மேலும் செய்திகள்
தென் ஆப்ரிக்கா ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு
34 minutes ago
மும்பை: இந்திய கிரிக்கெட் அணி வீராங்கனை ஸ்மிருதி மந்தனாவில் திருமணம், கடைசி நேரத்தில் நின்று போனதால் குடும்பத்தினர் மற்றும் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் தவிர்க்க முடியாத வீராங்கனையாக திகழ்பவர் ஸ்மிருதி மந்தனா. இவரும், இசையமைப்பாளர் பலாஷ் முச்சலும் நீண்ட காலமாக காதலித்து வந்த நிலையில், இருவருக்கும் திருமணம் முடிவு செய்யப்பட்டது. அதன்படி, மஹாராஷ்டிரா மாநிலம் சாங்லியில் 23ம் தேதியான இன்று பிரமாண்டமான முறையில் திருமணம் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. திருமணத்தையொட்டி நடந்த ஸ்மிருதி மந்தனாவின் மெஹந்தி,ஹல்தி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகின. மேலும், கிரிக்கெட் மைதானத்தின் நடுவே, ஸ்மிருதிக்கு வருங்கால கணவர் பலாஷ் முச்சல், ப்ரோபஸ் செய்த வீடியோவும் டிரெண்டாகியது. இந்த சூழலில், திருமணத்திற்காக இரு வீட்டார் மற்றும் விருந்தினர்கள் இன்று கூடிய நிலையில், திடீரென திருமணம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்மிருதி மந்தனாவின் தந்தைக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதன் காரணமாகவே, குடும்பத்தினர் திருமணத்தை ஒத்திவைத்துள்ளனர். தந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சூழலில், திருமணம் செய்து கொள்ள விருப்பமில்லை என்று ஸ்மிருதி மந்தனா கூறியதால், இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவரது மேனேஜர் கூறினார்.
34 minutes ago