மேலும் செய்திகள்
ரூ.2.23 கோடி லஞ்சம் வாங்கிய ராணுவ அமைச்சக அதிகாரி கைது
50 minutes ago
ரூ.3,811 கோடி அள்ளிய அரசியல் கட்சிகள்: பாஜவுக்கு அதிகம்
2 hour(s) ago | 3
லோக்சபா தேர்தலில், துமகூரு பா.ஜ., சீட், முன்னாள் அமைச்சர் சோமண்ணாவுக்கு கிடைக்க உதவ வேண்டும் என்று, எடியூரப்பாவிடம், துமகூரு பா.ஜ., சிட்டிங் எம்.பி., பசவராஜ் கோரிக்கை வைத்து உள்ளார்.துமகூரு தொகுதி பா.ஜ., - எம்.பி., பசவராஜ், 82. லோக்சபா தேர்தலில் போட்டியிடவில்லை என்று அறிவித்து விட்டார். ஆனால் தனக்கு பதிலாக முன்னாள் அமைச்சர் சோமண்ணாவுக்கு, 'சீட்' கொடுக்க வேண்டும் என்று, ஆரம்பத்தில் இருந்தே, பசவராஜ் வலியுறுத்தி வருகிறார்.ஆனால், இன்னொரு முன்னாள் அமைச்சர் மாதுசாமியும், துமகூரு சீட் கேட்கிறார். இதனால் சோமண்ணா, மாதுசாமி இடையில் போட்டி எழுந்து உள்ளது.இந்நிலையில் ஷிவமொகாவில் உள்ள வீட்டில், எடியூரப்பாவை, பசவராஜ் சந்தித்து பேசினார். அப்போது, 'சோமண்ணாவுக்கு துமகூரு சீட் கிடைக்க உதவ வேண்டும். லிங்காயத் சமூகத்தின் தலைவரான அவருக்கு, துமகூரில் நல்ல வரவேற்பு உள்ளது. 'கட்சி மேலிடம் கூறியதால், சட்டசபை தேர்தலில் இரண்டு தொகுதியிலும் போட்டியிட்டு தோற்றார். அவரை கைவிடக் கூடாது' என்று வலியுறுத்தி உள்ளார்.
50 minutes ago
2 hour(s) ago | 3