உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நடிகைகள் மீதான பாலியல் வன்கொடுமை வழக்கு; விசாரணையை கைவிடுவதாக நீதிமன்றத்தில் சிறப்பு குழு தகவல்

நடிகைகள் மீதான பாலியல் வன்கொடுமை வழக்கு; விசாரணையை கைவிடுவதாக நீதிமன்றத்தில் சிறப்பு குழு தகவல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருவனந்தபுரம்: மலையாள திரையுலகை உலுக்கிய நடிகைகள் மீதான பாலியல் வன்கொடுமை குறித்து பதிவு செய்யப்பட்ட 35 வழக்குகளின் விசாரணையை கைவிடுவதாக கேரள உயர்நீதிமன்றத்தில் சிறப்பு விசாரணை குழு தெரிவித்துள்ளது. கடந்த 2017ம் ஆண்டு மலையாள சினிமாவின் முன்னணி நடிகை கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த வழக்கில் முன்னணி நடிகர் திலீப் உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு நடந்து வருகிறது. இதை தொடர்ந்து மலையாள சினிமாவில் நடிகைகள் மற்றும் பெண் தொழில்நுட்ப கலைஞர்கள் சந்திக்கும் பாலியல் பிரச்சினைகள் குறித்து விசாரித்து, அறிக்கை வழங்க நீதிபதி ஹேமா தலைமையிலான கமிஷன் ஒன்றை கேரள அரசு நியமித்தது. இந்த குழு தனது அறிக்கையை 2019ம் ஆண்டு டிசம்பரில் சமர்ப்பித்தது. அந்த அறிக்கையில் பல்வேறு முக்கிய நடிகர்களின் பெயர்கள் இடம்பெற்றிருப்பதாக கூறப்பட்ட நிலையில், அது குறித்து ஆய்வு செய்ய சிறப்பு விசாரணை குழுவை நியமித்து கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், இது தொடர்பான வழக்கு நீதிபதிகள் ஏ.கே. ஜெயசங்கரன் நம்பியார் மற்றும் சி.எஸ். சுதா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஹேமா கமிட்டி பரிந்துரைகளின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட 35 வழக்குகளிலும் எந்தவித மேல் நடவடிக்கைகளும் எடுக்கப்படாது என்று சிறப்பு விசாரணை குழு தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் யாரும் புகார் குறித்து ஆர்வம் காட்ட முன்வராததே காரணம் என்று விளக்கம் அளித்துள்ளது. இதையடுத்து, வழக்கு விசாரணையை ஆக.,13ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திரைத்துறையில் நடிகைகள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாவது மற்றும் பாதுகாப்பு பிரச்னைகள் குறித்து ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் சிறப்பு கூட்டம் நடத்தப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

Padmasridharan
ஜூன் 27, 2025 11:54

பிடிச்சுதானே நடிக்க வராங்க.


அப்பாவி
ஜூன் 27, 2025 08:33

தேவையில்லாம ஒரு வழக்கு. புகார் குடுத்தா நடிகைகளுக்கு மானமும் போய், மார்க்கெட் போய், வாழ்க்கையும் போயிடும்.


pmsamy
ஜூன் 27, 2025 07:53

நீதிபதிகளும் ஆசைகள் உள்ள மனிதர்கள் தானே அவர்களை வசியப்படுத்த எவ்வளவு நேரம் ஆகும் நல்ல முடிவுதான். நீதிபதிகள் பாடு குஷி தான்


சிந்தனை
ஜூன் 26, 2025 20:50

வழக்கு விசாரணைகளை கைவிடுவதற்கு பல பதிலாக வழக்கம்போல தள்ளி வைத்துக் கொண்டே இருக்கலாம் அப்பொழுதுதான் நீதிபதிகளுக்கு வேலை இருக்கும் சம்பளம் கிடைக்கும் எல்லாவற்றையும் இப்படி தள்ளுபடி செய்தல் வேலை இல்லாமல் போய்விடும் சம்பளம் வாங்க முடியாதே...


அசோகன்
ஜூன் 26, 2025 17:56

இந்த நீதிபதிகளின் வீட்டில் தீப்பிடித்தால் பல கட்டு கட்டுகட்டான பணம் டெல்லியை போல எரியலாம்....... பாதிக்கப்பட்ட பெண்களை முற்சந்தியில் நிறுத்தி மக்களுக்கு கட்டுவதும் கற்பழித்தவனை பத்திரமாக முக மூடி போட்டு கூட்டிச்செல்வதும்... என்ன கேடுகெட்டத்தனம்....... சாட்சிக்கு வரவில்லை என்றால் அந்த பெண்கள் இன்னும் பல மடங்கு துன்பத்திற்கு உட்படுத்தியிருப்பார்கள்


ஆரூர் ரங்
ஜூன் 26, 2025 16:45

ஆயிரம் ஆதாரங்கள் இருந்தும் திலீப் இன்றும் ஜாலியாக வெளியில் இருக்கிறார். அப்படியிருக்க யார் தைரியமாக வழக்குப் போட முன்வருவர்? ஹீரோக்களின் அதிகார பலத்தின் முன் சாதாரண நடிகைகள் என்னாவர் ?.


Bahurudeen Ali Ahamed
ஜூன் 26, 2025 15:26

சரியான நடவடிக்கைதான் பாலியல் வன்கொடுமை என்பது என்ன? அனுமதியின்றி பாலியல் நடவடிக்கையில் ஈடுபட்டால் அதை பாலியல் வன்கொடுமை என்று கூறலாம் அதைவிடுத்து எதையோ பெறுவதற்காக பாலியலில் ஈடுபட்டு அந்த எதிர்பார்ப்பு நிறைவேறாமலோ அல்லது அந்த நபரின் தேவையில்லாமல் ஜெயிக்கமுடியும் என்ற நிலைவரும்போது பாலியல் வன்கொடுமையென்று வழக்குத்தொடுப்பதை நீதிமன்றம் ஏற்கக்கூடாது சம்பவம் நடைபெற்று பலவருடங்கள் கழித்து வழக்கு தொடுப்பதன் மர்மம் என்ன?


Raj S
ஜூன் 27, 2025 00:57

தலைவலி தனக்கு வந்தால் தெரியும்னு சொல்லுவாங்க... கண்டிப்பாக பெற வேண்டிய நிலையில் இருக்கும் பல பெண்கள் சினிமா துறையில் வாடி வதங்கிக்கொண்டு இருக்காங்க... ஓர் அளவு மேல்தட்டில் இருக்கும் இந்த நடிகைகளினாலே ஒன்னும் பண்ண முடியலைன்னா, கீழ்தட்டில் இருக்கும் பெண்கள் அந்த துறைல என்ன பண்ண முடியும்??


Rajan A
ஜூன் 26, 2025 14:11

கமிஷன் கரெக்டா போச்சு


GMM
ஜூன் 26, 2025 13:54

நாட்டில் இலவச வழக்கை கைவிட்டு, வழக்கு செலவுகளை சம்பந்தபட்ட அனைவருக்கும் ஏற்க விதிமுறைகள் வேண்டும். வெட்டி வழக்குகள் அதிகரித்து விட்டன. வாய்தா கேட்டால், அடுத்த செலவை கேட்பவர் ஏற்க வேண்டும். நிர்வாகம், கல்வி, மருத்துவம், போலீஸ் பாதுகாப்பு, வழக்கு எல்லாம் இலவசம். பாதுகாப்பு, அபிவிருத்தி.. அத்தியாவசியம். எப்படி நாடு செலவுகளை தாங்கும்.?


Ramesh Sargam
ஜூன் 26, 2025 12:51

பாதிக்கப்பட்டவர்கள் யாரும் புகார் குறித்து ஆர்வம் காட்ட ஏன் முன்வரவில்லை? சமரசம் செய்துகொண்டுவிட்டார்களா வன்கொடுமை செய்தவர்களிடம்? வெட்கமா இல்லை உங்களுக்கு? உங்களைப்பார்த்து சமுதாயமும் சீரழிகிறது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை