உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வீட்டு மனைகளை ஒப்படைப்பதாக சித்தராமையா மனைவி கடிதம்

வீட்டு மனைகளை ஒப்படைப்பதாக சித்தராமையா மனைவி கடிதம்

பெங்களூரு: 'எனக்கு வழங்கிய 14 வீட்டு மனைகளையும் திரும்பப் பெற்றுக்கொள்ளுங்கள்' என, 'முடா'வுக்கு கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதி எழுதிய கடிதம் நேற்றிரவு வெளியானது.முடா வழக்கில் முதல்வர் சித்தராமையா மீது லோக் ஆயுக்தா போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அமலாக்கத் துறையும் நேற்று வழக்குப் பதிவு செய்தது.இந்நிலையில் நேற்று இரவு முதல்வர் சித்தராமையாவை, பெங்களூரு காவிரி இல்லத்தில் மாநில அமைச்சர்கள் சந்தித்து ஆலோசனை நடத்தினர். இந்த சந்திப்பு முடிந்த சிறிது நேரத்தில், முடாவுக்கு, சித்தராமையாவின் மனைவி பார்வதி எழுதிய கடிதம் வெளியானது.அந்த கடிதத்தில், 'நீங்கள் வழங்கிய 14 வீட்டு மனைகளை திரும்பப் பெற்றுக் கொள்ளுங்கள்' என, அவர் கூறியுள்ளார்.வழக்குக்கு பயந்து முடாவுக்கு கடிதம் எழுதும்படி, மனைவி பார்வதிக்கு சித்தராமையா கூறி இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.சித்தராமையா மீது அளித்த புகார் குறித்த விசாரணைக்கு ஆஜராகும்படி ஸ்நேகமயி கிருஷ்ணாவுக்கு, லோக் ஆயுக்தா நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இன்று காலை 7:30 மணிக்கு அவர் ஆஜராகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

R K Raman
அக் 01, 2024 12:25

திருப்பிக் கொடுத்தல் செய்த ஊழல் சரியாகிவிடும் என்று கோர்ட் சொல்ல வாய்ப்பு உள்ளது.. திருந்தி விட்டதாக


Indhuindian
அக் 01, 2024 09:23

கூட்டணி தர்மத்தை பிரஷாமால் பின்பற்றும் காங்கிரஸ் இது அஃ மார்க் திராவிட மாடல் இதைத்தான் நமது அமைச்சர் மாண்புமிகு செந்தில் பாலாஜியும் செஞ்சார். நாந்தான் வாங்கின காசெல்லாம் திருப்பிகொடுத்துட்டேனே என்னை வுட்டுடுங்கன்னு. அதே கதைதான் இங்கேயும் சொல்றாங்க. அகப்பட்டுக்கிட்டவனுக்கு அஷ்டமத்துலே சனி ஓடி போனானுக்கு ஒன்பதாமிடத்துலே குரூ அப்டீம்பங்களே அதுதான் சரியா இருக்கு


ரெட்டை வாலு ரெங்குடு
அக் 01, 2024 07:22

சித்தய்யா கோமாளித்தனம் அம்பலம் ஆச்சு கோமையா .. ஆடுறா கோமா ஆடு ரொம்ப ஆடினா ஆப்பு தான் டோய் காத்திருக்கு ..


Rajan
அக் 01, 2024 07:17

பணம் கொள்ளையடித்து பின்னர் செய்திகள் வெளியாகி, கேஸ் பயம் வந்து, திருப்பி தந்தால், திருடனை கோர்ட் மன்னிக்குமா? இன்னொரு தியாக செம்மல். பதவியை தக்க வைக்க நாடகம்


Duruvesan
அக் 01, 2024 06:20

செந்திலு கூட எல்லா பணத்தையும் குடுத்தாரு, ஆனாலும்


ரெட்டை வாலு ரெங்குடு
அக் 01, 2024 06:07

திருட்டு புத்தி கன்னடத்து கேடி ராமையாவிற்கு ஐடியா இங்குட்டு உள்ள சமாதியில் இருந்து வந்திருக்கும் .அவரும் பிரச்சனைன்னா உடனே சாஷ்டாங்க கும்பிடு போட்டுட்டு நல்லபிள்ளை மாதிரி நாடகம் ஆடிட்டு போயிடுவார் .


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை