உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சிக்கிம், அருணாச்சல் ஓட்டு எண்ணிக்கை தேதி மாற்றம்

சிக்கிம், அருணாச்சல் ஓட்டு எண்ணிக்கை தேதி மாற்றம்

புதுடில்லி: லோக்சபா தேர்தலுடன், சிக்கிம், அருணாச்சல பிரதேசம், ஆந்திரா மற்றும் ஒடிசா சட்டசபைகளுக்கும் தேர்தல் நடக்கின்றன. இந்நிலையில், சிக்கிம் மற்றும் அருணாச்சல பிரதேச சட்ட சபைகளுக்கான ஓட்டு எண்ணிக்கை, ஜூன் 4க்கு பதிலாக ஜூன் 2ம் தேதிக்கு மாற்றி தேர்தல் கமிஷன் நேற்று அறிக்கை வெளியிட்டது. அந்த இரு மாநில சட்டசபைகளின் பதவிக்காலம் ஜூன் 2ல் முடிவுக்கு வருகிறது. பதவிக்காலம் முடிவதற்கு முன்பே தேர்தல் நடத்தி முடிவுகள் அறிவிக்கப்பட வேண்டும் என்ற காரணத்தால், ஓட்டு எண்ணிக்கை தேதி மாற்றப்பட்டுள்ளது. இந்த இரு மாநிலங்களின் லோக்சபா தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை ஏற்கனவே அறிவிக்கப்பட்டது போல, ஜூன் 4ல் நடத்தப்படும் என, அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை