உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பெமல் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ஆதரவாக ஒற்றுமை குழு அமைப்பு

பெமல் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ஆதரவாக ஒற்றுமை குழு அமைப்பு

தங்கவயல்: பெமல் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு ஆதரவாக தொழிலாளர் ஒற்றுமைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.தங்கவயல் பெமல் ஒப்பந்தத் தொழிலாளர்கள் 11 வது நாள் போராட்டம் நேற்று நடந்தது. இதை தீவிரப்படுத்த அனைத்துக் கட்சி மற்றும் பல்வேறு அமைப்புகளின் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது.கூட்டத்தில் பேசியபலரும், போராட்டம் நடத்துவதற்கு ஒத்துழைப்பு தருவதாக உறுதி அளித்தனர். இதற்காக தொழிலாளர்கள் ஒற்றுமைக் குழு அமைக்கப்பட்டது.இதன் ஒருங்கிணைப்பாளர்களாக சிவகுமார், கஜேந்திரன் ஆகியோர் செயல்படுவர்.பெமல் தொழிற்சங்க முன்னாள் துணைத் தலைவர் அர்ஜுனன், மாநில சி.ஐ.டி.யு., தலைவர் மீனாட்சி சுந்தரம், தங்க வயல் தலைவர் பாபு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலர் தங்கராஜ், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட செயலர் ஜோதிபாசு, வக்கீல்கள் சங்க தலைவர் ராஜகோபால் கவுடா துணைத்தலைவர் மணிவண்ணன், முன்னாள் நகராட்சி தலைவர் கே.சி.முரளி, பா.ஜ., பாண்டியன், தி.மு.க., சேகர், தலித் அமைப்பு நோயல், தமிழ்ச்சங்க செயல் தலைவர் கமல் முனிசாமி, வியாபாரிகள் சங்கத் தலைவர்தேவேந்திரன், செயலர் ஜனார்த்தனன், நகராட்சியின் சுயேச்சை கவுன்சிலர்கள் சசிதரன், சிவாஜி,பிரபு, தங்கவயல் மகளிர் சங்கத்தலைவர் ஆலிஸ் அருணா, தங்கச்சுரங்கமுன்னாள் போராட்டக்குழு பட்டாபிராமன், ஆயத்த ஆடை தொழிலாளர் சங்கத்தலைவர்ரஞ்சித் உட்பட பலர்பங்கேற்றனர்.

தீர்மானங்கள்:

l போராட்ட விபரங்கள் குறித்து வரும் 18ம் தேதி செய்தியாளர்களிடம் விளக்குவது.l தொகுதி எம்.பி., - எம்.எல்.ஏ., பெமல் நிர்வாக அதிகாரியுடன் பேசிய கருத்தை அறிவது.l கோலார் அலுவலகம் 22ம் தேதி முற்றுகை.l தங்கவயலில் 27ம் தேதிஊர்வலம்; நகரில் பொதுக்கூட்டம்.l டிச., 2ம் தேதி தங்கவயலில் 'பந்த்'l அம்பேத்கர் நினைவு நாளான டிச., 6ல் அவரின் சிலை முன் உறுதிமொழி எடுப்பது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை