உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பீஹாருக்கு சிறப்பு அந்தஸ்து: "நோ" சொல்லிவிட்டது மத்திய அரசு

பீஹாருக்கு சிறப்பு அந்தஸ்து: "நோ" சொல்லிவிட்டது மத்திய அரசு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பீஹாருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க பா.ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணி அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. மத்தியில் ஆட்சி அமைக்க, பா.ஜ., தனிப் பெரும்பான்மை பெறாத நிலையில், முதல்வர் நிதீஷ் குமாரின் ஆதரவு, அக்கட்சிக்கு தவிர்க்க முடியாதது. இதன்படி, பிரதமர் மோடியின் அமைச்சரவையில், ஐக்கிய ஜனதா தளத்துக்கு உரிய இடம் அளிக்கப்பட்டுள்ளது. எனினும், பீஹாருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற பழைய கோரிக்கையை, அக்கட்சி மீண்டும் வலியுறுத்தி வருகிறது.இது குறித்து, லோக்சபாவில் நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி கூறியதாவது: பீஹாருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவற்கான முகாந்திரம் இல்லை. கடந்த காலங்களில் சில குறிப்பிட்ட மாநிலங்களின் பல அம்சங்கள் கருத்தில் கொண்டு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டது. கரடுமுரடான மலைப்பகுதி, எல்லைப்புற மாநிலம் போன்ற காரணத்தால் சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டன. இவ்வாறு அவர் கூறினார். 2012ல் பல்துறை அமைச்சர்கள் குழு அளித்த அறிக்கையை மேற்கோள்காட்டி, பீஹாருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

Subash BV
ஜூலை 23, 2024 18:17

THEY ARE GIVING SPECIAL PACKAGES


venugopal s
ஜூலை 23, 2024 08:13

சிறப்பு அந்தஸ்து இல்லாவிட்டால் என்ன? மத்திய அரசின் நிதி ஒதுக்கீட்டை இன்னும் கொஞ்சம் அதிகப்படுத்தி விட்டால் போதும், நிதிஷ்குமார் அமைதியாகி விடுவார்!


Barakat Ali
ஜூலை 22, 2024 20:43

நிதிஷின் பாதம் பணிந்து கோரிக்கையை ஏற்பார் என்று திராவிடியாஸ் சொல்லிக்கொண்டு இருந்தனர் ....


கனோஜ் ஆங்ரே
ஜூலை 22, 2024 20:03

இதுக்கு நிதிசுக்கு நான் சொல்ற ஒரே பதில் வடிவேல் காமெடி வசனம்தான்.. “அடேய்... சோனமுத்தா... போச்சா, ரெண்டு காசும் கொய்யுன்னு கேக்குமே... போச்சா...”.ன்னு. நான் அன்னைக்கே சொன்னேன்... இவனுங்கள நம்பாத... நீச்சல் தெரியாத உன்ன, ஆற்றின் நடுவில் கூட்டிட்டு போய்... நட்ட நடு ஆத்துல தள்ளிடுவானுங்க...ன்னு. கேட்டியா, சோனமுத்தா... இப்ப போச்சா...?


Mohanakrishnan
ஜூலை 22, 2024 22:13

2014 வரை ஏன் புடுங்கவில்லை


Kumar Kumzi
ஜூலை 23, 2024 01:21

ஓசிகோட்டர் பரம்பரை கொத்தடிமை கூமுட்டை இன்னும் சவுண்டா ஊளையிடனும்


கனோஜ் ஆங்ரே
ஜூலை 23, 2024 12:23

குமிழி குமார் சார்... இது என்ன, இன்னும் ஸ்பெஷல் அயிட்டம் இருக்கு...? வரும் பாருங்க..? வாழ்க்கையின் தத்துவத்தை எந்த கொம்பனாலும் விளங்கி கொள்ள முடியாது... அது வகுக்கும் பாதை... நேராகவே இருக்கும்னு நினைச்சீங்கன்னா, உங்கள மாதிரி கிறுக்கனுங்க எவனும் இல்ல.... கொஞ்சநாள் பொறுங்க.. இயற்கை தன் வேலையை காட்டும்... “ராணுவத்துல அழிஞ்சவனவிட... ஆணவத்துல அழிஞ்சவன்தான் அதிகம்”...?


