உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சொந்தமாக கார், வீடு இல்லாத சோனியா!: சொத்து மதிப்பு முழு விபரம்

சொந்தமாக கார், வீடு இல்லாத சோனியா!: சொத்து மதிப்பு முழு விபரம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியாவின் மொத்த சொத்து மதிப்பு (அசையும் மற்றும் அசையா சொத்து) 12 கோடியே 53 லட்சத்து 76 ஆயிரத்து 822 ரூபாய் என தகவல் வெளியாகி உள்ளது.ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்.பி.யாக சோனியா தேர்வு செய்யப்பட இருக்கிறார். இதற்காக அவர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். அப்போது தனது அசையும் மற்றும் அசையா சொத்து குறித்து பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளார். அதன் படி, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியாவின் மொத்த சொத்து மதிப்பு (அசையும் மற்றும் அசையா சொத்து) 12 கோடியே 53 லட்சத்து 76 ஆயிரத்து 822 ரூபாய் ஆகும். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=c98hfjwv&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=02014ல் அவருடைய சொத்து மதிப்பு 9.28 கோடி ரூபாயாக இருந்தது. 2019ல் 11.82 கோடி ரூபாயாக அதிகரித்தது. தற்போது 2024ல் 12.53 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. அசையும் சொத்து 6.38 கோடி ரூபாய். இதில் ஜூவல்லரி, ஆக்ஸ்போர்டு பல்கலைகழகத்தில் இருந்து கிடைக்கும் ராயல்டி, முதலீடுகள், பாண்டுகள், வங்கி டெபாசிஸ்ட், கையில் இருக்கும் ரொக்கத்தொகை ஆகியவை அடங்கும்.49.95 லட்சம் ரூபாய் மதிப்பில் 1.3 கிலோ தங்கமும், ரூ. 57.2 லட்சம் மதிப்புள்ள 88 கிலோ வெள்ளியும் சோனியா வைத்துள்ளார். இத்தாலியில் பரம்பரை வீடு உள்ளதாகவும், அவற்றில் தனக்கான பங்கீன் மதிப்பு 26.83 லட்சம் ரூபாய் எனவும், 2014 தேர்தலில் இதன் மதிப்பு ரூ.19.9 லட்சம் எனவும் சோனியா பிரமாண பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளார். அதே நேரத்தில் சொந்தமாக கார், வீடு இல்லை எனவும் சோனியா பிரமாண பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 30 )

Palanisamy T
பிப் 18, 2024 06:43

இப்படித்தானே ஈழத் தமிழர்களை சொந்த வீடு வாகனமில்லாமல் அனாதையாக அன்று இருக்கச் செய்தீர்கள். நீங்கள் சொல்லும் இந்த கதையும் நம்புவதாக யில்லை. வேண்டுமானால் கடவுள் நம்பலாம்


A1Suresh
பிப் 18, 2024 01:01

"நேஷனல் ஹெரால்டு" வழக்கில் இவருடைய பல நூறுரூபாய் கோடி மதிப்புள்ள சொத்துக்கள் பறிமுதல் ஆயின. இவரெல்லாம் எப்படி ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட முடிகிறது ?


தர்மராஜ் தங்கரத்தினம்
பிப் 18, 2024 10:35

பிஜேபியிலேர்ந்து யாருமே தேர்தல் கமிஷனிடம் இதைக் கேட்கலையே ????


A1Suresh
பிப் 18, 2024 01:00

இந்த கேடுகெட்ட பித்தலாட்டம் மாறவேண்டும். வெளிநாடுகளில் எங்கெங்கே சொத்து என்றும் கேட்கப்படவேண்டும்.


KUMAR. S
பிப் 21, 2024 18:00

அதையெல்லாம் வெளி கொண்டு வருவோம்னு சொல்லித்தானே பி ஜெ பி ஆட்சிக்கு வந்தது.


Ramesh Sargam
பிப் 17, 2024 23:52

(அசையும் மற்றும் அசையா சொத்து) 12 கோடியே 53 லட்சத்து 76 ஆயிரத்து 822 ரூபாய் என தகவல். இது சோனியா வீட்டில் வேலை செய்யும் ஒரு வேலைக்காரியின் சொத்து மதிப்பு.


g.s,rajan
பிப் 17, 2024 22:51

சாப்பாட்டுக்கே கஷ்டம் .....


R. Vidya Sagar
பிப் 17, 2024 22:09

இங்கே இருந்திருந்தால் மாசம் ஆயிரம் ரூபாய் ஆவது கிடைக்கும்


sankaranarayanan
பிப் 17, 2024 21:40

இவருக்கு இவ்வளவு கோடி சொத்து இன்னும் எதற்கு பல கோடி இத்தாலியாவிற்கு அனுப்பியாகிவிட்டது எஞ்சியதுதான் இவைகள் எல்லாமே அரசியவாதிகளின் நடிப்புதான்


g.s,rajan
பிப் 17, 2024 21:33

பாவம் பரம ஏழை ,நிறையா இருக்கறவங்க கொடுங்க,தப்பே இல்லை ....


kulandai kannan
பிப் 17, 2024 21:00

இந்தியாவில் இல்லாவிட்டால் என்ன, இத்தாலியில் இருக்கும்.


Godfather_Senior
பிப் 17, 2024 20:52

பொது சொத்திலும் வரி கொடுக்கும் இந்தியர் பணத்தில் சுகபோகமாக வாழும் உலக பணக்காரர்கள் பட்டியலில் நான்காம் இடம் பெற்ற இத்தாலி தேசத்து ஏழை கொள்ளையடிச்ச லட்சக்கணக்கான பணமெல்லாம் எவன் எவனோ அனுபவிக்கப்போறான்


மேலும் செய்திகள்









புதிய வீடியோ