உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கிழக்கு லடாக்கில் நிலைமை இன்னும் உணர்ச்சிகரமாகவே உள்ளது: ராணுவ தளபதி தகவல்

கிழக்கு லடாக்கில் நிலைமை இன்னும் உணர்ச்சிகரமாகவே உள்ளது: ராணுவ தளபதி தகவல்

புதுடில்லி: எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் (எல்.ஏ.சி) நிலைமை சென்சிட்டிவ் ஆக இருந்தாலும் கட்டுப்பாட்டில் உள்ளது என்று இந்திய ராணுவத் தலைமைத் தளபதி உபேந்திர திவேதி கூறினார்.ராணுவ தினத்தை முன்னிட்டு, உபேந்திர திவேதி டில்லியில் செய்தியாளர்களை சந்தித்தார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ozly6qfp&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அப்போது அவர் பேசியதாவது:கிழக்கு லடாக்கில் இன்னும் பிரச்சனைகள் இருக்கிறது இந்திய மற்றும் சீன ராணுவத்தினர் இடையே நம்பிக்கையை மீட்டெடுக்க முயற்சிகள் தேவை.நிலைமை சென்சிடிவ் ஆக இருந்தாலும் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது.டெப்சாங் மற்றும் டெம்சோக்கில் பாரம்பரிய பகுதிகளில் ரோந்து பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. நமது ராணுவபடை சமநிலையானது மற்றும் வலுவானது, மேலும் எந்தவொரு சூழ்நிலையையும் கையாளும் திறன் கொண்டது.எல்லை உள்கட்டமைப்பு மற்றும் திறன் மேம்பாட்டை அதிகரிப்பதில் நாம் கவனம் செலுத்துகிறோம். ஜம்மு-காஷ்மீரின் நிலைமை குறித்து, அது ஒட்டுமொத்தமாக கட்டுப்பாட்டில் உள்ளது என்றும், பாகிஸ்தானுடனான போர்நிறுத்த ஒப்பந்தம் கட்டுப்பாட்டுக் கோட்டில் நீடிக்கிறது.அதே நேரத்தில், ஊடுருவல் முயற்சிகள் தொடர்வதாகவும், பாகிஸ்தான் தரப்பில் பயங்கரவாத உள்கட்டமைப்பு அப்படியே இருக்கிறது.கடந்த ஆண்டில், அழிக்கப்பட்ட பயங்கரவாதிகளில் 60 சதவீதம் பேர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள்.மணிப்பூரைப் பொறுத்தவரை, பாதுகாப்புப் படையினரின் ஒருங்கிணைந்த முயற்சிகள் மற்றும் அரசின் முன்னெச்சரிக்கை முயற்சிகளால் மாநிலத்தின் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.இருப்பினும், மணிப்பூரில் ஆயுதப்படைகளால் சுழற்சி முறையில் வன்முறை சம்பவங்கள் தொடர்கின்றன. பிராந்தியத்தில் அமைதியைக் கொண்டுவர முயற்சிக்கிறோம். மியான்மரில் நிலைமை மோசமடையும் சாத்தியக்கூறுகளைச் சமாளிக்க இந்திய-மியான்மர் எல்லையில் மேம்பட்ட கண்காணிப்பு மற்றும் ஆதிக்கம் செலுத்தப்படுகிறது.இவ்வாறு உபேந்திர திவேதி பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

subramanian
ஜன 13, 2025 22:49

சீனாவை எந்த விதத்திலும் எந்த நேரத்திலும் நம்ப வேண்டாம். சீனா ஆக்ரமிப்பு பகுதிகளை மீட்க வேண்டும்


அப்பாவி
ஜன 13, 2025 18:13

20 முறை பேச்சுவார்த்தை நடத்தி சாப்புட்டாச்சு. இன்னும் நிறைய ரவுண்டு பேசி சீன இறக்குமதியை அதிகரிக்கணும்.


Barakat Ali
ஜன 13, 2025 19:49

இழிபிறவி ஜந்துவே .... டங்கல் திட்டம் / க்ளோபலைசேஷன் என்று கேள்விப்பட்டதில்லையா ?


Ganesh Subbarao
ஜன 15, 2025 15:11

யாரு அந்த சார்? நமக்கு கும்முடிபூண்டிய தாண்டினாலேயே ஒன்னும் தெரியாது. இந்த கூந்தலுக்கு சீனா எல்லைக்கு போயிட்டிங்களா தெய்வமே


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை