உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கர்நாடகாவில் சோகம்; கார் மீது கண்டெய்னர் கவிழ்ந்த விபத்தில் 6 பேர் பரிதாப பலி

கர்நாடகாவில் சோகம்; கார் மீது கண்டெய்னர் கவிழ்ந்த விபத்தில் 6 பேர் பரிதாப பலி

பெங்களூரு: கர்நாடகா மாநிலம் பெங்களூரு அருகே நெடுஞ்சாலையில், கார் மீது கண்டெய்னர் கவிழ்ந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் இருந்து துமகூரு நெடுஞ்சாலையில், நெலமங்களா என்ற இடத்தில், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கண்டெய்னர் லாரி பள்ளி வாகனம் மற்றும் கார் மீது மோதியது. இதில் நிலைதடுமாறி, அந்த கார் மீதே கவிழ்ந்தது. காரில் இருந்த 5 பேரும், அருகில் பைக்கில் நின்று கொண்டு இருந்த ஒருவரும் என மொத்தம் 6 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்தவர்களின் உடலை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது. இது குறித்து நெலமங்களா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சாலை விபத்தில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

BalaG
டிச 22, 2024 01:09

,உருப்படாத விதிமுறைகள், உருப்படாத அதிகாரிகள், பிறகு எப்படி இருக்கும். கை இல்லாதவனுக்கு லைசென்ஸ் கொடுத்த நாடுதானே இது. உலகத்தில்லையே அதிக விபத்து நடக்கும் நாடு இந்தியா, அதிலும் அதிக விபத்து நடப்பது தமிழ்நாட்டில். RTO துறை என்றாலே லஞ்சதுக்கு கரை கண்டது. பணம் கொடுத்து போஸ்டிங் வாங்கிட்டு வந்தா இப்படித்தான் இருக்கும் லட்சணம். கடவுள்தான் காப்பாற்றனும்


M Ramachandran
டிச 21, 2024 22:56

மத்திய அரசு தன்னுடைய போர்ட்கலிய்ய சாலை கண்டைனர் லாரி மூலம் எடுத்து செல்லும் போது ஒரு ஜீப்பில் அந்த நிறுவனத்தின் செகுரிய ஆபிஸர் கூட செல்வார். அந்த வண்டிக்கு வேக கட்டு பாடு உண்டு. இதைய்ய தனியார் வாகனஙகள் வேக கட்டுபாட்டை பின்பற்றுவதில்லை. அதற்க்கு என்று தகுதி பெற்ற டிரைவர் ஓட்ட வேண்டும். இது எதையுமெ பின்பற்றுவதில்லை. தவிர போட்டியினால் வீரைய்யவாக யார் என்று சேர்க்கிறார்களோ அவர்களுக்கு தங்கள் ஆர்டரை கொடுப்பார்கள். இது மிகவும் மோசமான உதாரணம். வழியில் RTO க்கள் செக் செய்வதில்லை. விபத்துக்கள் ஏற்படுகின்றன. அவர்களால் மற்ற வாகன ஓட்டிகள் அவர்கள் பயணம் செய்யும் மக்கள் உயிழப்புக்கள் ஏற்படுகின்றன


Sivagiri
டிச 21, 2024 18:10

சரக்கு அடிக்காமல் லாரி ஓட்டும் லாரி டிரைவர்கள் நூத்துக்கு ஐந்து கூட இல்லை . . . அதிலும் மணல் லாரி , தண்ணி லாரி , டிப்பர் , எப்போதும் full போதைதான் . . .


Palanisamy Sekar
டிச 21, 2024 16:39

ஒரு நாட்டின் போரில் கூட இவ்வளவு பேர் இறக்க மாட்டார்கள். நமது நாட்டில் மட்டும்தான் சாலை விபத்துகளில் கணக்கிலடங்காத அளவுக்கு விபத்துகளில் இறக்கின்றார்கள். சின்னாபின்னமாகும் குடும்பங்கள் அனாதைகளாக குடும்பங்கள் சிதைக்கின்றன. கேட்க சீர்படுத்த படித்தவர்கள் எவருமில்லை அமைச்சர்களாக. விபத்தை தடுக்க கடுமையான ஓட்டுநர் உரிமத்தை நடைமுறைப்படுத்த தவறினால்.. சமூகமே சீரழிந்துபோகும். பொறுப்பற்ற நபர்கள் செய்கின்ற விபத்துகளால் மரண ஓலங்கள் தொடர்கின்றன


VSMani
டிச 21, 2024 15:59

கண்டெய்னர் லாரி ஓட்டுவதற்கு தனி திறமை வேண்டும். லஞ்சம் கொடுத்து லைசென்ஸ் வாங்கிடுரான்கள் இப்படிப்பட்டவர்களை குறைந்த சம்பளத்திற்கு கண்டெய்னர் லாரி உரிமையாளர்கள் வேலைக்கு எடுத்துவிக்கிறார்கள். ரோட்டில் செல்லும் வாகனங்கள் ஓட்டுபவர்களுக்கு நல்லா டெஸ்ட் வைத்து லைசென்ஸ் கொடுக்கவேண்டும்.


Kasimani Baskaran
டிச 21, 2024 15:29

நிறைய காட்டுமிராண்டிகள் தொலைபேசியை பார்த்துக்கொண்டே வாகனம் ஓட்டுகிறார்கள்.


அப்பாவி
டிச 21, 2024 15:26

சும்மா ரோட்டோரம் நீன்னுக்குட்டிருந்தாலே போதும். போட்டுத்தள்ளிட்டு போய்க்கிட்டே இருப்பாங்க. கதிசக்தி அபாரம்.


N Sasikumar Yadhav
டிச 21, 2024 18:56

உங்க எஜமான் திருட்டு திராவிட கதிசக்தி அபாரம் . உங்க கோபாலபுர விசுவாசம் புல்லரிக்க வைக்கிறது அமெரிக்காவில் தங்கி முதலீடுகளை இழுத்துவந்த திருட்டு திராவிட மாடலிடம் கேளுங்க


அப்பாவி
டிச 21, 2024 15:25

மந்திரிங்க ஆளாளுக்கு அமெரிக்கா ஐரோப்பான்னு போயி பாத்துட்டு அங்கே சாலைகள் எப்புடி இருக்குன்னு பாத்துட்டு வருவாங்க. நாமதான் வல்லரசுன்னு அடிச்டு உடுவாங்க.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை