மங்கோல்புரியில் துப்பாக்கிச்சூடு
மங்கோல்புரி: டில்லியின் புறநகர், மங்கோல்புரி பகுதியில் தனிப்பட்ட விரோதம் காரணமாக துப்பாக்கிச் சூடு நடத்தியதாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.மங்கோல்புரியின் எச் பிளாக் அருகே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், மூன்று பேரை கைது செய்து, ஒரு மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.தனிப்பட்ட விரோதம் காரணமாக துப்பாக்கிச்சூடு நடந்ததாக போலீசார் நடத்திய விசாரணையில் தெரிய வந்தது. சம்பந்தப்பட்ட நபர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.துப்பாக்கி எப்படி கிடைத்தது, குற்றப் பின்னணி ஏதேனும் இருக்கிறதா என்பது குறித்து விசாரணை நடக்கிறது.