Ganesh Subbarao
ஜூலை 25, 2024 12:08

ஆணவத்தில் ஆடிக்கொண்டிருப்பது இந்த கோபாலபுரம் குடும்பம்தான்


Ram
ஜூலை 22, 2024 19:10

இவனுங்களுக்கு எதுக்கு சிறப்பு அந்தஸ்து , ஏற்கனவே எல்லாத்துலயும் காப்பியடிச்சு எல்லா அரசு வேலைகளிலும் இவனுக இருக்காங்க


Easwar Kamal
ஜூலை 22, 2024 18:29

அப்படியே இந்த ஆந்திர பய புள்ளைகளுக்கும் NO சொல்லிடுங்கோ. தெலுங்கானா கூட பரவ இல்லை. இந்த ஆந்திர கொல்டி ஒவ்வரு அரசும் வந்து கடன் மேல கடன் வாங்குவானுங்க அதை அப்படியே ஒன்றியம் திருப்ப கொடுக்கணும். இதுல துணை முதல்வர் வேற. ஆட்சி செய்ய வக்கு இல்லாட்டி நம்ம அக்காவை governer பதவி கொடுத்த கூட நல்ல ஆட்சி சேயும்.


அப்புசாமி
ஜூலை 22, 2024 17:15

கேஷ் வேணும்னா குடுக்கறோம். அந்தஸ்து, மரியாதையெல்லாம் கிடையாது. வேணும்னா அவிங்களோட சேந்து பிரதமராயிடுங்க.


RAAJ68
ஜூலை 22, 2024 17:13

அவ்வளவுதான் போங்க நிதீஷ் குமார் ஆதரவை விளக்கிக் கொள்வார் ஆட்சிக் கவிழ்ந்துவிடும் காங்கிரஸ் தலைமையில் புதிய ஆட்சி அமைக்கப்படும் தற்போது பிகாரருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என்று ராகுல் காந்தி கூறுவார்


Senthoora
ஜூலை 22, 2024 17:25

அதுதான் அரசியல், உண்மையும். தோள்கொடுத்தவரை, எட்டி உதைத்தாள், முதலுக்கே மோசம்.


Sathyanarayanan Sathyasekaren
ஜூலை 22, 2024 18:50

செந்தூர உன்னோட கொத்தடிமைமூளைக்கு இது எல்லாம் புரியாத விஷயம், சீக்கிரம் போ.


sundarsvpr
ஜூலை 22, 2024 17:13

சிறப்பு அளிக்காதது பெரிய இழப்பு அல்ல. தேசத்தில் பிஹார் குஜராத் மாநிலங்களில் சாராய விற்பனை வருமானம் இல்லை. இது நாட்டின் பாரம்பரிய சிறப்புதான். எவ்வாறு என்றால் பல்லாயிர குடும்பங்களில் நிம்மதி உள்ளது. இதுதான் ஆத்மார்த்த சிறப்பு.


கனோஜ் ஆங்ரே
ஜூலை 22, 2024 19:59

///பிஹார் குஜராத் மாநிலங்களில் சாராய விற்பனை வருமானம் இல்லை./// ஆமாம், நீ நியுஸ்பேப்பர் படிக்குறதே இல்லையா...? இல்ல... கோமாவுல இருந்தியா...? கள்ளச்சாராயம் வழிந்தோடுவது இந்த இரு மாநிலத்துல... அதுமட்டுமா... போதை பொருள் கடத்தல் நாட்டிலேயே குஜராத், பிகார்..லதான் அதிகமா நடக்குது... அங்க இருந்துதான் மற்ற மாநிலத்துக்கு கடத்தப்படுகிறது... அதுமட்டுமா... “நீட்” தேர்வு மோடி, ஆள்மாறாட்டம், தேர்வில் ஆள்மாறாட்டம், படிக்காமலேயே டிகிரி வாங்குவது என இந்தியாவில் நடக்கும் மோடிகளின் “ஹோல்சேல் ஏஜெண்ட்”டுகள் அதிகம் உள்ள மாநிலமே குஜராத், பிகார்..தான்... அத்துடன் இந்தியாவில் நடக்கும் அதிக நகைகடை கொள்ளை, நகை திருட்டு, ஏடிஎம் சென்டர் கொள்ளை, வங்கி கொள்ளை செய்பவர்கள் பெரும்பாலானவர்கள் பிகாரிகள்... அதுனால சாராய விற்பனை வருமானம் இல்லென்னு ரொம்ப கவலைபடாத...


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை