மேலும் செய்திகள்
பேட்டரி சேமிப்பு மையங்களுக்கு அமெரிக்காவில் மக்கள் எதிர்ப்பு
59 minutes ago
மருத்துவமனையில் பரூக் அப்துல்லா அனுமதி
1 hour(s) ago
பெங்களூரு : வால்மீகி மேம்பாட்டு ஆணையம், 'மூடா' முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று, முதல்வர் சித்தராமையா ராஜினாமா செய்ய கோரி, பா.ஜ., - ம.ஜ.த.,வினர் நடத்தும் பாதயாத்திரை, இன்று பெங்களூரில் துவங்குகிறது. இரு கட்சிகளின் தலைவர்களும் எட்டு நாட்கள் பாதயாத்திரையாக நடந்து, 10ம் தேதி மைசூரில் முடிக்கின்றனர்.'மூடா' எனும் மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் சார்பில், முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு 14 மனைகள் ஒதுக்கியதில் முறைகேடு; வால்மீகி மேம்பாட்டு ஆணையத்தில் நடந்த முறைகேடு ஆகியவற்றை கண்டித்து, பா.ஜ., - ம.ஜ.த., கட்சிகள் ஒரு மாதத்துக்கும் மேலாக ஆங்காங்கே போராட்டம் நடத்தி வருகின்றன. கெங்கேரியில் பூஜை
இந்த முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று, முதல்வர் ராஜினாமா செய்யும்படி வலியுறுத்தி, பெங்களூரில் இருந்து மைசூரு வரை, பா.ஜ., - ம.ஜ.த.,வினர் பாதயாத்திரை நடத்த முடிவு செய்தனர். இந்த பாதயாத்திரை, நகரின் கெங்கேரியில் உள்ள கெம்பம்மா கோவிலில் பூஜையுடன் இன்று காலை துவங்குகிறது.இது குறித்து, மாநில பா.ஜ., தலைவர் விஜயேந்திரா, மல்லேஸ்வரத்தில் நேற்று கூறியதாவது:மாநில காங்கிரஸ் அரசின் முறைகேடுகளை கண்டித்து, பா.ஜ., - ம.ஜ.த., கூட்டாக மைசூருக்கு பாதயாத்திரை மேற்கொள்கிறது. ஏழைகள், எஸ்.சி., - எஸ்.டி., சமுதாய விரோத அரசின், ஓராண்டு சாதனை பூஜ்யம்.சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு, அனைத்து சமுதாயத்தினருக்கு அநீதி செய்துள்ளது. எஸ்.சி., - எஸ்.டி.,யினருக்கு ஒதுக்கப்பட்ட நிதியை கொள்ளை அடித்துள்ளது. எடியூரப்பா, குமாரசாமி
முன்னாள் முதல்வர் எடியூரப்பா, மத்திய கனரக தொழில் துறை அமைச்சர் குமாரசாமி ஆகியோர், இன்று காலை 8:30 மணிக்கு பாதயாத்திரையை துவக்கி வைக்கின்றனர். அரசியல் வரலாறு
முதல் நாளில், 16 கி.மீ., துாரமும்; நாளை 22 கி.மீ., துாரமும்; வரும் 5ல், 20 கி.மீ., துாரமும்; வரும் 6ல், 20 கி.மீ., துாரமும்; வரும் 7ல், 16 கி.மீ., துாரமும்; வரும் 8ல், 17 கி.மீ., துாரமும்; வரும் 9ல், 10 கி.மீ., துாரமும்; வரும் 10ல், 7 கி.மீ., துரமும் என 128 கி.மீ., துாரம் நடக்கிறோம். தினமும் 8,000 முதல், 10,000 தொண்டர்கள் பங்கேற்பர்.இறுதி நாளில், மைசூரில் பிரமாண்டமான பொது கூட்டம் நடக்கும். அதில், இரு கட்சிகளின் தேசிய தலைவர்கள் பங்கேற்பர். கர்நாடக அரசியல் வரலாற்றில், முதல் முறையாக, முதல்வர் இல்லாமல் அமைச்சரவை கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. கவர்னர் நோட்டீசுக்கு பதில் அளிக்காமல், அதை திரும்ப பெறும்படி, காங்கிரசார் கூறுகின்றனர்.சட்டசபையில் எங்கள் கேள்விகளுக்கு அரசு பதில் அளிக்கவில்லை. சட்டத்தை விட பெரியவர்கள் யாரும் இல்லை. எங்கள் போராட்டத்துக்கு, மாநிலத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் தொண்டர்கள் வருவர்.துணை முதல்வர் சிவகுமார், ஊழலின் பிதாமகன். முதல்வரும், துணை முதல்வரும் எங்கள் கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.தொடர்ந்து, பாதயாத்திரை துவங்கும் பகுதியில் நடந்து வரும் ஏற்பாடுகளை, விஜயேந்திரா ஆய்வு செய்தார்.
59 minutes ago
1 hour(s) ago