உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பொறாமையால் பொங்கும் பா.ஜ., சிவகுமார் குற்றச்சாட்டு

பொறாமையால் பொங்கும் பா.ஜ., சிவகுமார் குற்றச்சாட்டு

பெங்களூரு- ''காவிரி நீர் பிரச்னையை, திறமையாக நிர்வகிக்கும் காங்கிரஸ் அரசு மீது, பா.ஜ.,வுக்கு பொறாமை ஏற்பட்டுள்ளது,'' என, துணை முதல்வர் சிவகுமார் குற்றம் சாட்டினார்.பெங்களூரின், விதான் சவுதாவில் நேற்று அவர் கூறியதாவது:வறட்சி மற்றும் காவிரி நீர் பிரச்னையை, காங்கிரஸ் அரசு வெற்றிகரமாக நிர்வகிக்கிறது. இதை பார்த்து பா.ஜ.,வினர் பொறாமையால் பொங்குகின்றனர். நீதிமன்றத்தில் தீர்ப்பு, நம் மாநிலத்துக்கு எதிராக இருந்த போதும், காவிரி நீர் பிரச்னையை சமாளித்தோம். காங்கிரஸ் அரசு தமிழகத்துக்கு காவிரி தண்ணீர் திறந்து விடுவதாக குற்றம் சாட்டுகின்றனர்.பெங்களூரில் 7,000 போர்வெல்கள் வற்றியுள்ளன. ஆனால் அதிகாரிகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து, தங்களால் முடிந்த வரை பணியாற்றுகின்றனர். குடிநீர் பிரச்னைக்கு என்ன செய்ய முடியுமோ, அதை அரசு செய்கிறது. பா.ஜ.,வினர் வெறும் வாயை மெல்லுகின்றனர்.அணைகளில் இருந்து வெளியேறிய தண்ணீருக்கும், தமிழகத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை. தமிழகத்தினர் தண்ணீர் வேண்டும் என, கோரிக்கை வைத்தனரா. இந்த நேரத்தில் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட, எங்களுக்கு பைத்தியமா. பெங்களூரு நகருக்கு குடிநீர் வழங்குவதே, எங்களின் நோக்கமாகும்.நமது விவசாயிகளும் தண்ணீர் திறந்து விடும்படி கேட்கவில்லை. விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய தண்ணீரை, அரசு யாருக்கும் திறந்து விடவில்லை. பெங்களூருக்கு குடிநீர் வழங்கும் நோக்கில், மேகதாது திட்டத்தை வலியுறுத்தி, பாதயாத்திரை நடத்தினேன்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்













சமீபத்திய செய்தி