பரிசாக அளித்தனர், என்றார்.சம்பாஜிநகரில் உள்ள ஜல்னா சாலையில் உள்ள தாவூத்புராவில் பிரதான நிலம் ஜாவேத்தின் பெயரில் இருப்பதாகக் கூறி, பர்பானியைச் சேர்ந்த ஒரு வழக்கறிஞர் அளித்த புகாரின் அடிப்படையில், ஜாவேத்துக்கு சம்மன் அனுப்பி, விசாரணை நடத்தினோம் என போலீஸ் கமிஷனர் பிரவீன் பவார் தெரிவித்தார்.சலார் ஜங் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் ஏன் தனது பெயரில் மூன்று ஏக்கர் நிலத்தை ஒரு சிறந்த இடத்தில் நன்கொடையாக வழங்குகிறார் என்பதை அவர் விளக்க வேண்டும் என இன்ஸ்பெக்டர் சாம்பாஜி பவார் தெரிவித்தார். குறிப்பிட்ட அந்த நிலம் தொடர்பாக நீண்ட காலமாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்துள்ளது. அந்த வழக்கு முடிவுக்கு வந்த நிலையில், 150 கோடி ரூபாய் மதிப்புள்ள மூன்று ஏக்கர் நிலம் டிரைவர் பெயரில் தானமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.சொத்துக்களை தானமாக வழங்குவது என்றால் ரத்த சம்பந்தமான உறவுகளுக்குள் மட்டுமே வழங்க முடியும் என்பது சட்டம். ஆனால், சம்பந்தப்பட்ட இருவரும் உறவினர்களும் அல்ல. அப்படி இருக்கும் பட்சத்தில் எப்படி இந்த சொத்து தானம் நடந்தது என்பது பலருக்கும் சந்தேகத்தை கிளப்பியுள்ளது.ஹைதராபாத்தைச் சேர்ந்த சலார் ஜங்கின் சந்ததியினர் ஏன் சத்ரபதி சம்பாஜிநகரில் டிரைவராக பணிபுரியும் ஒருவருக்கு நிலத்தை தானமாக கொடுக்க வேண்டும் என்பது குறித்து பல்வேறு கோணத்தில் போலீசார் துருவி துருவி விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

panneer selvam
ஜூன் 27, 2025 19:11

Boss , it is nothing but give and take . Some one got something and they have repaid in kind


Rathna
ஜூன் 27, 2025 18:07

அந்த வகையான வக்ப் நிலமாக இருக்கலாம்


Thravisham
ஜூன் 27, 2025 17:25

அட போங்க சார் வித்தவுட் டிக்கெட்ல வந்தவர் வாரிசுக்கே லட்சம் கோடிகளில் ஊழல் கொள்ளை பணம் இருக்கும் போது...


Iyer
ஜூன் 27, 2025 14:20

சிவசேனா எம்.பி., சந்தீபன்ராவ் பூம்ரே - எந்த சிவசேனா GROUP ? உத்தவ் GROUP ? அல்லது ஷிண்டே GROUP ?


ஆரூர் ரங்
ஜூன் 27, 2025 15:02

கொடுத்தவர் பெற்றவர் இருவருமே ஒரே மதம். நமக்கென்ன?.


Ramesh Sargam
ஜூன் 27, 2025 13:09

நம் வாழ்க்கை முடிந்தபிறகு நம் வொவொருவருக்கும் ஒரு ஆறடி நிலம்தான். அதுவும் சொந்தமில்லை. வேறு ஒருவர் வாழ்க்கை முடிந்தபிறகு அந்த நிலத்தில் அவர், மற்றொருவர் வரும் வரையில். அப்படி இருக்கையில் ஏன் இப்படி கோடிகளில் நிலத்தை வாங்குகின்றனர்? ஒரு சிலருக்கு அந்த ஆறடி நிலமும் கிடைக்காது. ஏன் என்றால் அவர் உடல் தீயில் எரிக்கப்படும்.


V RAMASWAMY
ஜூன் 27, 2025 12:59

ஊழலோ ஊழல், எம் பியின் டிரைவருக்கே இப்படி என்றால் தலைவருக்கு எவ்வளவு இருக்கும்? அரசியலுக்கு வருவதே ஆதாயத்துக்குத்தானே? மக்கள் சேவைக்கா வருகிறார்கள்?


Anantharaman Srinivasan
ஜூன் 27, 2025 12:57

தானமாக கொடுக்கும் முன் /வாங்கும் முன் நம் திராவிட மாடல் கோல்மால் அட்வகேட் ஆலோசனை பெற்றுயிருந்தால் மாட்டியிருக்க மாட்டார்கள்.


Jack
ஜூன் 27, 2025 12:52

ஹைதராபாட்ல நிறைய சைக்கிள் ரிக் ஷா ஓட்டுனர்கள் நிஜாம் பரம்பரை


V Venkatachalam
ஜூன் 27, 2025 12:12

இவங்கள எதனால் அடிக்கிறதுன்னு தெரியல.


Rajan A
ஜூன் 27, 2025 11:50

இதை எல்லாம் துருவ முடியாது.உச்சம் உடனே வந்து ஐடி, ஈடிக்கு தடை விதிக்கும்.