உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இந்திய வீரர் சுக்லா குழு இன்று விண்வெளி நிலையத்திற்கு பயணம்; மைல்கல் என நெகிழ்ச்சி பேட்டி

இந்திய வீரர் சுக்லா குழு இன்று விண்வெளி நிலையத்திற்கு பயணம்; மைல்கல் என நெகிழ்ச்சி பேட்டி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பால்கன்-9 ராக்கெட்டில் மூலம் இன்று (ஜூன் 25) நண்பகல் 12 மணிக்கு இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா குழு விண்வெளி நிலையத்திற்கு செல்கிறது. ''இந்த பணி ஒரு மைல்கல். இந்த பணியின் வெற்றிக்காக இந்திய மக்கள் பிரார்த்தனை செய்யுங்கள்'' என சுக்லா தெரிவித்துள்ளார். அமெரிக்காவின், 'ஆக்சியம் ஸ்பேஸ்' தனியார் நிறுவனம், சர்வதேச விண்வெளி நிலையத்திற்கான பயண திட்டத்தில் ஈடுபட்டுள்ளது.அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா மற்றும் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ இணைந்து, இப்பணியை செய்து வருகிறது.இத்திட்டத்தின் கீழ், இந்திய விமானப்படையின் குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லா, அமெரிக்காவைச் சேர்ந்த மிஷன் கமாண்டர் பெக்கி விட்சன், ஹங்கேரியைச் சேர்ந்த திபோர் கபு மற்றும் போலந்தைச் சேர்ந்த ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி ஆகியோர் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்று, 14 நாட்கள் தங்கி ஆய்வு செய்ய உள்ளனர். பல்வேறு காரணங்களால் இந்த பயணம் தொடர்ந்து 7 முறை ஒத்தி வைக்கப்பட்டது.இந்நிலையில், அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து பால்கன்-9 ராக்கெட்டில் மூலம் இன்று (ஜூன் 25) நண்பகல் 12 மணிக்கு இந்திய வீரர் சுக்லா குழு விண்வெளி நிலையத்திற்கு செல்கிறது. 28 மணிநேர பயணத்திற்கு பிறகு, நாளை (ஜூன் 26) மாலை 4.30 மணிக்கு சர்வதேச விண்வெளி நிலையத்தை ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் விண்கலம் அடைய உள்ளது. பல்வேறு காரணங்களால் தொடர்ந்து 7 முறை ஒத்திவைக்கப்பட்டு தற்போது 8வது முறையாக வெற்றிகரமாக விண்ணில் பாய உள்ளது.

ஒரு மைல்கல்

இது தொடர்பாக, சுபன்ஷூ சுக்லா கூறியதாவது: இந்திய மக்களுக்கு நான் ஒன்று சொல்ல விரும்புகிறேன். இந்த பணி ஒரு மைல்கல். இந்த பணியின் வெற்றிக்காக இந்திய மக்கள் பிரார்த்தனை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Ramesh Sargam
ஜூன் 25, 2025 12:19

ஒரு சில தடங்கல்களுக்கு பிறகு, கால தாமதத்திற்கு பிறகு ஒருவழியாக பயணம். இனி பயணம் எந்தவித தங்குதடையுமின்றி சென்று இலக்கை அடைந்து சாதனை படைக்கவேண்டும். அவர்கள் அனைவரும் சாதனை படைத்துவிட்டு மீண்டும் பத்திரமாக பூமிக்கு திரும்பவேண்டும். வாழ்த்துக்கள்.


pmsamy
ஜூன் 25, 2025 12:07

ok


M. PALANIAPPAN, KERALA
ஜூன் 25, 2025 10:30

விண்வெளி வீரர்கள் நால்வருக்கும் நல் வாழ்த்துகள், பயணம் வெற்றிகரமாக அமையவும், 14 நாட்கள் ஆராய்ச்சி சிறப்புடன் அமையவும் இறைவன் அருள் புரிய வேண்டுகிறேன்


Srinivasan Narayanasamy
ஜூன் 25, 2025 09:53

போய்ட்டு பத்தரமா வாங்க ...


subramanian
ஜூன் 25, 2025 09:16

இந்த திட்டம் வெற்றிகரமாக இருக்க வேண்டும். எல்லோரும் நல்லபடியாக திரும்பி வர எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.