உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா /  வாள்கள் சப்ளை ஹிந்து அமைப்பினர் ஆறு பேர் கைது

 வாள்கள் சப்ளை ஹிந்து அமைப்பினர் ஆறு பேர் கைது

காஜியாபாத்: உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமை யிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள காஜியாபாத் நகரின் சாலிமர் கார்டன் காலனியில், கூர்மையான வாள்களை ஹிந்து அமைப்பினர் வினியோகிப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்று போலீசார் பார்த்த போது ஹிந்துக்களுக்கு ஆதர வாகவும், முஸ்லிம்களுக்கு எதிராக முழக்கமிட்ட படியும் சென்ற ஹிந்து ரக்ஷா தள அமைப்பினர் ஆறு பேரை கைது செய்தனர். தலைமறைவான அந்த அமைப்பின் தலைவர் பூபேந்திர சவுத்ரி வெளியிட்டுள்ள வீடியோவில், 'ஹிந்து பெண்களை தாக்கி பலாத்காரம் செய்யும் முஸ்லிம்களை எதிர்கொள்வதற்காக 250 வீடுகளில் ஆயுதங்களை வினியோகம் செய்து உள்ளோம். 'வங்கதேசத்தில் ஹிந்துக்கள் தாக்கப்பட்டு கொல்லப்படுகின்றனர். இங்கு இதுபோன்ற நிலைமை ஏற்பட அனுமதிக்க மாட்டோம்' என குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை