மேலும் செய்திகள்
சாலை விபத்தை தடுக்க சிறப்பு இயக்கம்: ராஜஸ்தான் அரசு இலக்கு
26 minutes ago
அனில் அம்பானிக்கு அடுத்த சிக்கல்: மத்திய அரசும் விசாரணையை துவக்கியது
28 minutes ago | 1
'பெங்களூரு: கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றிய முதல்வர் சித்தராமையாவே, உண்மையான ஸ்ரீராமன்,'' என சட்ட மேலவையில் ம.ஜ.த., உறுப்பினர் மரிதிப்பே கவுடா புகழாரம் சூட்டினார். அத்துடன், தங்களது கூட்டணி கட்சியான பா.ஜ.,வையும் கடுமையாக விமர்சித்து பேசியதால், அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு நிலவுகிறது.லோக்சபா தேர்தலுக்கு, பா.ஜ., மற்றும் ம.ஜ.த., கூட்டணி வைத்துள்ளன. தொகுதி பங்கீடு தொடர்பாக, ஆலோசனை நடக்கிறது. இன்னும் சில நாட்களில் தொகுதி பங்கீடு முடிவாக வாய்ப்புள்ளது. இதற்கிடையில் இவ்விரு கட்சிகளின் தலைவர்கள், எம்.எல்.ஏ.,க்களை ஈர்க்க, காங்கிரஸ் முயற்சிக்கிறது.ஏற்கனவே பா.ஜ.,வின் சிவராம் ஹெப்பார், சோமசேகர் பா.ஜ.,வில் இருந்து விலகி, காங்கிரசுக்கு செல்ல தயாராகின்றனர்.ம.ஜ.த., - எம்.எல்.ஏ.,க்கள் சிலருக்கும், காங்கிரஸ் வலை விரித்துள்ளது. பா.ஜ., ம.ஜ.த.,வின் சில தலைவர்கள், முதல்வர் சித்தராமையாவையும், துணை முதல்வர் சிவகுமாரைபகிரங்கமாக புகழ்ந்து துதி பாடுகின்றனர். வாக்குறுதி திட்டங்களை வரவேற்கின்றனர்.இதனால், எதிர்க்கட்சி தலைவர்கள் கடுப்படைந்துள்ளனர். இந்நிலையில், ம.ஜ.த., உறுப்பினர் மரிதிப்பேகவுடா முதல்வரை ஸ்ரீராமனுடன் ஒப்பிட்டு பேசியது, சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.சட்ட மேலவையில் பட்ஜெட் மீதான விவாதம் நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற ம.ஜ.த., உறுப்பினர் மரிதிப்பேகவுடா பேசியதாவது:பல இடையூறுகளுக்கு இடையே, ஐந்து வாக்குறுதி திட்டங்களை முதல்வர் சித்தராமையா செயல்படுத்தினார். சட்டசபை தேர்தலுக்கு முன், கர்நாடக மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிபடி, ஐந்து திட்டங்களை நிறைவேற்றினார். இந்த மண்ணில் ஸ்ரீராமன் இருந்தால், அது முதல்வர் சித்தராமையாதான்.சிலர், ஸ்ரீராமனை குத்தகைக்கு எடுத்து கொண்டவர்களை போன்று பேசுகின்றனர். ஸ்ரீராமன் என்றால் சொன்னபடி நடந்து கொள்பவர். அதுபோன்று முதல்வர் சித்தராமையா, வாக்குறுதி திட்டங்களை செயல்படுத்திய புண்ணியவான். ராமன் பெயரை கூறி, ஆட்சிக்கு வந்தவர்கள் செய்வது என்ன?வாக்குறுதி திட்டங்களால், மாநிலத்தின் 6 கோடி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆண்டு தோறும் ஒவ்வொருவருக்கும், நேரடியாகவும், மறைமுகமாகவும் 50,000 முதல் 60,000 ரூபாய் அரசிடம் இருந்து கிடைக்கிறது. சொன்னதை செய்து காண்பித்தது, காங்கிரஸ் அரசு.பா.ஜ.,வினர் பேச்சு தவறுபவர்கள். மத்திய அரசால், வரி விஷயத்தில் நமக்கு அநியாயம் நடக்கிறது. நாட்டிலேயே மிக அதிகமாக வரி செலுத்தும் மாநிலங்களில், கர்நாடகா இரண்டாவது இடத்தில் உள்ளது. நியாயமாக நமக்கு கிடைக்க வேண்டிய பங்கை தாருங்கள் என கேட்பதில் தவறென்ன.டில்லியில் போராட்டம் நடத்தினால், பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக, காங்கிரஸ் கீழ்த்தரமான அரசியல் செய்வதாக, பா.ஜ.,வினர் குற்றம் சாட்டுகின்றனர். நம் பங்கு வரி பணத்தை கேட்பதில் எந்த தவறும் இல்லை. பா.ஜ.,வினருக்கு தைரியம் இருந்தால், முதலில் நமக்கு வர வேண்டிய வரியை பெற்று தரட்டும்.இவ்வாறு அவர் பேசினார்.எதிர்க்கட்சியான காங்கிரசின் முதல்வர் சித்தராமையாவை புகழ்ந்து தள்ளியது மட்டுமல்லால், தன் கட்சியுடன் கூட்டணி வைத்துள்ள பா.ஜ.,வையும் மரிதிப்பே கவுடா கடுமையாக விமர்சித்தது, அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. மரிதிப்பே கவுடா மீது ம.ஜ.த., தலைமை ஒழுங்கு நடவடிக்கை எடுத்தாலும், ஆச்சர்யப்பட முடியாது.
26 minutes ago
28 minutes ago | 1