உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / விமானத்தில் ஏசி இல்லாமல் ஒரு மணி நேரம் வெயிலில் அவதிப்பட்ட பயணிகள்

விமானத்தில் ஏசி இல்லாமல் ஒரு மணி நேரம் வெயிலில் அவதிப்பட்ட பயணிகள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: டில்லியில் இருந்து கிளம்ப வேண்டிய ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் ஏசி போடாததால், பயணிகள் ஒரு மணி நேரம் கடும் வெயிலில் அவதிப்பட்டனர். தங்கள் கைகளில் இருந்த புத்தகங்களை வைத்து விசிறி கொண்டனர்.வட மாநிலங்களில் கடும் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. ஒரு சில இடங்களில் வெப்ப அலை வீசுவதால், மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். அதில் தேசியத் தலைநகர் டில்லியும் அடங்கும். இங்கும் மக்களை வெயில் வாட்டி வதைத்து வருகிறது.இந்நிலையில், டில்லியில் இருந்து பீஹாரின் தர்பங்கா என்ற நகருக்கு ஸ்பைஸ்ஜெட் விமானம் செல்லவிருந்தது. பயணிகள் அனைவரும் ஏறி அமர்ந்த நிலையில், ஒரு மணி நேரம் கடந்தும் விமானம் கிளம்பவில்லை. அதேநேரத்தில் ஏசியும் இயக்கப்படவில்லை. இதனால், விமானத்தில் அமர்ந்து இருந்த பயணிகள் சிரமத்திற்குள்ளாகினர். வியர்வையில் நனைந்தபடி இருந்த அவர்கள், தங்கள் கைகளில் இருந்த புத்தகத்தையே விசிறியாக மாற்றி வீசிக் கொண்டனர். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. நெட்டிசன்கள், விமான நிறுவனத்தை கண்டபடி திட்டி தீர்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

sankaranarayanan
ஜூன் 19, 2024 21:16

இந்த விமானம் சாதாரண - செகண்ட் க்ளாஸ் - வகுப்பை சேர்ந்ததாக இருக்குமோ என்று தெரியவில்லை ரயிலில் ஏ.சி. வகுப்பில் செல்வதுபோல விமானத்திலும் இனிமேல் ஏ.சி. வகுப்பு விமானம் ஏ.சி. இல்லாமல் சாதாரண இரண்டாம் வகுப்பு விமானம் என்று இரண்டு வகைகள் விமானம் இருக்குமோ என்று தெரியவில்லை


Ramesh Sargam
ஜூன் 19, 2024 21:12

நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து நிவாரணம் கேட்கலாம்.


Barakat Ali
ஜூன் 19, 2024 19:46

டில்லியில் இருந்து பீஹாரின் தர்பங்கா என்ற நகருக்கு ஸ்பைஸ்ஜெட் விமானம் தயா நடத்தி வந்த விமான நிறுவனம் ....... பாஜக 2014 இல் ஆட்சிக்கு வந்தவுடனேயே உஷாரா கைமாத்திட்டாரு பி எஸ் என் எல் இணைப்பு கள்வர் ......


சண்முகம்
ஜூன் 19, 2024 19:08

விமானம் தரையில் இருக்கும் போது ஏசி போட்டால் பறக்க பெட்ரோல் இருக்காது. உயரப் பறந்த பின் (- 10 டிகிரி) பெட்ரோல் அதிகம் குடிக்காது.


Vathsan
ஜூன் 19, 2024 18:45

இருந்த ஒரு அரசு விமான சேவையையும் தனியாருக்கு விற்றல் இப்படித்தான் நடக்கும்.


Senthoora
ஜூன் 19, 2024 17:34

கமிசன் மட்டும் வாங்கி உரிமை வழங்கினால், இப்படித்தான் மக்கள் அவதிப்படணும்.


வல்லரசு
ஜூன் 19, 2024 16:42

எவ்ளோ அடிச்சாலும் தாங்குவோம்டா..வல்லரசுடா... இன்னும் கிராமத்துக்கு ஒரு ஏர்போர்ட் கொண்டாரப்.போறோம்டா. கேரண்டிடா.


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை