உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சட்டசபையை சுமுகமாக நடத்த சபாநாயகர் காதர் யோசனை

சட்டசபையை சுமுகமாக நடத்த சபாநாயகர் காதர் யோசனை

பெலகாவி; ''எம்.பி.,யாக இருந்தவர்கள், சபாநாயகர் ஆனால் மட்டுமே, சட்டசபையை சுமுகமாக நடத்த முடியும்,'' என, சபாநாயகர் காதர் அதிருப்தியை வெளிப்படுத்தினார்.கர்நாடக சட்டசபை நேற்று துவங்கியதும் மாநில உணவுத் துறை அமைச்சர் முனியப்பா பேசினார்.அவர் கூறுகையில், ''லோக்சபா கூட்டத்தொடர் காலை 11:00 மணிக்கு துவங்கும். இரவு வரை நீடிக்கும். சட்டசபையிலும் இதுபோன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். முதலில் கேள்வி, பதில் நிரல் துவங்க வேண்டும். அதில் முதல்வரும், துணை முதல்வரும் கலந்து கொள்ள வேண்டும். புதிய மாற்றத்தை கொண்டு வர வேண்டும். நமக்கு ஒழுக்கம் இல்லை என்றால் எப்படி? மக்கள் அனைத்தையும் பார்த்துக் கொண்டு இருக்கின்றனர்,'' என்றார்.சபாநாயகர் காதர், ''லோக்சபா எம்.பி.,யாக இருந்த உங்களை போன்றவர்கள், இந்த சபையில் சபாநாயகர் நாற்காலியில் அமர வேண்டும். அப்போது தான் சபை சுமுகமாக நடக்கும்,'' என, அதிருப்தி பதில் அளித்தார்.அமைச்சர் கிருஷ்ணபைரேகவுடா, ''நாங்கள் தான் எப்போதும் சபைக்கு தாமதமாக வருவோம். ஆனால் இன்று நீங்களே தாமதப்படுத்தி விட்டீர்கள்,'' என சபாநாயகரை பார்த்துக் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை