உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கரூர் நெரிசல் சம்பவ வழக்கு; ஐகோர்ட் பதிவாளர் அறிக்கை தர சுப்ரீம் கோர்ட் ஆணை

கரூர் நெரிசல் சம்பவ வழக்கு; ஐகோர்ட் பதிவாளர் அறிக்கை தர சுப்ரீம் கோர்ட் ஆணை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

நமது டில்லி நிருபர்கரூர் நெரிசல் சம்பவ வழக்கில் சென்னை ஐகோர்ட் விசாரணையில் தவறுகள் உள்ளதாக கருதுகிறோம். இது பற்றி ஐகோர்ட் பதிவாளர் அறிக்கை தர வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=whxeniyh&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0கரூரில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நடத்திய கூட்டத்தில், நெரிசல் ஏற்பட்டு, 41 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கை தமிழக போலீசார் விசாரித்து வந்த நிலையில், மாநில அரசு சார்பில் சிறப்பு புலனாய்வு குழுவும் அமைக்கப்பட்டது. வழக்கை சிபிஐக்கு மாற்ற வலியுறுத்தி சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. சுப்ரீம்கோர்ட், விசாரணையை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டது. இன்று (டிச.,12) கரூர் நெரிசல் வழக்கு சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் கே.கே.மகேஸ்வரி மற்றும் விஜய் பிஷ்னோய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், ''தனி நீதிபதி ஆணையத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும். எதிர்காலத்தில் கூட்டங்களை நடத்துவதற்கான வழிமுறைகளை வகுக்கவே ஆணையம் அமைக்கப்பட்டது'' என வாதங்களை முன்வைத்தார். வாதங்களை கேட்ட சுப்ரீம் கோர்ட் நீதிபதி மகேஸ்வரி, ''சென்னை ஐகோர்ட் விசாரணையில் தவறு உள்ளதாக கருதுகிறோம். ஐகோர்ட் பதிவாளர் அறிக்கை தர வேண்டும்,'' என உத்தரவிட்டார். பின்னர் வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Chandru
டிச 13, 2025 09:45

மாப்பு மாப்பு வச்சுட்டாயான்யா ஆப்பு


viki raman
டிச 12, 2025 17:27

33 அடி நீளம் 22 அடி ஆகலாம் உள்ள ஏர் பஸ் அ நேரிசல் மிகுந்த மக்கள் நடுவே விட்டது யாரு சனிக்கிழமை வந்தா நடிகர் விஜய் னு பேரு. வண்டி ஓட்டிட்டு வரும் போது தெரியவேனா, தெரிஞ்ச பிறகு கரூர் பக்கமே தலை காட்டல ரொம்ப நல்லவரு, நல்லது மட்டுமே பண்ணுவறு.


GMM
டிச 12, 2025 16:38

கரூர் நெரிசல் வழக்கில் சென்னை ஐகோர்ட் விசாரணையில் தவறு உள்ளது என்கிறது உச்ச நீதிமன்றம். இது செப்பு அடியா? பிரம்படியா,? சம்பந்த பட்டவர்கள் மான ரோசம் இருந்தால் பதவி விலக வேண்டும். உச்ச நீதிமன்றத்திற்கு நல்ல சந்தர்ப்பம். ஐகோர்ட் பதிவாளர் அறிக்கை கொண்டு உயர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


V Venkatachalam, Chennai-87
டிச 12, 2025 15:18

வில்சன் வாதம் எடுபடவில்லை என்பது நிதர்சனம்.‌ போன தடவை உச்ச நீதி மன்றம் குட்டிய பிறகு ஏதோ உச்ச நீதிமன்றம் தடவிக்கொடுத்த மாதிரி பில்டப் குடுத்து பேட்டி குடுத்தார். அது சரிதான்னு சப்பை கட்டு கட்ட சட்ட முந்திரி ரகுபதி ன்னு ஒருத்தர் இருக்கார். அவர் சகட்டு மேனிக்கு சப்பை கட்டு கட்டிடுவாரு.‌ அல்லேலூயா சேகர் பாபு மாதிரி சம்பந்தமில்லாமல் எதையாவது சொல்லி தமாஷ் பண்ணிகினு இருப்பாரு.


duruvasar
டிச 12, 2025 14:38

குட்ட குட்ட குனிபவன் அறிவுக்கு அப்பாற்பட்டவன் என்ற சொலவடை இருக்கிறது. இங்கே மலையாள சொலவடையம் பொருத்தமாக இருக்கும் காட்டுல மரம், தேவரோட ஆனா கோவில் யானை வெட்டடா வெட்டு கட்டுடா கட்டு. . எவன் அப்பன் வீடு பணம் ?


புதிய வீடியோ