உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஷிவமொகா காங்., வேட்பாளர் மது பங்காரப்பா சஸ்பென்ஸ்

ஷிவமொகா காங்., வேட்பாளர் மது பங்காரப்பா சஸ்பென்ஸ்

ஷிவமொகா: ''லோக்சபா தேர்தலுக்கு, ஷிவமொகா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் தயாராக இருக்கிறார். இம்முறை ஆச்சரியமான வேட்பாளர் களமிறங்குவார்,'' என, கல்வித்துறை அமைச்சர் மது பங்காரப்பா தெரிவித்தார்.ஷிவமொகாவில் நேற்று அவர் கூறியதாவது:லோக்சபா தேர்தலுக்கு, மூன்று தொகுதிகளின் பொறுப்பை எனக்கு அளித்துள்ளனர். தட்சிண கன்னடா, ஷிவமொகா, உடுப்பி - சிக்கமகளூரு தொகுதிகளின் பொறுப்பை நான் ஏற்றுள்ளேன். மூன்றிலும், காங்கிரஸ் வேட்பாளர்களின் வெற்றிக்காக உழைப்பேன்.நிகழ்ச்சி ஒன்றில், நடிகர் சிவராஜ்குமாரை சந்தித்த துணை முதல்வர் சிவகுமார், லோக்சபா தேர்தலில் போட்டியிடும்படி, கூறினார். ஆனால் போட்டியிட அவர் மறுத்துவிட்டார். ஷிவமொகா லோக்சபா தொகுதியில், ஆச்சரியத்துக்குரிய வேட்பாளர் களமிறங்குவார்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை