உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஷ்ரேயஸ் ஐயர் நலம்: உறுதி செய்தார் சூர்யகுமார்

ஷ்ரேயஸ் ஐயர் நலம்: உறுதி செய்தார் சூர்யகுமார்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ஷ்ரேயஸ் ஐயர் நலமாக இருக்கிறார். குறுஞ்செய்திகளுக்கு பதிலளிக்கிறார். ஆபத்தில் இருந்து மீண்டு விட்டார் என இந்திய டி20 அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.சிட்னியில் நடந்த மூன்றாவது ஒருநாள் போட்டியில் (அக். 25) இந்திய அணி, ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. இதில் ஹர்ஷித் ராணா வீசிய பந்தை அலெக்ஸ் கேரி துாக்கி அடிக்க, நீண்ட துாரம் பின்னோக்கி ஓடிச் சென்று அற்புதமாக பிடித்தார் இந்திய துணை கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர், 30. அப்போது தடுமாறி விழுந்ததில் இடது விலா எலும்பு பகுதியில் காயம் ஏற்பட்டது. உடனே சிட்னியில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். இவரது மண்ணீரலில் சிதைவு ஏற்பட்டிருப்பது தெரிய வந்தது. ரத்தக்கசிவு காணப்பட்டதால், தீவிர சிகிச்சை பிரிவில் (ஐ.சி.யு.,) அனுமதிக்கப்பட்டார். தற்போது இந்திய டி20 அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் கூறியதாவது: ஷ்ரேயஸ் ஐயர் நலமாக இருக்கிறார். குறுஞ்செய்திகளுக்கு பதிலளிக்கிறார். ஆபத்தில் இருந்து மீண்டு விட்டார். இன்னும் சில நாட்கள் ஷ்ரேயஸ் ஐயர் கண்காணிப்பில் இருப்பார். தற்போது எந்த ஆபத்தும் இல்லை. கடந்த இரண்டு நாட்களாக நான் அவருடன் பேசி வருகிறேன். அவர் நன்றாக பதில் அளிக்கிறார். மருத்துவர்கள் அவருடன் இருக்கிறார்கள். இவ்வாறு சூர்யகுமார் யாதவ் கூறியுள்ளார். ஷ்ரேயஸ் ஐயர் குணம் அடைந்து வருவது இந்திய ரசிகர்கள் மத்தியில் ஆறுதலை ஏற்படுத்தி இருக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Vasan
அக் 28, 2025 14:13

Call him Shreyas.


சின்ன சுடலை ஈர வெங்காயம் ராமசாமி
அக் 28, 2025 20:21

அவர் பெயர் ஷ்ரேயஸ் அய்யர். அப்படி கூப்பிடுவது என்ன தவறு? அப்பா ஆட்சியில் ஜாதி ஒழிச்சிட்டாங்களா? சொல்லவேயில்லை.


சேகர்
அக் 28, 2025 13:44

விரைவில் குணமடைய வேண்டுகிறேன்


Ramesh Sargam
அக் 28, 2025 10:59

இறைவனுக்கு நன்றி. ஈசனுக்கு நன்றி.


sri
அக் 28, 2025 10:39

நல்ல விளையாட்டு வீரர் விரைவில் குணமடைய வேண்டும்


V.Mohan
அக் 28, 2025 10:36

இப்போதைய சூழ்நிலையில் ஃபீல்டிங் செய்யம் போது தாவி குதித்து டைவ் செய்து பந்தை பிடிக்க வேண்டும் தடுக்க வேண்டும் என அனைவராலும் எதிர்பார்க்கப் படுகிறது. இது எவ்வளவு பெரிய சிக்கல்களை தருகிறது. ஸ்ரேயஸ் ஐயர் அக்ரோபேடிக் தனமாக கேட்ச் பிடித்து அதில் விழுந்து காயமடைந்தார். அவர் கேட்சை தவற விட்டிருந்தால்..... அப்போது அடிபட்டிருந்தால்... இப்போது அவரைப்பற்றி கவலைப்படுபவர்கள் அதே அளவு கவலை படுவார்களா?? எப்பொழுதும் வெற்றியே பெற முடியாது. சரியாக திறமையாக விளையாடுபவர்களை மக்கள் ஊக்குவிக்க வேண்டும். தற்காலத்து விளையாட்டு சூழலில் அவர்களது நிலைமை கடுமையானது. ஒரு சில தவறுகளால் ஓரம் கட்டப்பட்ட பிருத்வி ஷா, கருண் நாயர். போன்ற எல்லா ஃபார்மேட்களிலும் விளையாடக்கூடிய பல இளம் வீரர்களை சரிப்படுத்தி உபயோகிப்பது இந்திய கிரிக்கெட்டிற்கு பலன் கிடைக்கும்.


புதிய வீடியோ