மேலும் செய்திகள்
பெரும் தவறு!
3 hour(s) ago
கடற்படை குறித்து பாக்.,கிற்கு தகவல் அனுப்பியவர் கைது
3 hour(s) ago | 1
திருமலையில் தெய்வீக மூலிகை தோட்டம்
3 hour(s) ago
அரசு பள்ளியில் பழங்கள் தின விழா
6 hour(s) ago
பெங்களூரு, : காங்கிரசில் சேர்ந்தால் லோக்சபா தேர்தலில் போட்டியிட வேண்டும் என கூறியதற்கு, பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் சோமசேகரும், சிவராம் ஹெப்பாரும் மறுப்பு தெரிவித்துள்ளனர். இருவரும் மாநில அரசியலில் இருக்கவே விரும்புவதாக கூறியுள்ளனர்.லோக்சபா தேர்தலை ஒட்டி, விஜயபுரா - தனி, ஹாவேரி, ஷிவமொகா, ஹாசன், துமகூரு, மாண்டியா, பெங்களூரு ரூரல் ஆகிய ஏழு தொகுதிகளுக்கு கடந்த 8ம் தேதி காங்கிரஸ் வேட்பாளர்களை அறிவித்தது. மற்ற தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் கிடைக்காமல், தவித்து வருகிறது.கடந்த மாதம் நடந்த ராஜ்யசபா தேர்தலில், பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் சோமசேகர் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக ஓட்டு போட்டார். சிவராம் ஹெப்பார், தனக்கு உடல் நலம் சரியில்லை என்பதால், வர முடியவில்லை என கூறி, காங்கிரசுக்கு ஆதரவாக செயல்பட்டார்.இதனால் இருவரும் காங்கிரசுக்கு எப்போது வேண்டுமானாலும் தாவலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு வேளை அவர்கள், காங்கிரசில் இணைந்தால், பெங்களூரு வடக்கில் சோமசேகரும், உத்தர கன்னடாவில் சிவராம் ஹெப்பாரும் போட்டியிட வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர்கள் நிபந்தனை விதித்தனர். இதற்கு இருவரும் மறுப்பு தெரிவித்துள்ளனர்.லோக்சபா தேர்தல் அறிவிப்புக்கு முன்னரே, எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்தால், லோக்சபா தேர்தலுடன், யஷ்வந்த்பூர், எல்லாபூர் சட்டசபை தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்படலாம்.இதை தவிர்க்க, லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னரே, சோமசேகரும், சிவராம் ஹெப்பாரும் ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளதாக, காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
3 hour(s) ago
3 hour(s) ago | 1
3 hour(s) ago
6 hour(s) ago