உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ரூ.2000 கோடி பள்ளி கட்டுமான பணி ஊழல்: ஆம் ஆத்மி முக்கிய தலைவர்களுக்கு சம்மன்

ரூ.2000 கோடி பள்ளி கட்டுமான பணி ஊழல்: ஆம் ஆத்மி முக்கிய தலைவர்களுக்கு சம்மன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி:அரசு பள்ளிகளில் வகுப்பறைகள் கட்டுவதில் ரூ. 2000 கோடி ஊழல் நடந்துள்ளதாக எழுந்த குற்றச்சாட்டில் டில்லி மாஜி அமைச்சர்கள் மணீஷ் சிசோடியா, சத்யேந்தர் ஜெயின் ஆகியோருக்கு ஊழல் தடுப்பு பிரிவு சம்மன் அனுப்பி உள்ளது. ஆம் ஆத்மியின் மூத்த தலைவர் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் மணீஷ் சிசோடியா, சத்யேந்தர் ஜெயின். இவர்கள் மீது அரசு பள்ளிகளுக்கு வகுப்பறை கட்டியது தொடர்பாக ரூ.2000 கோடி ஊழல் நடந்ததாக ஏப்ரல் 30ம் தேதி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. கட்டுமான பணிகள் அளிக்கப்பட்ட ஒப்பந்த நிறுவனங்களில் பெரும்பான்மையானவை ஆம் ஆத்மி கட்சியுடன் தொடர்பு உடையவை என்பதில் இந்த குற்றச்சாட்டு அதிக கவனம் பெற்றுள்ளது. இந் நிலையில் இந்த குற்றச்சாட்டுகள் குறித்து ஜூன் 6ம் தேதி சத்யேந்தர் ஜெயின் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று சம்மனில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதே போல, ஜூன் 9ம் தேதி மணீஷ் சிசோடியா ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.சம்மன் குறித்து ஆம் ஆத்மி தரப்பில் கூறப்பட்டு உள்ளதாவது; பா.ஜ.,வால் வேண்டுமென்று நிகழ்த்தப்பட்ட அரசியல் உத்தி. ஆம் ஆத்மி தலைவர்களை குறி வைத்து ஊழல் வழக்கு தொடுக்கின்றனர். ஊழல் தடுப்புப் பிரிவு தவறாக பயன்படுத்தப்படுகிறது என்று தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

என்றும் இந்தியன்
ஜூன் 04, 2025 17:13

ஊழல் இல்லாமல் நானில்லை, எனக்கொரு ஊழல் இருக்கின்றது, என்றும் அது என்னை காக்கின்றது - இப்படிக்கு சொறிவால்


என்றும் இந்தியன்
ஜூன் 04, 2025 16:53

இந்த ஒரு சிறிய சட்டம் செய்தால் போதும் எல்லா சத்தமும் அடங்கிவிடும் "தவறு கண்டேன் சுட்டேன்" சட்டம் ஒன்று தான் தீர்வு


krishna
ஜூன் 04, 2025 09:50

KUJLIWAL ELLAM DUMMY


sundarsvpr
ஜூன் 04, 2025 09:04

ஊழல் செய்பவர்கள் மீது வழக்கு போடுவதில் அர்த்தம் இல்லை. விசாரணனை நடக்கும்போது வேறு சில ஊழல்கள் செய்துகொண்டுஇருப்பார்கள். இதனை முறியடிக்க சட்டம் இல்லாதவரை ஊழல் ஒழியாது. எதற்க்காக ஊழல் செய்கிறார்கள் இதனை அனுபவிப்பவர் அனுபவிக்கப்போகிறவர்கள் இவர்கள் தண்டிக்கப்பட்டால் ஊழல்கள் மறையும். தமிழ்நாட்டு தலைமை அமைச்சர் ஊழல் செய்து தண்டிக்கப்பட்டஆர் என்று எடுத்துக்கொள்வோம். அந்த ஊழல் லாபத்தை அனுபவித்தவர்களும் குற்றவாளிகள்தான். இதனை சட்டம் உறுதிசெய்தால் மட்டும் சமூகம் நிம்மதியாய் இருக்கும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை