உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ரயில் பிளாட்பாரத்தில் காரை ஓட்டிய ராணுவ வீரர் கைது

ரயில் பிளாட்பாரத்தில் காரை ஓட்டிய ராணுவ வீரர் கைது

மீரட் : உத்தர பிரதேசத்தில் ரயில் நிலைய பிளாட்பாரத்தில், குடிபோதையில் கார் ஓட்டிச் சென்ற ராணுவ வீரரை போலீசார் கைது செய்தனர். உத்தர பிரதேசத்தின் மீரட் கன்டோன்மென்ட் ரயில் நிலைய பிளாட்பாரத்தில், ஜார்க்கண்ட் பதிவு எண் உடைய காரை ஒருவர், ஓட்டிச்செல்வது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் சமீபத்தில் பரவியது. இது தொடர்பாக ரயில்வே போலீசார் நடத்திய விசாரணையில், அந்தக் காரை ஓட்டியது ராணுவ வீரர் சந்தீப் தாக்கா என்பதை கண்டறிந்தனர். அப்போது, அவர் குடிபோதையில் வாகனத்தை இயக்கியது தெரியவந்தது. இதுதவிர, ரயிலுக்காக காத்திருந்த பயணியரின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில், இச்செயலில் ஈடுபட்ட அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இதுதவிர, சந்தீப் பயன்படுத்திய காரை பறிமுதல் செய்ததுடன், அவரது ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்யவும் போலீசார் பரிந்துரைத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Kulandai kannan
ஆக 04, 2025 10:18

ஒரு முறை கருணாநிதி காரிலேயே ரயில் பெட்டி வரை வந்ததை எழும்பூரில் பார்த்திருக்கிறேன்.


venugopal s
ஆக 04, 2025 09:11

வர வர ராணுவ வீரர்களும் பாஜக அரசியல்வாதிகள் போல் ஆகி விட்டனர்!


SIVA
ஆக 04, 2025 08:25

மாத சம்பளம் 16000 ரூபாய், எட்டு மணி நேர வேலை, உணவு தங்கும் இடம் இலவசம், 24 மணி நேரம் மின்சாரம் மற்றும் ஆயுதம் தாங்கிய காவல்துறை பாதுகாப்பு, இலவச மருத்துவம், அரசு அங்கீகாரம் பெற்றது, இந்தியா முழுவதும் கிளைகள் உள்ளன, வருமானவரி பிடித்தம் இல்லை, ஜிஸ்டி இல்லை ......


நிக்கோல்தாம்சன்
ஆக 04, 2025 07:39

அப்படியே எஸ்வந்தபுர பெங்களூரு ரயில்வே ஸ்டேஷன் வாங்க, எவ்ளோ போலீஸ்காரங்க அவங்க இருசக்கர வாகனத்தை ஓட்டிக்கிட்டு போறாங்க என்று பார்க்கலாம் .


subramanian
ஆக 04, 2025 07:31

அங்கே அரசாங்கம், காவல்துறை சுதந்திரம் ஆக செயல்படுகிறது. விடியாமூஞ்சி திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் நடக்கும் இருள் சூழ்ந்த ஆட்சியில் எல்லாம் மர்மம். அந்த சார்.. அடபோங்கைய்யா ஈனப்......பிறவி....


Chitrarasan subramani
ஆக 04, 2025 15:22

அப்பாடா ஒருவழியாக தி.மு.க வை விமர்சனம் செய்தாகிவிட்டது. ₹௨இன்றே உங்கள் கணக்கில் செலுத்தப்படும்.


Kasimani Baskaran
ஆக 04, 2025 03:40

போதையிலும் நிதானமாக ஓட்டியிருக்கிறார்


பிரேம்ஜி
ஆக 04, 2025 07:22

கமெண்ட் சூப்பர்!


Padmasridharan
ஆக 04, 2025 02:50

"வீடியோ பதிவை வைத்து"தான் காவலர்கள் விசாரணை செய்தார்களா அல்லது காவலர்கள் கண்டும் காணாதுபோல் இருந்துவிட்டர்களா


சமீபத்திய செய்தி