உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டில்லி காற்று மாசுக்கு தீர்வு: உதவ தயார் என்கிறது சீனா

டில்லி காற்று மாசுக்கு தீர்வு: உதவ தயார் என்கிறது சீனா

புதுடில்லி: காற்று மாசால் டில்லி பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சீன துாதரகத்தின் வெளியுறவு செய்தி தொடர்பாளர் யு ஜிங், இதுபோன்று பிரச்னையை எதிர்கொண்டு சீனா மீண்டதாகவும், அது தொடர்பான அனுபவத்தை பகிர தயார் என்றும் தெரிவித்து உள்ளார். தலைநகர் டில்லி மற்றும் அதைச்சுற்றி உள்ள பகுதிகளில் காற்று மாசு மிக முக்கிய பிரச்னையாக உள்ளது. இதனால் குழந்தைகள், முதியோர் மற்றும் நோயாளிகள் நுரையீரல் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். இந்நிலையில், டில்லியில் உள்ள இந்தியாவுக்கான சீன துாதரகத்தின் செய்தி தொடர்பாளர் யு ஜிங் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், 'சீனாவின் பல நகரங்களும் இதுபோன்ற பிரச்னையை சந்தித்தன. அதிலிருந்து தற்போது மீண்டுள்ளோம். தெளிவான நீல வானத்தை காண்கிறோம். டில்லி காற்று மாசு பிரச்னையை தீர்க்க எங்கள் அனுபவங்களை பகிர்ந்து உதவ தயார்' என குறிப்பிட்டுள்ளார். சீனாவில் பீஜிங், சியான், டயாஞ்சின், சாங்சாய் உள்ளிட்ட நகரங்களில் காற்றின் தரம் சில ஆண்டுகளுக்கு முன் மோசமாக இருந்தது. நகரின் பசுமை பரப்பை அதிகரித்தது, தொழிற்சாலைகளை மூடுதல், பொது போக்குவரத்தை மேம்படுத்துதல், புகையை கட்டுப்படுத்துதல் போன்ற பலகட்ட நடவடிக்கைகள் மூலம் காற்று மாசை குறைத்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Ramalingam Shanmugam
நவ 06, 2025 16:28

முதலில் விவசாய கழிவுகளை எரிக்காமல் அரைத்து பொடியாக்கி உரமாக மாற்றுங்கள் உர செலவும் குறையும் காற்றூ மாசு குறையும்


ஆரூர் ரங்
நவ 06, 2025 14:29

வைக்கோல் புகைக்கு அடுத்ததாக வாகனப்புகை தான் டெல்லியின் முக்கியப் பிரச்சினை. வீட்டுக்கு நான்கு வாகனங்கள் கூட வைத்துள்ளார்கள். சிங்கப்பூர் போல பொதுப்போக்குவரத்து வசதிகளை அதிகரித்து தனியார் வாகனங்களுக்கு கட்டுப்பாடு விதிக்க வேண்டும். அதுதான் தீர்வு. நகரைச் சுற்றி 70 கிமி தூரத்துக்கு புகை கக்கும் ஆலைகளை அனுமதிக்கக் கூடாது.


ஜெய்ஹிந்த்புரம்
நவ 06, 2025 11:58

எதுக்கு சீனாப்பயலுக சகவாசம்?


Gokul Krishnan
நவ 06, 2025 09:28

சீனா இந்த விசயத்தில் பெய்ஜிங் நகரில் பெருமளவு காற்று மாசை குறைத்து வருகிறது. அதற்கு முன் ரெண்டு முக்கிய காரணங்களை பார்க்க வேண்டும் 1. ஊழல் மட்டுமே தொழிலாக கொண்டு இருக்கும் இன்றைய அரசியல் வியாதிகள் கட்சி பேதமின்றி அதற்கு பெருமளவு காரணமாக இருக்கும் பெரிய பொறுப்பில் உள்ள அரசு அதிகாரிகள் ௨. சிறிதும் சமூக மற்றும் சுற்று சூழல் அக்கறை மற்றும் பொறுப்பு இல்லாத பெரும்பாலான பொது மக்கள்


ஜெய்ஹிந்த்புரம்
நவ 06, 2025 11:54

நம்ம மோடிஜி ஆள்ற டில்லியலே லஞ்சமா?


சுந்தர்
நவ 06, 2025 08:46

நல்லது. அவர்கள் அனுபவத்தை கேட்டு உடனடியாக செயல்படுத்தலாம். தவறில்லை. உலகம் இனி ஒன்றாக வேண்டுமென்றால் எதிரி நாடுகளே இல்லை என்ற நிலைக்கு வர வேண்டும்.


Sun
நவ 06, 2025 08:39

இது போன்ற விஷயங்களில் சீன டெக்னாலஜி தலை சிறந்தது. நட்புடன் இதனை நாம் பயன் படுத்திக் கொள்ளலாம்.


ஜெய்ஹிந்த்புரம்
நவ 06, 2025 08:11

வாய்ப்பில்லை ராஜா


SANKAR
நவ 06, 2025 06:59

Avanunga mattum thaan seyya mudiyum..


SANKAR
நவ 06, 2025 09:46

solli koduthaalum namma aalungalukku puriyaathu seyyavum maattaanga


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை