உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மங்களூருக்கு சிறப்பு ரயில்கள்

மங்களூருக்கு சிறப்பு ரயில்கள்

பெங்களூரு: கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு யஷ்வந்த்பூர் - மங்களுரு இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.எண்: 06505 என்ற ரயில், வரும் 23, 27 ஆகிய தேதிகளில் இரவு 11.55 மணிக்கு யஷ்வந்த்பூரிலிருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 11:45 மணிக்கு மங்களூரு சென்றடையும்.எண்: 06506 என்ற ரயில், மங்களூரிலிருந்து வரும் 24, 28 ஆகிய தேதிகளில், மதியம் 1:00 மணிக்கு புறப்பட்டு அன்றைய தினம் இரவு 10:30 மணிக்கு யஷ்வந்த்பூர் வந்தடையும்.குனிகல், சென்னராயப்பட்னா, ஹாசன், சக்லேஸ்பூர், சுப்ரமண்யா, புத்துார், பன்ட்வால் ஆகிய நிலையங்களில் நின்று செல்லும் என, தென்மேற்கு ரயில்வே அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை