மேலும் செய்திகள்
தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 சரிவு; ஒரு சவரன் ரூ.91,680!
2 hour(s) ago | 1
தட்சசீலா பல்கலை., பட்டமளிப்பு விழா
4 hour(s) ago
காரைக்கால் மீனவர்கள் திரும்பினர்
4 hour(s) ago
புதுடில்லி: கர்நாடகா முதல்வர் பதவியை டிகே சிவகுமாருக்கு வழங்க வேண்டும் என்று அவரது ஆதரவு எம்எல்ஏக்கள், காங்கிரஸ் தலைமையிடம் நேரில் சென்று வலியுறுத்தியுள்ளனர்.கர்நாடக முதல்வர் பதவியில் இருந்து சித்தராமையாவை மாற்றிவிட்டு, டி.கே. சிவகுமார் முதல்வராக பதவியேற்பார் என பலமான விவாதங்கள் எழுந்தன. சிவகுமாருக்கு ஆதரவு தெரிவித்து பல எம்எல்ஏக்களும் குரல் எழுப்பியதால் கர்நாடக அரசியலில் திடீர் சலசலப்பு உருவானது.ஆனால் நான் 5 ஆண்டுகள் முதல்வராக இருப்பேன் என்று சித்தராமையா திட்டவட்டமாக கூறிவிட்டார். மேலும், அடுத்தாண்டும் தானே பட்ஜெட் தாக்கல் செய்வேன் என்றும் அவர் கூறியுள்ளார். ஆனால், டிகே சிவகுமாரும் மறைமுகமாக நெருக்கடி கொடுத்து வருகிறார்.இந்த நிலையில், துணை முதல்வர் டிகே சிவகுமார் ஆதரவு எம்எல்ஏக்கள் 6 பேர் நேற்று டில்லி சென்றுள்ளனர். அங்கு காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவை சந்தித்து பேசியுள்ளனர். கர்நாடகா காங்கிரஸ் அரசின் எஞ்சிய 2.5 ஆண்டு முதல்வர் பதவியை டிகே சிவகுமாருக்கு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். இதனைக் கேட்ட கார்கே, 'தலைவர் பொறுப்பு, அமைச்சரவை மாற்றம் உள்ளிட்ட விவகாரத்தில் ராகுல் தான் முடிவெடுப்பார். இந்த கோரிக்கையுடன் டில்லி வருவதை முதலில் தவிர்க்க வேண்டும். ஏனெனில், ஊடகங்கள் இந்த விவகாரத்தை வேறு மாதிரி கொண்டு சென்று விடுவார்கள்,' என்று காங்., எம்எல்ஏக்களிடம் அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. காங்கிரஸ் தேசிய தலைவர் கார்கே பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக, நாளை கர்நாடகாவுக்கு செல்ல இருக்கிறார். இந்தப் பயணத்தின் போது, டிகே சிவகுமாரின் ஆதரவாளர்கள் மேலும் பலர் கார்கேவை சந்தித்து இதே கோரிக்கையை முன்வைக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. இதனிடையே, இன்றும் நாளையும் மைசூரு மற்றும் சாம்ராஜ்நகர் செல்ல இருந்த முதல்வர் சித்தராமையா, தனது பயணத்தை திடீரென ரத்து செய்துள்ளார்.
2 hour(s) ago | 1
4 hour(s) ago
4 hour(s) ago