உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பீஹாரிகள் தாக்கப்படும் போது அலட்சியம் காட்டுவதா? ராகுல் மீது பிரசாந்த் கிஷோர் பாய்ச்சல்

பீஹாரிகள் தாக்கப்படும் போது அலட்சியம் காட்டுவதா? ராகுல் மீது பிரசாந்த் கிஷோர் பாய்ச்சல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பாட்னா: 'டில்லியில் பீஹார் மக்களை கேலி செய்கிறார். பல்வேறு மாநிலங்களில் பீஹாரிகள் தாக்கப்படும்போது ராகுல் அலட்சியம் காட்டுகிறார்' என தேர்தல் வியூக நிபுணரும், ஜன் சுராஜ் கட்சி தலைவருமான பிரசாந்த் கிஷோர் தெரிவித்து உள்ளார்.பீஹாரின் நாளந்தாவில் நடந்த நிகழ்ச்சியில் பிரசாந்த் கிஷோர் பேசியதாவது: நிதிஷ் குமார் செய்த நல்ல பணிகளால், மக்கள், குறிப்பாக நாளந்தா மாவட்ட மக்கள், அவரை 20 ஆண்டுகளாக முதல்வராக ஆக்கினர். ஆனால் இன்று, நிதிஷ் குமாரின் உடல் மற்றும் மனநிலை சரி இல்லை. அவர் முதல்வராக நீடிக்க முடியாது. அவருக்கு வயதாகி விட்டது. அதனால் தான் மக்கள் இப்போது நிதிஷ் குமாரை தாண்டி, வேறு யாரையாவது யோசித்து பார்க்க வேண்டும்.

வேலைவாய்ப்பு

நிதிஷ் குமாரின் ஆட்சிக் காலத்தில், சாலைகள் மேம்படுத்தப்பட்டன, மின்சாரம் வழங்கப்பட்டது, ஆனால் மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கவில்லை. பீஹாரில் இருந்து மக்கள் வேறு மாநிலத்திற்கு இடம்பெயர்ந்து செல்வது நிற்கவில்லை. மற்ற மாவட்டங்களை விட நாளந்தா நிச்சயமாக வளர்ச்சியடைந்துள்ளது, ஆனால் இங்குள்ள மக்களின் வறுமை ஒருபோதும் ஒழிக்கப்படவில்லை. இதுவரை, இங்குள்ள மக்களின் குழந்தைகளுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கு எந்த ஏற்பாடும் செய்யப்படவில்லை. தேஜஸ்வி யாதவ் பேசுவதற்கு எந்தப் பிரச்னையும் இல்லை; தேர்தல் கமிஷன் மக்களின் பெயர்களை நீக்குகிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. பீஹார் மக்கள் வேலைவாய்ப்பை விரும்பு கிறார்கள். வெற்றுப் பேச்சுகளை அல்ல என்று முடிவு செய்துள்ளனர். யாரும் பொய்யான வாக்குறுதிகளை நம்ப போவதில்லை.

எஜமானர் அல்ல

பட்டியலில் பெயர்கள் இல்லாதவர்கள் தேர்தல் கமிஷனை எதிர்த்துப் போராடுவார்கள், தேர்தல் கமிஷன் எஜமானர் அல்ல; மக்களே எஜமானர்கள். மக்கள் யாருக்கு வாக்களிக்கிறார்களோ அவர்கள் வெற்றி பெறுவார்கள். ராகுல் டில்லியில் பீஹார் மக்களை கேலி செய்கிறார். பல்வேறு மாநிலங்களில் பீஹாரிகள் தாக்கப்படும்போது அலட்சியம் காட்டுகிறார். இவ்வாறு பிரசாந்த் கிஷோர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !